கானரி தீவில் நத்தைகள் பற்றி ஆராய்ந்தவர்! - மேரி ஹார்னர் லைல்
மேரி ஹார்னர் லைல் (Mary horner Lyell
)
1808 - 1873
இங்கிலாந்தின் லண்டன் நகரைச் சேர்ந்தவர். சங்குகளைப் பற்றி ஆராய்ந்து வந்தார். இவர் புவியியலாளரும் கூட. மேரியின் தந்தை, லியோனார்ட் ஹார்னர், புவியியல் பேராசிரியர். இவர், தனது ஆறு பிள்ளைகளும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என நினைத்தார். இதனால், மேரி உள்ளிட்ட அனைவருக்குமே எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை கிடைத்தது.1832ஆம் ஆண்டு புகழ்பெற்ற புவியியலாளரான சார்லஸ் லைல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் அனைத்து ஆய்வுகளுக்கும் உதவியாளர் மேரி தான்.
1854ஆம் ஆண்டு மேரி, ஸ்பெயின் நாட்டின் கானரி தீவில் நத்தைகள் பற்றி செய்த ஆய்வு, முக்கியமானது. இதனை காலபகோஸ் தீவில் பறவைகள், ஆமைகள் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் ஆய்வோடு ஒப்பிட்டனர். பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்வீடிஷ், ஸ்பானிஷ் மொழிகளைக் கற்று கணவர் சார்லஸின் பணியில் உதவினார். அறிவியல், இலக்கியம் என பல்வேறு விஷயங்களையும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். தென் அமெரிக்காவில் உள்ள பனிப்பாறை புவியியல் (Glacial geology ) பற்றிய ஆய்வறிக்கையை கல்வியாளர் எலிசபெத் அகாஸ்சிஸ்சுடன் சேர்ந்து எழுதினார்.
https://en.wikipedia.org/wiki/Mary_Horner_Lyell
https://blogs.scientificamerican.com/rosetta-stones/4-fantastic-pioneering-earth-scientists-for-international-womens-day/
கருத்துகள்
கருத்துரையிடுக