இடுகைகள்

பகோடா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற