கழிவுப்பொருட்களிலிருந்து சிஎன்சி இயந்திரம்!

 










மாதிரிப் படம் 







கழிவுப்பொருட்களிலிருந்து இயந்திரம்!



வேலூர் விஐடியில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவர், கவின்பிரபு சுந்தர ராஜ். பூர்வீகம், பொள்ளாச்சி. கவின்பிரபு, வெறும்  1,500 ரூபாயில் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிஎன்சி இயந்திரம் உற்பத்திதுறையில் (பிளாஸ்டிக், உலோகம், மரம்) பயன்படுகிறது.  மனிதர்கள் உதவியின்றி கணினி கோடிங் மூலம் இயந்திரத்தை எளிதாக இயக்கலாம்.

எலக்ட்ரானிக் கடைகளில் கழிவாக கிடைக்கும் போல்ட், நட்டுகள், டிவிடி ரைட்டர், பிவிசி குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் கவின்பிரபு.  தான் உருவாக்கிய சிஎன்சி புரோடோடைப் இயந்திரத்திற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ”கடந்த ஆண்டு எனது நண்பரின் பிறந்த நாளுக்காக மினியேச்சர் ஓவியம் ஒன்றை உருவாக்க நினைத்தேன். அப்படித்தான் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கினேன்” என்றார் கவின்பிரபு. 

https://www.newindianexpress.com/good-news/2022/may/22/tn-farmers-son-puts-together-scrap-comes-up-with-ultra-cheap-compact-cnc-machine-2456516.html

https://www.thebetterindia.com/286293/tamil-nadu-engineering-student-builds-low-budget-cnc-machine-using-scrap/

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்