இடுகைகள்

ஆப்ரஹாம் லிங்கன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா