இடுகைகள்

மௌனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லவ் அலாரத்தை ஆன் செய்து லவ் மேப்பை அப்டேட் செய்யலாம் - நீங்க ரெடியா?

படம்
  தம்பதிகளுக்கு இடையே மௌனமான பிரிவு உருவாகிறதா? – தீர்வு என்ன? காதலிக்கும்போது ஒருவரைப் பற்றிய பிடித்தது, பிடிக்காதது, என தெரிந்துகொள்பவர்கள் மணமானபிறகு பல்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து காதலை பின்தள்ளிவிடுகிறார்கள். இதற்கு, பெற்றோரைக் கவனிப்பது, குழந்தைகளை வளர்ப்பது என ஏராளமான காரணங்களைக் கூறுகிறார்கள். உண்மையில், கணவன், மனைவி என இருவரும் சற்று முயற்சி எடுத்தால் அவர்களின் மனதிலுள்ள லவ் அலாரத்தை ஒலிக்க வைக்க முடியும். இதற்கு இருவரும் ஒரே சமயத்தில் தங்களை சற்றே மாற்றிக்கொண்டு முன்னே அடியெடுத்து வைக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்…. காதலர்களாக இருந்து கணவன் மனைவியாக மாறியவர்கள் கூட காதல் என்பதை முழுக்க ஒழித்துவிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக ஒரே வீட்டில் ஒரே படுக்கை அறையில் வாழ்வதாக சூழல் மாறிவருகிறது. இதற்கு பரபரப்பான வாழ்க்கை முறை காரணம் என்று மட்டும் காரணம் சொல்லி தப்பிவிட முடியாது. இந்த பரபரப்பிலும் அவரவருக்கு பிடித்த விஷயங்களை விடாமல் செய்துகொண்டுதானே இருக்கிறோம். பிறகு, காதலில் மட்டும் ஏன் பஞ்சம், பற்றாக்குறை ஏற்படுகிறது? மணமாகி தேனிலவு காலம் முடிந்தபிறகு கணவன், மனைவி இருவரும்

இரண்டும் ஒன்றுதானா டக்ளஸ் அண்ணே!

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் இரண்டும் ஒன்றுதான் குடிகாரன் வெளியே உளறுகிறான் மற்றவர்கள் அதைத்தான் மனசுக்குள் நினைக்கிறார்கள்.  இடறு எங்கே விழுந்தாய்  என்று பார்க்காதே  எங்கே இடறியது என்று பார். யார் குற்றவாளி? ஏணிமேல் ஏறுகிறவன் மட்டும்  திருடனல்ல;  கீழே ஏணியைப் பிடித்துக்கொண்டிருப்பவனும் திருடன்தான்.  சின்ன தாமதம் உண்டா? தாமதத்தில் சிறிய தாமதம்  பெரிய தாமதம் என்று வித்தியாசம்  எதுவும் இல்லை.  யாரை நம்புவது?  எல்லோரையும் நேசியுங்கள். ஆனால் உங்களை மட்டுமே நம்புங்கள்.  சத்தமின்றி! மௌனமும் ஒருவகை விமர்சனமே! நன்றி: ஆனந்தவிகடன்