இடுகைகள்

ஒன்றிய அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

படம்
  ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.  ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது.  நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள்.  கட்டுப்பாட்டு மையங்க

2021 இல் இப்படி சொன்னார்கள்! - அரசியல், கிரிக்கெட், தொழில், சமூக வலைத்தளம், மருத்துவம்

படம்
  பிப்ரவரி 1  இப்போது விராட் அணியின் தலைவராக இருக்கிறார். நான் துணைக்கேப்டன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பின்புற இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கிறேன். ரகானே இந்திய கிரிக்கெட் வீரர் மார்ச் 8 இருபது இந்திய நிறுவனங்கள் மட்டுமே நூறுகோடிக்கும் மேல் மதிப்பு கொண்டவையாக உள்ளன. இவர்கள் எப்படி பன்னாட்டு நிறுவனங்களை எதிர்கொண்டு போராட முடியும்? அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? விஜய் சேகர் சர்மா நிறுவனர், இயக்குநர் பேடிஎம் மார்ச் 29 அடையாள அரசியல் இங்கே எப்போதும் உள்ளது. இதில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். மேற்கு வங்கத்தில் தலித்துகள் பங்களிப்பு முக்கியமானது. அவர்களே இம்முறை முக்கியமானவர்கள்.  பிரசாந்த் கிஷோர் அரசியல் நிலைப்பாட்டாளர் ஏப்ரல் 5 மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிக மிக கடினம். இதற்கான கொள்கைகளை வகுத்து கொரோனா விதிகளை மக்கள் பின்பற்றாதபோது என்ன செய்வது என திட்டம் வகுப்பது முக்கியம் ரந்தீப் குலேரிலா எய்ம்ஸ் இயக்குநர் ஏப்ரல் 26 அனைத்து கட்சிகளும் தவறு செய்பவர்கள்தான். நாங்கள் நம்பிக்கையாக உள்ளோம். தீதியின் மீதுள்ள நம

ஊசிமுனை இல்லாத டிஎன்ஏ தடுப்பூசி

படம்
  ஊசிமுனை இல்லாத  டிஎன்ஏ தடுப்பூசி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கெடில்லா நிறுவனமும், ஒன்றிய அரசும் இணைந்து முதல் டிஎன்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த ஊசியின் விலை ரூ.1900. இதை செலுத்தும் கருவியின் விலை ரூ.30 ஆயிரம்.  இதனை அமெரிக்க மருந்து நிறுவனமான பார்மா ஜெட் தயாரித்துள்ளது.  கூர்மையான முனை மூலம் மருந்து உடலினுள் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாக மருந்து உடலினுள் வேகமாக செல்லும். ஊசியே இல்லாத சிரிஞ்ச் கொண்ட கருவியால் 60 சதவீத மருந்தை சேமிக்க முடியும்  என்று கூறுகிறார்கள். இதில் 0.1 மி.லி மருந்து செலவானால் சாதாரண ஊசி மருந்து முறையில் 0.5 மி.லி மருந்து செலவாகிறது.  ஊசி வேண்டாங்க.. மாத்திரையே போதும் என பயந்து ஓடுபவர்களை புதிய முறை ஈர்க்கலாம்.  ஊசிமுனை இல்லாத இஞ்செக்டர் விலை அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க பெருமளவு தடுப்பூசி போடும் திட்டத்தின் பட்ஜெட் அதிகரித்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.  ஊசி இல்லாத இஞ்செக்டர் என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. இதனை 1866ஆம் ஆண்டு கண்டுபிடித்து  பதிவு செய்துவிட்டனர். போலியோ, டைபஸ், அம்மை ஆகிய நோய்களுக்கு இதனை பயன்படுத்தி வந்தனர்.  டிஎன்ஐஇ அரவிந

சாதிரீதியான கணக்கெடுப்பு பயன்களை கொடுக்குமா?

படம்
  மத்திய அரசு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென பீகாரின் நிதிஷ்குமார் குரல் எழுப்பினார். ஆனால் ஒன்றிய அரசு அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டம்பர் 23 அன்று மகாராஷ்டிர அரசு இதுபற்றி வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளது. அதாவது,ஒன்றிய அரசு சாதிரீதியான கணக்கெடுப்பை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர மாநில அரசு கோரியுள்ளது 2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதுபற்றிய தகவல்கள் வெளிப்படையாக மக்களுக்கு அளிக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த ஜனதாதளம் கட்சி ஒன்றிய அரசு தனது முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு ஒடிஷாவின் நவீன் பட்நாயக்கும், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இதனை ஆதரிக்கின்றனர். பாஜக சாதி ரீதியான கணக்கெடுப்பிற்கு முழுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாநில கட்சிகளின் குரல்களை ஆதரிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது.  2011ஆம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதுதொடர்பான விவரங்களை ஏன் தர முடியாது, நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது, சாதிரீதியான கணக்கெடுப்புகளை நடத்துவதற்கான கட்டமைப்பு அரசிடம் இல்

தொடக்க கல்வியில் தடுமாறுகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு தகவல்

படம்
  கல்வியில் பின்தங்கிய மாநிலமாகிறது தமிழ்நாடு- ஒன்றிய அரசு ஆய்வுத் தகவல் ஒன்றிய அரசு அண்மையில் செய்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள எழுபது சதவீத மாநிலங்களில் கல்வியில் தரம் சரியில்லை. மாணவ, மாணவிகள் பின்தங்கியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஒன்றிய அரசு மக்களவையில் சமர்ப்பித்துள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கோவை, மதுரை, திருவள்ளூர், வேலூர் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.   கல்வியை கற்பதில் குறிப்பிட்ட அளவு பாதிப்பு இருக்கலாம். அதை சரியாக சுட்டிக்காட்டாமல் வெறும் எண்களை மட்டுமே வெளியிடுவதில் அர்த்தமில்லை என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.  ஒன்றிய அரசு எப்படி இந்த ஆய்வை செய்துள்ளது? கிராஸ் என்ரோல்மெண்ட் ரேஷியோ எனும் முறையில் புதிய ஆய்வுமுறை செய்யப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மாணவர்கள், பள்ளிகளில் சேர்ந்துள்ள சதவீதத்தை வைத்து இந்த ஆய்வறிக்கையை ஆகஸ்ட் 9 அன்று  கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதன்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதனை கல்வி வல்லுநர்கள் சிலர் எதிர்த்துள்ளனர். பள்ளி க