இடுகைகள்

பெட்ரோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் வரியின் நோக்கம்!

      கார்பன் வரியின் நோக்கம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா? அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்ற...

இந்தியாவை மோசடி செய்யும் தொழிலதிபரை பழிவாங்கும் காவல்துறை அதிகாரி!

படம்
          புலன் விசாரணை -2 பிரசாந்த் ஆர் கே செல்வமணி இந்தியாவின் கடல் பரப்பில் பெட்ரோல் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். மதிப்பு இரண்டு லட்சம் கோடி. ராகேஷ் கேத்தன் என்ற அதானி போன்ற மோசடி செய்யும் தொழிலதிபர், இந்த செய்தியைக் கேள்விப்பட்டு இந்திய பெட்ரோலிய நிறுவனத்திற்கு லஞ்சம் கொடுத்து ஆராய்ச்சி தகவல்களை வெளியே வராமல் பார்த்துக்கொள்கிறார். ஆராய்ச்சி செய்த இடத்தையும் வாங்கிவிடுகிறார். இதுபற்றிய தகவல் அறிந்த பொறியாளர்கள் குழுவை, டூர் அழைத்து சென்று வழியிலேயே படுகொலை செய்கிறார்கள். அதை விபத்துபோல செட்டப் செய்கிறார்கள். அதில் ஒரு இளம்பெண் மட்டும் தப்பித்து வந்து சென்னை மாநகரின் மத்தியில் மஞ்சள் சேலை கட்டி வந்து சாகும்போதும் கூட கவர்ச்சியாக வசீகரமாக செத்துப்போகிறார். அங்கு நாயகன் சபாநாயகம் இருக்கிறார். அவர் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்க நிறைய மர்மங்கள் வெளியே வருகின்றன. இதற்கு பதிலடியாக தனது ஒட்டுமொத்த குடும்பத்தை பலிகொடுக்கிறார். அதையெல்லாம் தாண்டி மண்ணையும், மக்களையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இறுதிக்காட்சி. கதை பெரிய பட்ஜெட்டில் நன்றாக எடுக்கப்பட வேண்டியது. ...

ஆராய்ச்சியாளர்களின் பிணங்களைத் திருடி அழிவு சக்தியாக்கும் சதிகாரக்கூட்டம்!

படம்
            லாரன்ஸ் மற்றும் டேவிட் மிரட்டும் திகிலூட்டும் நிமிடங்கள் லயன் காமிக்ஸ் நன்றி -ஆர்எம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் கதை. அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஆராய்ச்சி செய்பவருடன் லாரன்ஸ் அண்ட் டேவிட் ஆகிய இருவரும் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கிறார்கள். அப்போது ஒருநாள் காட்டு வாத்து வேட்டைக்காக செல்கிறார்கள். அங்கு, ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். இறந்த அடுத்தநாளே அழைக்காமல் இருவர் வந்து சவப்பெட்டி செய்பவர்கள் என்று கூறி உடலை அடக்கம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். இது லாரன்ஸ், டேவிட்டிற்கு சந்தேகத்தை தருகிறது. பிறகு, உடலை ஆராய்ச்சியாளரின் கடைசி ஆசைப்படி அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் ஜீப்பின் பிரேக் பிடிக்காமல் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில், லாரன்ஸ் டேவிட் அடிபட்டு மயக்கமாகிறார்கள். சவப்பெட்டிக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய விபத்தில் எப்படி சவப்பெட்டி அப்படியே இருக்கும் என்று திறந்து பார்த்தால் அதில் செங்கற்கள் இருக்கிறது. ஆராய்ச்சியாளரின் உடலைக் காணவில்லை. இரு புலனாய்...

சூழலுக்கு உகந்த விவசாயத்தை கையில் எடுத்து சாதித்த கியூபா!

படம்
பசுமை சூழலை உருவாக்க அதுதொடர்பான ஸ்டார்ட்அப்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தேவை. அவை வளரும்போதுதான், அதைச் சார்ந்த வணிகமும் உருவாகும். மக்களும் அதன் பயனை உணர்வார்கள். இப்படியான மாற்றம் பலவந்தமாக இல்லாமல் இயல்பாக மடைமாறுவது நடக்கும். அரசு கட்டமைப்பு அளவில் பொதுப்போக்குவரத்தில் முதலீடு செய்து அதை பரவலாக்க வேண்டும். அலுவலகத்திற்கு காரில் அல்லது பைக்கில் செல்கிறீர்கள். என்ன காரணம், நேரத்திற்கு பேருந்தோ, ரயிலோ கிடைக்காததுதான். அலுவலகத்திற்கு அருகிலேயே செல்லும்படியாக ரயில் வசதி இருந்தால், கார், பைக்கில் முதலீடு செய்யவேண்டியதில்லைதானே? காய்கறிகளை நாமாகவே உற்பத்திசெய்துகொள்வதோடு பள்ளி, கல்லூரிகளையும் உருவாக்கிக்கொண்டால் ஆற்றல் அதிகம் தேவைப்படாது. தூய ஆற்றல் ஆதாரங்களே போதுமானது. அடிப்படையில் ஆற்றலை செலவழிப்பதில் சிக்கனம் தேவை. 1990ஆம் ஆண்டில் கியூபாவிற்கு சோவியத் யூனியன் அளித்து வந்த எரிபொருட்கள் குறைந்துவிட்டன. எனவே, அதைத் தவிர்த்து பொருளாதாரத்தை இயக்க முயன்றனர். பொதுப்போக்குவரத்தில் அரசு முதலீடு செய்தது. மண்புழு உரத்தை தயாரித்து விவசாயத்திற்கு பயன்படுத்த ஊக்கம் கொடுத்தது. தூய ஆற்றல் ஆதாரங்க...

சூழல் மாநாடுகளை இயக்கும் பெட்ரோலிய, நிலக்கரி பெருநிறுவனங்கள் - மாறாத கொள்கைகள், அபகரிக்கப்படும் பழங்குடிகளின் நிலங்கள்

படம்
சூழல் மாநாடுகளை கவனித்தால், அதில் பங்கேற்பவர்கள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சூழல் ஆர்வலர்கள் என இருப்பார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருந்து அனைத்தையும் இயக்குவது, பெருநிறுவனங்கள்தான். எனவே, மாநாடுகளில் எடுக்கும் முடிவுகள் வணிகத்தை பாதிக்காதவாறு மாற்றிக்கொள்கிறார்கள். சூழலைக் காப்பது பற்றி பேசினால், பொருளாதார வளர்ச்சி ஏழைகளின் வாழ்வை மாற்றியமைக்கும் என அதை மறுத்து பேசுகிறார்கள். ஏழை மக்களின் வறுமை, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி என்ற லேபிள்களின் பின்னணியில் பெரு நிறுவனங்களின் லாபவெறி மட்டுமே உள்ளது. போட்ட முதலீடுகளுக்கு குறையாத லாபம் வரவேண்டும். அதை சூழல் கட்டுப்பாடுகளுக்கு இசைந்து குறைத்துக்கொள்ள மனம் வரமாட்டேன்கிறது என்பதே உண்மை. காலநிலை மாற்ற மாநாடு நடக்கும் இடங்களுக்கு வெளியில் இளைஞர்கள், சூழல் ஆர்வலர்கள் உலக நாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பலருக்கும் பழகிவிட்டது. சூழல் பிரச்னைகள் மேற்கு நாடுகளில் எண்பதுகளிலேயே தொடங்கிவிட்டன. அப்போதே அதை சரிசெய்யவேண்டும் என கூறத் தொடங்கிவிட்டனர். சூழல் மேம்பாட்டிற்கான வணிக கௌன்சில் என்ற உலகளாவிய அமைப்பு இயங்கி வருகிறது. இதில், உள்ள அ...

கார்பன் டை ஆக்சைடு, பயிர்களுக்கு நல்லது - நச்சு பிரசாரம் செய்யும் வலதுசாரி பெருநிறுவனங்களும், கைக்கூலி சிந்தனை அமைப்புகளும்

படம்
சமூக பகிரலுக்கு எடுத்துக்காட்டு, நூலகம். இன்று தமிழ்நாட்டிலுள்ள பல நல்ல நூலகங்கள் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான பயிற்சிக்கழகமாக மாறிவிட்டது. ஆனால், முன்னர் ஏராளமான நல்ல நூல்களுக்கான உறைவிடமாக இருந்தது. தனிநபராக ஒருவர் புத்தக திருவிழா அல்லது நூல் கடைக்குச் சென்று எதையும் வாங்க வேண்டியதில்லை. நூலகத்தில் அரசு நூல்களை வாங்கி வைத்திருக்கும். அதை ஒருவர் இலவசமாக அணுகி படிக்கலாம். வீட்டில் எடுத்து வந்து படிக்க காசு கட்டவேண்டும். இதன்மூலம் நிறைய நூல்களை வாங்கவேண்டிய தேவை இல்லை. சூழல் சார்ந்து அனுகூலங்கள் அதிகம். காகிதம் தயாரிக்க மரங்களை வெட்டி கூழாக்கவேண்டியதில்லை. மாசுபாடும் குறையும். கார் பூல் எனும் ஒரு காரை நிறைய பயணிகள் பகிர்ந்துகொண்டு பயணிப்பதைக் கூட சமூக பகிரலில் சேர்க்கலாம். சூழல் சோசலிசம் தனிநபர் உடைமையை எதிர்க்கவில்லை. வீணாக்குதலை தவிர்க்க கோருகிறது. இயற்கை வளம் சேதப்படுத்துதலை தடுக்க முயல்கிறது. பொருளாதார வளர்ச்சி நிச்சயம் நாட்டிற்கு தேவை. ஆனால், அதற்கான வழி இயற்கைச்சூழலை குறைந்தளவு பாதிப்பதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அதை ஈடுகட்ட முடியாது. இயற்கை வளம் அழிப்பு சார்ந்த விஷயங்களை ச...

எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ

படம்
 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே?  உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான ச...

காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு

படம்
  காடே எங்கள் வாழ்வு - வனமே எங்கள் வீடு ஐரோப்பிய நாட்டினர், அமேசான் காட்டுக்குள் நுழைந்ததற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்கம், மற்றொன்று அதிகாரம். வெளியே இருந்து வந்த அந்நியர்கள், காட்டில் வாழ்ந்த பழங்குடி மக்களுக்கு நோய்களைக் கொண்டு வந்தனர். அதையும் தாங்கி நின்று எதிர்த்தவர்களை நவீன ஆயுதங்களால் படுகொலை செய்தனர்.  இதன் காரணமாகவே, ஆங்கிலேயர்களின் அனைத்து புனைகதைகளிலும் காடுகள் ஆபத்து நிறைந்தவையாகவே உள்ளன. அவர்களைப் பற்றிய உண்மையை அறிந்தபோது அதில் எனக்கு ஆச்சரியம் ஏதும் தோன்றவில்லை.  கட்டற்ற தொழில்மயமாக்கல் சூழலை மாசுபடுத்தி மக்கள் வாழ முடியாத வகையில் நச்சாக்குகிறது. அமேசான் காடுகளை எரிப்பது, திரும்ப பெற முடியாத இழப்பை ஏற்படுத்துகிறது. கட்டுப்படுத்த முடியாத வகையில் வெப்பம் அதிகரித்து வருவது, பூமியின் இயல்பான வாழ்வை அழிக்கிறது.  தாய்மண்ணை யாராலும் காப்பாற்ற முடியாது. அவளைக் காப்பாற்ற நானோ, நீங்களோ கூட தேவையில்லைதான். அவளுக்கு வேண்டியது மரியாதை. அதைத் தராத மனிதகுலத்தை அவளால் பழிதீர்த்துக்கொள்ள முடியும். காலம்தோறும் அரசு, தொழில்துறையினர் தாய்மண்ணுக்கு குறைந்தபட்ச மரிய...

2015ஆம் ஆண்டு சூழல் ஒப்பந்தம் மீறப்பட்டால் என்ன விளைவுகளை சந்திக்க நேரும்?.....

படம்
  2015ஆம் ஆண்டு பாரிஸ் சூழல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்குப் பிறகு எட்டாண்டுகள் கழிந்துள்ள நிலையில், என்னென்ன மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் என வரையறை செய்துகொண்டு நாடுகள் முயற்சிகளை செய்தன. ஆனால், காலப்போக்கில் பெருநிறுவனங்கள் கார்பன் வெளியீடு பற்றி கண்டுகொள்ளாமல் தங்களுடைய வருமானம் எந்தளவு பெருகியுள்ளது. பங்குச்சந்தையில் பங்கு விலை அதிகரித்துள்ளது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். அரசும் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.  திரைப்படத்தின் வருமானம் என்பதைவிட அதைப்பற்றிய கருத்தியல் ரீதியான விமர்சனமே முக்கியம். ஆனால் இன்று மோசமான படம் கூட வருமான சாதனை செய்கிறது. அதை வைத்தே படத்தின் கருத்து சரியில்லை என்று கூறுபவர்கள் மீது வழக்கு தொடங்குகிறார்கள். அவர்களின் பதிவுகளை நீக்க முயல்கிறார்கள். உலகம் முழுவதும் வலதுசாரி தலைவர்கள் ஆட்சியில் அமர்ந்தபிறகே, மாசுபாடு, கார்பன் வெளியீடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இத்தலைவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான நிதிகளை அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவருகிறார்கள். போராளிகளை சிறையில் அடைத்து வருகி...

2021 முக்கியமான டேட்டாக்கள்!

படம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் பாராலிம்பிக்ஸிலும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 முதல் 19 ஆகும். இதுதான் இந்தியாவில் ஆல்டைம் அதிக எண்ணிக்கை கூட. இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. பத்தாண்டுகளில் இதுவே அதிக அளவு ஆகும். இலங்கை பாடகியான யோகானி தனது மணிகே மகே பாடலுக்கு 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளார். இலங்கை பாடகருக்கு இதுவே அதிகபட்ச பார்வையாகும். கடந்த செப் - ஜூலையில் 50 சதவீத எஸ்யூவி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப்பிறகுதான் செடான், ஹாட்ச்பேக் கார்கள் எல்லாம். தலைவன் எஸ்யூவிதான். பயணிகள் அதிகம் பயணிப்பதற்கான வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. ஸ்டேன்சாமி. கிறிஸ்தவர் என்பதால் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் குற்றுயிராக ஆக்கப்பட்டவர். 84 வயதில் அவரை ஒன்றிய அரசு சிறைவைத்து சித்திரவதை செய்து கொன்றது. இந்த வயதில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான வேதனையான பெருமை ஸ்டேன்சாமிக்கே சொந்தம். இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற பெருமையை இடதுசாரி அரசு கேரளத்தில் பெற்றுள்ளது. அங்...

மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

படம்
        1. உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும் . ரியல் : 1980 களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள் , காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள் . உண்மையில் பனி , வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது . உயர் ரத்த அழுத்தம் , மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது . சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும் . இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர் . ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் . உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை . 2 . பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு . ரியல் : சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது . இந்த ஒலிகள் இரண்டு , மூன்று நாட்கள் ஒலித்திரு...

பசுமை சக்தியில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
பசுமை சக்தி உலகம் முழுக்க ஹைட்ரஜன் வாகனங்கள், மின் வாகனங்கள் என போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவிலும் அதுதொடர்பான சட்டங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாம் பெட்ரோல் டீசல் என ஊற்றி ஓட்டினாலும் வருங்காலம் என்பது ஹைட்ரஜன், லித்தியன் அயன் பேட்டரி வண்டிகளாகவே இருக்கும் என்பது உறுதி. அத்துறை சார்ந்த நிறுவனங்களும் இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் சந்தையை விட்டுவிடாது. தற்போது வரை உலகளவில் அதிகளவு கார்பன் வெளியிடும் நாடுகளில் சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. அதுபற்றி சில தகவல்களைப் பார்ப்போம். 2030க்குள் தனது கார்பன் வெளியீட்டு அளவை பெருமளவு குறைத்துக்கொள்வதாக இந்தியா கூறியுள்ளது. எவ்வளவு தெரியுமா 30-35 சதவீதம். தொண்ணூறுகளிலிருந்து 2015 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வெளியேறிய கார்பன் அளவு 147 சதவீதம் என்கிறது சூழல் அமைப்புகளின் அறிக்கை. உலகளவில் இந்தியா வெளியேற்றும் கார்பன் அளவு 6.55 சதவீதம்தான். தனிநபர் வெளியேற்றும் கார்பன் அளவில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் ஆயிரம் ஜிகாவாட் மின்சாரம் மூலம் 250 பே...

பெட்ரோலிய கழிவை அகற்றுமா நுண்ணுயிரிகள்?

ஈராக்கில் பெட்ரோலியக் கழிவுகளை அகற்றி, நிலங்களை தூய்மை செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்த உள்ளனர். ஐ.நா அமைப்பு இதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதனுடன் அரசின் எண்ணெய் நிறுவனம் நார்த் ஆயில் கோவும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இத்திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஐஎஸ் தீவிரவாதிகள் இங்கு போர் புரிந்தபோது பனிரெண்டிற்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தீவைத்து அழித்தனர். இதன் விளைவாக சூரியனின் ஒளியை மக்கள் பார்க்க முடியாதபடி புகை வானை சூழ்ந்தது. ஏறத்தாழ 20 ஆயிரம் டன்கள் கச்சா எண்ணெய் இம்முறையில் வீணாக்கப்பட்டிருக்கலாம் என்கிறது அரசு. எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதில் தவறில்லை. ஆனால் தொழிலால் ஏற்படும் மாசுபாடுகளை சிறிது கவனத்தில் கொள்வது நல்லது. இல்லையெனில் இயற்கை மாசுபாட்டை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் வலீத் ஹூசைன். இவர்தான் ஈராக்கின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர். நன்றி - டவுன் டு எர்த்

மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?

படம்
  மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை,  மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து ...

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப...