இடுகைகள்

ஹோட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாம்பே சட்னி மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வரும் இளைஞன்! - மிடில் கிளாஸ் மெலடிஸ் -தெலுங்கு 2020

படம்
                மிடில்கிளாஸ் மெலடிஸ் அமேசான் பிரைம் கிராமத்தில் சின்ன சாப்பாட்டுக்கடை நடத்தி வருகிறார் கொண்டல ராவ் . இவரின் மகன் ராகவன் . ராகவனுக்கு கிராமத்தை விட குண்டூர் நகரத்திற்கு என்று ஹோட்டல் திறப்பதுதான் லட்சியம் . எப்படி இதனை சாதிக்கிறார் என்பதான் மையக் கதை . படத்தின் ஆத்மாவே , இதில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்புதான் . அனைவருமே நாம் தினசரி சாலையில் நடந்துசெல்லும்போது பார்க்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள் . கிராமத்தில் வாழும் மனிதர்கள் , பிரச்னை என்று வரும்போது ஒருவருக்கொருவர் எப்படி உதவிக்கொள்கிறார்கள் , அப்பா , மகன் இருவருக்குமான பாசம் , உறவினர்களின் சுயநலம் , ஹோட்டலில் சந்திக்கும் சவால்கள் என படம் அவ்வளவு யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது . துரைசானி படத்தை விட ஆனந்த் தேவர்கொண்டா இந்த படத்தில் நிறையவே நடிப்பில் முன்னேறியிருக்கிறார் . வர்ஷா பொல்லம்மாவின் உடலை விட கண்களே அதிகம் நடிக்கின்றன . இதில் பாவா என்று சொல்லும்போது அவரின் முக உணர்ச்சிகள் அசரடிக்கின்றன .      படத்தில் பெரும்பாலும் நமது கவனத்தை தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பவர் , ராகவனின்

ஃபேன்டசி கதைகள் வழியாக முதலாளிக்கு ஐடியா சொல்லி ஹோட்டலை கைப்பற்றும் நாயகன்! - பெட்டைம் ஸ்டோரிஸ் 2008

படம்
        பெட்டைம் ஸ்டோரிஸ்     பெட்டைம் ஸ்டோரிஸ்  Director: Adam Shankman Produced by: Adam Sandler, Andrew Gunn, Jack Giarraputo Screenplay by: Matt Lopez, Tim Herlihy ஸ்டீக்கர் பிரான்சனுக்கு தன் தந்தையின் சிறிய ஹோட்டலை தான் வளரும்போது பெரிதாக மாற்றி கட்டவேண்டும் என்பது கனவு. ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் ஹோட்டல் கைவிட்டு போகிறது. தந்தை அந்த ஹோட்டலை விற்றவரிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தனது மகனை அந்த ஹோட்டலுக்கு நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்பது. ஆனால் தோற்றுப்போனவர்களின் கோரிக்கை என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது. எனவே, அவரின் மகன் ஸ்டீக்கர் ஹோட்டல் பணியாளராகவே இருக்கிறான். அதனை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறான். ஆனால் அதன் முதலாளி அதனை கண்டுகொள்வதில்லை. கூடவே தனது மகளைக் கட்டிக்கொள்ளவிருக்கும் மணமகனுக்கு புதிய ஹோட்டலுக்கான நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைக்கிறார். இந்த நிலையில் ஸ்டீக்கர் தனது அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவருக்கு அது பிடிக்கவில்லை. காலையில் பள்ளி ஆசிரியை ஜில் குழந்தைகளை பார்த்துக்கொள்வார். இரவில் ஸ்டீக்கர் பார்த்துக்

உடலை குலைக்கும் நோய்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 9 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நான் இங்கு நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெயில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் காய்கிறது. பருத்தி உடையைத் தவிர வேறெதுவும் அணிய முடியவில்லை. பருத்தியானாலும் பதினைந்து நிமிடத்தில் நனைந்து வியர்வை வாடை மூக்கைத் துளைக்கிறது. இந்த ஞாயிறு எங்கும் வெளியில் செல்லவில்லை. அறையில் ஜனா சமைத்தார். இரவில் உள்ளே படுக்க முடிவதில்லை. கடுமையான புழுக்கம். மழை, வெயில் இரண்டையும் அப்படியே இந்த அறை அப்படியே கண்ணாடி போல பிரதிபலித்துவிடுகிறது. சில நாட்களாக மாடியில்தான் தூக்கம். நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். முத்தாரத்திற்கு எந்த விளம்பரமும் வருவதில்லை. இதனால் இதற்கு விற்பனையும் கிடையாது. மஞ்சள் காமாலைக்காக கீழாநெல்லி மருந்தை தினசரி குடித்து வருகிறேன். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே உடல் சரியாகிவிடும். முழு உடல் பரிசோதனையை நீங்கள் செய்யப்போவதாக அம்மா சொன்னார். இதற்கான சோதனைகளை மருத்துவமனைக்கு மருத்துவமனை மாற்றிச் சொல்லுகின்றனர். பொரித்தல், வறுத்தல் இல்லாத