பூமிக்கு நுண்ணுயிரிகள் அவசியம்! - ராபர்ட்டோ கோல்ட்டர்

 










நேர்காணல்

ராபர்ட்டோ கோல்ட்டர்

அமெரிக்காவிலுள்ள நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மனிதர்களின் வாழ்க்கை, சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். 

பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நுண்ணுயிரிகள் எதற்கு அத்தியாவசியம் என்று கூறுகிறீர்கள்?

நமது பூமி இயங்கும் செயல்பாட்டிற்கு, நுண்ணுயிரிகள் பங்களிப்பு முக்கியம். நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும் வாழ்கைகயும் பூமியில் சாத்தியமாகி இருக்காது. கடலில் ஆக்சிஜன் உற்பத்தியாக நுண்ணுயிரிகள் உதவுகின்றன. உயிரினங்களின் வாழ்வுக்கு முக்கியமான சல்பர், நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை நுண்ணுயிரிகள்தான் தயாரிக்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, பயிர்கள் மண்ணில் விளைய என அனைத்து முக்கிய நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளது. 

மனிதர்களுக்கு நுண்ணுயிரிகளின் உதவி தேவையா?

பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தும் , தொடர்புகொண்டும் தான் இயங்குகின்றன. இந்த வகையில் நம் உடலிலுள்ள தோல், நுண்ணுயிரிகளோடு தொடர்புகொண்டுதான் உள்ளது. அதேபோல, வயிற்றின் குடல் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் மூலம் தான் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. 

காலநிலை மாற்றம் நுண்ணுயிரிகளை பாதிக்கிறதா?

நிச்சயமாக. காலநிலை மாற்றத்தால் நுண்ணுயிரிகள் பாதிக்கப்படுவதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளது. எழுபது ஆண்டுகளாக பயிர்களுக்கு பயன்படுத்திய உரங்கள், மண்ணை மெல்ல வளமிழக்கச் செய்துவருகின்றன. உலகம் முழுக்கவே மண் அரிப்பு ஏற்பட்டு வருவதோடு, உணவு உற்பத்தியும் சரிந்து வருகிறது. 


Microbes cause earth to function -from plants to human we all live due to microbial activity

TOI 11.6.2022


https://gasp.med.harvard.edu/

https://scholar.google.com/citations?user=yW9RJEQAAAAJ&hl=en

https://stage.edx.org/bio/roberto-kolter-2

https://www.nature.com/articles/nj7553-553a

https://www.eafit.edu.co/noticias/agenciadenoticias/2018/cuando-lo-invisible-se-hace-visible-emerge-la-belleza-roberto-kolter


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்