இடுகைகள்

டிப்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொருட்களின் விலையேற்றத்தை சமாளிக்க உதவும் டிப்ஸ்கள்! - வாங்கும் பழக்கத்தை ட்யூன் பண்ணுங்க!

படம்
  உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை எதிர்கொள்ள என்ன செய்வது என நாம் நிர்மலா சீதாராமனிடம் அட்வைஸ் கேட்க முடியாது. அட்வைஸ் கேட்கிறாயே அதற்கென தனி ஜிஎஸ்டி போட்டுவிடுகிறேன் என்று கூட உத்தரவிடலாம்.  திட்டமிடுங்கள்  ஆன்லைனோ, இன் ஸ்டோரோ எதுவாக இருந்தாலும் ஆஃபர் உள்ள பொருட்களை வாங்குவது முட்டாள்தனம். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குவது புத்திசாலித்தனம், புரமோட்டர்கள் உங்களை கடைகளுக்கு சென்று துரத்தி பொருட்களை வாங்க வைக்க முயல்வார்கள். அவர்கள் பொருட்களை திருடும் காக்கைகளைப் போல கை தூக்கி விரட்டி விட்டு எதற்கு கடைக்கு வந்தீர்களோ அந்த வேலையைப் பாருங்கள். அதுதான் வாழ்க்கை வளம் சேர்க்கும்.  சூப்பர் மார்க்கெட்டோ, ஹைப்பர் மார்க்கெட்டோ எதுவாக இருந்தாலும் வாங்க வேண்டிய பொருட்களை நீங்கள் பட்டியல் போட்டபின்னரே கடைக்கு போகவேண்டும். அப்படி போகாதபோது பர்சிலுள்ள பணம் வெட்டியாக செலவாகும்  பிராண்டிற்கு மாற்று  இதுவரை பிராண்டுகளை வாங்க நிறைய செலவு செய்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது சாத்தியமாகாது. எனவே, சூப்பர் மார்க்கெட்டுகளில், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள கம்பெனியின் சுயமான மா

ஆரோக்கியம் பேணுவதற்கான சில டிப்ஸ்கள்!

படம்
முன்னே நீங்கள் பார்த்த, படித்த கட்டுரையின் தொடர்ச்சி இது. வாசியுங்கள். நன்றி. தோல் நோய் பாதிப்புகளை உங்களுக்கு மட்டுமல்ல, ஊருக்கே சொல்வது தோல்தான். குடல் பாதிப்பு முதல் புற்றுநோய் வரையில் தோலில் பாதிப்புகளை எளிதாக பார்க்க முடியும். எனவே வெயில் பாதிப்பைக் குறைக்கும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை உடலில் பூசலாம். மிதவெப்பநாடான இந்தியாவில் லேக்டோ கேலமைன் அல்லது வாசலின் போன்ற பெட்ரோலியம் ஜெல்லியை பூசுங்கள். இதெல்லாம் எண்பது, தொண்ணூறு ரூபாய் போட்டு வாங்கும் முன்பு வீடுகளில் பாட்டிகளைப் பாருங்கள். தேங்காய் எண்ணெயை தலைக்குத் தேய்த்துவிட்டு மிஞ்சியதை கைக்கும் கால்களுக்கும் பூசுவார்கள். அந்த பாரம்பரியம்தான் இப்போது இன்டென்சிவ் கேர் வாசலினுக்கு மாறியுள்ளது. க்ரீம்களிலுள்ள வேதிப்பொருட்கள் தோலைப் பாதித்தால் நீங்கள் சாதாரண தேங்காய் எண்ணெய்க்கு மாறுவதே நல்லது. பருப்புகளைத் தின்னுங்கள் கொழுப்பு என்றால் அதைப்பற்றி பெண்களிடம்தானே பேசவேண்டும். அதாவது தோலிலுள்ள கொழுப்பு. பருப்பு வகைகளை எலிபோல கொறித்து தின்பது இருபாலினத்தவருக்குமே நல்லது. இதில் புரதம், விட்டமின்கள் ஆகிய சத்துகள் உண்டு. இப்ப