இடுகைகள்

ஆன்லைன் சேவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்லைன் சேவை நிறுவனங்களோடு சண்டையிடும் சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன்

படம்
  ஷேக் சலாலுதீன் இந்திய ஒற்றுமை பயணத்தில்... ஆன்லைன் சேவை நிறுவனஙளோடு சண்டையிடும்   சங்கத்தலைவர் - ஷேக் சலாலுதீன் பொதுநல விஷயங்களில் உழைக்கும் மனிதர்கள் முதலில் இழப்பது தங்கள் மனநிம்மதியைத்தான் என்று சொன்னவர் பெரியார். அவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மாறவில்லை. சலாலுதீன் மீது பெருநிறுவனங்கள் 42 வழக்குகளைத் தொடுத்துள்ளன. வாரத்திற்கு மூன்று நாட்கள்,   வழக்குகளை சந்திக்கவென ஒதுக்கி உழைத்து வருகிறார். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக்   சலாலுதீன். எதற்கு அவர் மீது 42 வழக்குகள். அதுவும் பெருநிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன. எதற்கு என்று   நினைக்கிறீர்கள்? சலாலுதீன் ஆன்லைன் வாகன சேவை மற்றும் உணவு சேவை நிறுவனங்களுக்கான தொழிலாளர் சங்கத்தை நடத்தி வருகிறார். ஊழியர்களை ஒன்று கூட்டி அவர்களின் உரிமைகளைக் கேட்டு வேலை நிறுத்தம் செய்த காரணத்திற்காகத்தான் அவர் மீது நீதிமன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உளவியல்ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டது.   அண்மையில்தான் சலாலுதீன், பிறந்து பதினெட்டு மாதமான மகள் ஜைனப் பேகத்தின் ஹகீக்கா விருந்து விழாவை நடத்தினார். கூட்டு குடும்பமாக வசித்து வருகிறவர், ஓலா கார் ஓட்டுநரு