இடுகைகள்

இடியட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேய்ப்படங்களை கேலி செய்யும் சிரிப்பே வராத படம் - இடியட் - ராம் பாலா

படம்
  இடியட் இயக்குநர் ராம்பாலா மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி செம்மனூர் ஜமீன், அவரது படைத்தளபதிகளால் நயவஞ்சகமாக கொல்லப்படுகிறார். கூடவே அவரது மனைவி, மகன், மகள் என எல்லோரும்தான்.அவர்கள் ஆவியாக வந்து தங்களைக் கொன்றவர்களின் வம்சாவளியை எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதே கதை. படம் பேய்ப்படமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக பேய்ப்படங்களை கிண்டல் செய்வதுதான் படம் நெடுக நடக்கிறது. ஆனால் படத்தில் எந்த காட்சிக்கும் நமக்கு சிரிப்பே வருவதில்லை என்பதுதான் பேரதிர்ச்சி. ராசுக்கவுண்டர், அவரது மகன் சின்ராசு ஆகியோருக்கான உறவு காட்டப்படும்போது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனந்தராஜின் நடிப்பும், மிர்ச்சி சிவாவின் வசனக் காமெடிகளும்தான் முதல் பகுதியில் நம்மைக் காப்பாற்றுகிறது. பிற்பகுதி படம் முழுக்க சேனாபதி மனநல மருத்துவமனையில்தான் நடக்கிறது. இடியட் படம் பேய்ப்படங்களை கிண்டல் செய்கிற படம். எனவே, இது பயமூட்டும் பேய் படமாக உருவாகவில்லை. குறைந்தபட்சம் அப்படி கிண்டல் செய்கிற இயல்பில் பார்வையாளர்கள் சந்தோஷப்பட ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. திரையில் இருவர் இருக்கிறார்கள். எப்போதும் பேசிக்கொண்டே