இடுகைகள்

இரான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரான் சிறையில் சூழலியலாளர்கள்

படம்
இரானைச் சேர்ந்த எட்டு சூழலியலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஊழல் புகார்களின் பேரில் கைதானவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.  ஊழல் புகாரின்படி ஒருவருக்கு மரணதண்டனைகூட விதிக்கலாம் என்ற சட்ட விதிதான் பயமுறுத்துகிறது. நிலோஃபர் பயானி, சாம் ராட்ஜபி, ஹவ்மன் ஜோகர், தாஹெர் காட்ரியான், மொராத் தபாஸ், செபைடெ கசானி, அமிர் ஹோசைன் கலேகி, அப்டோல்ரெஸா கௌபயெ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெர்சியன் வைல்டுலைஃப் ஹெரிடேஜ் பவுண்டேஷனில் பணியாற்றி வந்தவர்கள். கடந்த ஆண்டு ஊழல் புகாரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சயீத் இமானி பிப். 2008 ஆம் ஆண்டு சிறையில் இறந்துபோனார்.  ஆசிய சீட்டா புலியைக் காக்கும் முயற்சிக்காகத்தான் இரான் அரசு இப்படி இவர்கள் மீது பாய்ந்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் இரான், கனடா, அமெரிக்காவில் படித்தவர்கள். மேலும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளில் பங்கு பெற்றவர்கள், உறவுகளை வைத்திருப்பவர்கள். அரசு திட்டமிட்டு இயற்கையியலாளர்களை தண்டிப்பதின் மூலம் மனித உரிமையாளர்களை மிரட்ட நினைக்கிறது.