இடுகைகள்

நடிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!

படம்
  ஜேன் ஃபாண்டா jane fonda stephanie zacharek அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.  ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.  காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல முடியாது தவிக்க

எனது இளமைக் காலத்தில் பெண் இயக்குநர்கள் மிக குறைவு! - ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட நடிகை

படம்
 ஜோடி ஃபாஸ்டர் திரைப்பட நடிகை சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படத்தில் கிளாரைஸ் ஸ்டார்லிங் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். ஒருவகையில் எதிர்காலத்திற்கான பெண் டிடெக்டிவ் பாத்திர வடிவமைப்பிற்கு கூட அது உதவும் என்று கூறலாம். பாப் கலாசாரத்தில் அந்த பாத்திரம் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறீர்கள்? நான் அப்போது சிறப்பான ஒன்றைச் செய்ததாகவெல்லாம் நினைக்கவில்லை. நாயகனின் பயணத்தை அப்படியே செய்தேன். அந்த பாத்திரம் அப்போது ஆண்களுக்கானதாகவே இருந்தது. சைலன்ஸ் ஆஃப் தி லேம்ஸ் படம், ஆண்களுக்கான பாத்திரத்தை பெண்ணுக்கானதாக பாதை மாற்றியது. கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு வேறுபட்ட குரல்களை நாம் கேட்டு வருகிறோம். பெண் நாயகிகள், எதிர்மறை நாயகர்கள் என்பது சற்று சிக்கலானது. குழப்பம் நிறைந்ததும் கூட. ட்ரூ டிடெக்டிவ் நைட் கன்ட்ரி படப்பிடிப்பு ஐஸ்லாந்தில் நடைபெற்றது. தீவிரமான பருவநிலை கொண்ட இடத்தில் நடந்த படப்பிடிப்பு எப்படியான அனுபவமாக இருந்தது? அதுபோன்ற இடத்தில் நடக்கும் படப்பிடிப்பு, உங்களுக்குள் உயிர் பிழைக்கும் வேட்கையைத் தூண்டக்கூடியது. ஒரே நேரத்தில் இதுப்பற்றிய பாராட்டும், வாழ்வதற்கான அவமானமும் மனதி

நான் என்னோடு போட்டியிட்டு மேம்படுத்திக்கொள்ள முயல்கிறேன் - ஷனாயா கபூர், இந்தி திரைப்பட நடிகை

படம்
  ஷனாயா கபூர் ஷனாயா கபூர் இந்தி திரைப்பட நடிகை கரண் ஜோகரின் இந்தி படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துவிட்டு இப்போது நடிகை ஆகியிருக்கிறார். 23 வயதில் அவர் பேசும் விஷயங்கள் சற்று ஆச்சரியமாகவே இருக்கின்றன. ஷனாயா என்பவர் தனிப்பட்ட மனிதராக எப்படி?   என்னுடைய ஆளுமை என்பது வேலையை அடிப்படையாக கொண்டது. நடிப்பதை நான் வேலையாக பார்ப்பதில்லை. சில சமயங்களில் வேலையை அதீதமாக எடுத்துக்கொள்வதுண்டு. எனது குழுவினருடன் இணைந்து கேமரா முன்னே வேலை செய்வது வேடிக்கையான ஒன்று. இதை என்னுடைய நீட்சியாகவே பார்க்கிறேன். காலையில் எழும் பழக்கமுடையவரா? இல்லை. நான் இரவில் விழித்துக்கொண்டு இந்தி, ஆங்கில, கொரியன் படங்களைப் பார்த்துக்கொண்டிருபேன். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்க நான் விழித்துக்கொண்டு ஏதேனும் செய்துகொண்டிருப்பேன்.இப்போது மைசூரில் விருசபா படப்பிடிப்பு நடக்கிறது. அங்கு இரவில் தேவதாஸ் படத்தை இரவில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏனென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், உறுதியாக காலையில் வேகமாக எழும் பெண் நானில்லை. உங்கள் குடும்பத்தில் புகழ்பெற்ற தயாரிப்பாளர்கள். நடிகர்கள் உள்ளது , அழுத்தம் தருகிறதா?

மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா

படம்
  மலோபிகா பானர்ஜி எம்ஜே  பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர் மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.  உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.  உங்களின் ரோல்மாடல் யார்? என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.  மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்? பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையு