விபத்தில் சிக்குவதில் முந்துவது ஆணா, பெண்ணா?
அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஆண்கள், பெண்கள் யார் அதிகம் விபத்தில் சிக்குகிறார்கள்? ஆண்களை விட சாலைகளை கடப்பதில் பெண்கள் விவரமானவர்கள். 1980ஆம் ஆண்டு தகவல்படி, ஆண்களே சாலைகளை கடப்பதில் அதிக விபத்துகளில் மாட்டுகிறார்கள் என தெரிய வந்துள்ளது. பதினெட்டு தொடங்கி நாற்பத்தைந்து வயது வரையிலான பிரிவில் பார்த்தாலும் ஆண்களே விபத்தில் அதிகம் சிக்குகிறார்கள். நெருப்பு, நீரில் மூழ்குவது, துப்பாக்கி, வெடிகுண்டு, கீழே விழுவது என அனைத்து விவகாரங்களிலும் ஆண்களே முன்னிலை வகித்து மாட்டிக்கொண்டு காயமடைகிறார்கள் அல்லது இறந்துபோகிறார்கள். புகைப்பிடிப்பதில் உள்ள ஆபத்துகள் என்னென்ன? சினிமா பார்க்கும்போது முகேஷ் விளம்பரத்தை அனைத்து ஆட்களும் பார்க்கிறார்கள்தானே? அப்புறம் என்ன தனியாக ஆபத்துகளை பட்டியலிடுவது? புகைபிடிப்பதால் புற்றுநோய் வருவது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். சிகரெட்டை புகைப்பதால் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் பாதிப்படைகின்றன. பெண்களும் சிகரெட்டை புகைத்து வருகிறார்கள். அவர்களுக்கும் ஆண்களுக்கு நேரும் அனைத்துவித நோய்களும் வரும். கூடுதலாக, கருப்பை ...