பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -
பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு
உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள் பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.
சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது!
உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென 5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன. அதே ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.
https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html
https://nypost.com/2021/07/22/chimps-are-killing-gorillas-unprovoked-for-the-first-time-scientists/
கருத்துகள்
கருத்துரையிடுக