மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்தால் வெற்றி! ஸ்கை க்ரூ நிறுவனர், மலோபிகா
மலோபிகா பானர்ஜி எம்ஜே
பாடகர், நடிகர், பாடலாசிரியர் ஸ்கைக்ரூ நிறுவனர்
மலோபிகாவின் பெயருக்கு பின்னே இருக்கும் அத்தனையும் நிஜம். அவ்வளவு ஆர்வமாக பல்வேறு வேலைகளை செய்துவருகிறார். ஸ்கை க்ரூ என்பது அவரின் ஆடை நிறுவனமாகும். பாரம்பரிய இழைகளில் தேவையான திருத்தங்களோடு கஸ்டமைஸ்டு உடைகளை தைத்து கொடுப்பது இவரது நிறுவன பாணி.
உள்ளூர் சார்ந்த விஷயங்களை முக்கியமாக நினைக்கிறார். ஆர்வமும், அர்ப்பணிப்புமான தனது நிறுவனத்தை வளர்ச்சியடையச் செய்ய உழைத்து வருகிறார்.
உங்களின் ரோல்மாடல் யார்?
என்னுடைய குடும்பம்தான் என்னுடைய ஊக்கசக்தி, ஆற்றல் அனைத்துமே. சரியாக வேலை செய்தால் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என என் அம்மா கொடுக்கும் ஊக்கம் அற்புதமானது. இதனால் நான் நினைத்த இலக்குகளை எதிர்காலத்தில் அடைவேன் என நம்புகிறேன்.
மன அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறீர்கள்?
பொதுமுடக்க காலத்தைப் பற்றி கேட்கிறீர்கள். நான் அப்போது சமையல் செய்துகொண்டிருந்தேன். அதுதான் மன அழுத்தத்தை போக்கும் ஒரே வேலையாக இருந்தது. காய்கறியை சீராக ஒன்றுபோல வெட்டுவது எனக்கு பிடித்திருந்தது. மன அழுத்தம் வரும்போது நடனமாடுவது எனக்கு பிடித்தமானது. இது உடலையும் மனதையும் பெருமளவு நெகிழ்வாக்கியது.
நீங்கள் தொடர்ச்சியாக செய்யும் பின்பற்றும் செயல் அல்லது வழக்கம் என்ன?
நான் காலையில் நேரமே எழும் பழக்கம் கொண்டவள். அதிகாலை எழுந்து சூரியன் உதயத்தைப் பார்ப்பேன். அதுதான் புதிய நாளை எனக்கு அறிமுகம் செய்கிறது. காலையில் நேரமே எழுந்து யோகா, சூரிய நமஸ்காரம் செய்வேன். இதுதான் தினசரி வேலைகளுக்கான ஆற்றலை நம்பிக்கையை எனக்குக் கொடுக்கிறது.
வெற்றி என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
வெற்றி என்பது என்னைப் பொறுத்தவரை மகிழ்ச்சிதான். நீங்கள் உங்கள் மனம் விரும்புகிற செயல்பாடுகளை செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்களை நீங்களே சற்று திறந்து வைத்து புதிய சவால்களை சந்திப்பது முக்கியம். அது மனிதராக உங்களை வெளிப்புறமாகவும், அகவயமாகவும் மாற்றும். கூடவே ஆன்மிக ரீதியாகவும்தான் நிலை மேம்படும். தொழில்ரீதியாக அது நேர்மறையான தன்மையை உருவாக்கும்.
ஃபெமினா 2021
கருத்துகள்
கருத்துரையிடுக