இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்