அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

 











அறிவியல் எப்படி வேலை செய்கிறது?


அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட்.


கவனித்தல் அல்லது கண்காணித்தல்


அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம். 


இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும். 


ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட்ட வெப்பநிலையில் தாவரங்களின் வளர்ச்சி வேகம் அதிகமாகும். அதற்காக அதிக வெப்பநிலை கொண்ட பல்புகளை எரிய விட்டால் செடி ஒரு நாளில் பூத்துவிடுமா என பேராசைப்படக்கூடாது. ஒரேயடியாக கருகிப்போய்விடும். 


சூப்பர் சிம்பிள் பயாலஜி நூல்

image - pinterest

கருத்துகள்