இடுகைகள்

கச்சாஎண்ணெய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரியுமா - உயிரி எரிபொருள்

படம்
  pixabay உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள்,  தாவரங்கள், பாசி, விலங்கின்  கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி  ஏற்ற இயற்கை ஆதாரம் என  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில்  உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.  உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும்.  எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.   த

உணவு பாதுகாப்புக்கு ஆபத்தாகும் எத்தனால் உற்பத்தி!

படம்
  உணவுப்பயிர்கள் எரிபொருளாகிறது... இந்திய அரசு எரிபொருளில், எத்தனால் கலக்கும் திட்டத்தை வைத்துள்ளது. தற்போது 8 சதவீதம் கலக்கப்படும் எத்தனாலின் அளவை விரைவில் இருபது சதவீதமாக்க அரசு யோசித்து வருகிறது. அரிசி, சோளம், கரும்பு ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. எத்தனாலை இப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.  எத்தனால் கடந்த ஜூன் மாதம், ஒன்றிய அரசு எத்தனால் உற்பத்தியை ஐந்தே ஆண்டுகளில் இருமடங்காக்க திட்டங்களை வகுத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் எரிபொருளில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டிருக்கும். இதற்காக எத்தனாலை உற்பத்தி செய்ய ஏதுவான பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு நிதியுதவிகளை வழங்கவும், சூழல் தொடர்பான அனுமதியை கொடுக்கவும் தயாராக  இருக்கிறது அரசு. இதன் காரணமாக அரசிடம் உள்ள தானியங்கள் நிறுவனங்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இதனால் இத்தானியங்கள் தேவைப்படும் மக்கள் சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசுக்கு புதிய எத்தனால் திட்டம் மூலம் ஆண்டுக்கு 4 பில்