இடுகைகள்

கொரோனா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயந்தால் வாழ்க்கை நம் கையில் இல்லை - மஞ்சு ரோஜூலொச்சாய் - மாருதி

படம்
  மஞ்சு ரோஜூலொச்சாய் மஞ்சு ரோஜூலொச்சாய் இயக்கம் மாருதி இசை அனுப் ரூபன்ஸ் பயம் என்பது ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதோடு மற்றவர்களின் வாழ்க்கையையும் எப்படி சீர் குலைக்கிறது என்பது சொல்லும் படம். பயம் என்பது மகிழ்ச்சியாக வாழ்பவர்களின் வாழ்க்கையை குலைக்கும் என்பதை கொரோனா காலத்தோடு இணைத்து கதை சொல்லியிருக்கிறார் மாருதி. ஆனால் படத்தில் எதுவும் உயிரோட்டமாக இல்லை. சந்தோஷ் சோபன் ம ட்டுமே கதை எதுவாக இருந்தாலும் நடிப்பேன் என தைரியமாக நடித்திருக்கிறார். அவரும் அவருடைய நண்பர்களின் நடிப்பும் பரவாயில்லை. படம் முரண்களைக் கொண்டு இயங்கும்போது சுவாரசியமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில்   சுயமாக யோசிக்கத் தெரியாத கோபாலம் என்பவரின் பயம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது. அவரின் உயிருக்கே ஆபத்தாவது எப்படி என சொல்லியிருக்கிறார்கள்.   இந்த படத்தின் நாயகன் வேறு யாருமில்லை, அஜய் கோஷ் என்ற நடிகர்தான்.   படத்தில் புதுமை ஏதுமில்லை என்றாலும் கூட அஜய் கோஷின் நடிப்பு பார்க்கும்படி இருக்கிறது. படத்தின் நாயகன் என்பது சந்தோஷ் சோபன் என்றாலும் கூட படத்தின் பாடல் காட்சிகள் தவிர அனைத்து காட்சிகளிலும் அஜய் கோஷ் ந

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா

காப்புரிமையற்ற தடுப்பூசி

படம்
  பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காப்புரிமையற்ற  தடுப்பூசியின் பங்கு! உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பெருந்தொற்று, கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தம்மைக் காக்க உலக மக்கள்தொகையில் தோராயமாக 60 சதவீதம் பேர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இதுவே தற்போது மாறிவரும் வைரஸ் வகைகளுக்கு ஏற்ப பெருமளவு மக்கள் பலியாகாமல் தடுத்து வருகிறது.  மேல்தட்டு, நடுத்தர வர்க்க மக்களில் 77 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியேனும் செலுத்தியுள்ளனர். வறுமையான நாடுகளில் இந்த வகையில் 10 சதவீத மக்களுக்கே தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த இடைவெளியை காப்புரிமை இல்லாத கோர்பேவாக்ஸ் (CORBEVAX ) போக்கும் என மருத்துவர் வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.  வேறுபாடு என்ன? புரத துணைப்பிரிவு (protein subunit) தடுப்பூசி வகையைச் சேர்ந்த கோர்பேவாக்ஸ், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஸ்பைக் புரதத்தை கொரோனாவிலிருந்து பெற்றுள்ளது. இதைப் பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு எதிர்கால நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. பிற தடுப்பூசிகள், உடலில் ஸ்பைக் புரதத்தை உருவாக்க தூண்டுகின்றன. கோர்பேவாக்ஸ், நேரட

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக

நம்பிக்கையை குலைக்கிறதா டேட்டிங் ஆப்கள்?

படம்
பம்பிள், ஓகே க்யூபிட், குவாக் குவாக் ஆகிய டேட்டிங் ஆப்கள் பெருந்தொற்று காலத்தில் புகழ்பெற்றன. நீண்டகால உறவை வளர்த்துக்கொள்ள பலரும் இதனை பயன்படுத்தினார். ஆனால் அதேசமயம், இதன் பக்கவிளைவுகளும் பலரையும் பாதித்துள்ளன. இதில் தங்களது பயோவை பதிவு செய்து காதல் உறவை எதிர்பார்த்தவர்களுக்கு நிறைய ஏமாற்றங்களும் கிடைத்துள்ளன. ஒருவரின் விருப்பங்கள் அடிப்படையில் அல்காரித முறையில் ஆட்களை தேடி தருவதை டேட்டிங் ஆப்கள் செய்கின்றன. எனவே, இவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலரும் நேரடியாகவே நாம் பார்க்கும் ஒருவரைப் பிடித்திருந்தால் பேசிப் பழகலாம். ஆப்பில் யாரையும் பார்த்துப் பழகவேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். புத்தாண்டு நேரம். இனிமேல் நான் குடிக்கிறதை விட்டுட்டேன் மாப்ள என நண்பர் போன் செய்து சொன்னால் நமக்கு மனதில் என்ன தோன்றும். குடிச்சிருக்கான் போல என நினைத்துக்கொண்டு சரிடா என்று சொல்லி போனை அணைப்போமே அதேதான். டேட்டிங் ஆப்களை பயன்படுத்துபவர்கள் வெளிநாடுகளைப் போல அதனை சீரியசாக நினைப்பதில்லை. போரடிக்கிறது ஏதாவது செய்வோமே என்று டேட்டிங் ஆப்பை நோண்டுகிறார்கள். செய்தி அனுப்புகிறார்கள். சந்

இந்தியாவில் தொடங்கிய இம்பீரியல் வங்கி எஸ்பிஐயாக மாறிய வரலாறு! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
            நூல் அறிமுகம் கார்டன் ஆப் ஹெவன் மதுலிகா லிடில் ஸ்பீக்கிங் டைகர் 599 1192-1398 ஆகிய காலங்களில் டெல்லியில் நடைபெற்ற முகலாயர்களின் ஊடுருவல் பற்றி பேசும் நூல் இது . முகமது , தைமூர் என இரு ஆட்சியாளர்களின் படையெடுப்பும் அதன் விளைவுகளும் நூலில் விளக்கப்படுகிறது . இட் மஸ்ட் ஹேப் பீன் லவ் பட்… ஆஷா சி குமார் புக் லாக்கர் . காம் ரூ . 1549 பள்ளியில் பணிபுரியும் இரு ஆசிரியர்களான அபெக்‌ஷா , மாயா இருவரின் காதல்தான் கதை . இதில் பெண்களின் சுதந்திரம் , ஆசைகள் பற்றி தீவிரமான விவரிப்புகள் நூலை சுவாரசியம் ஆக்குகின்றன . பெஸ்ட் இன்டென்ஷன் சிம்ரன் திர் ஹார்பர் கோலின்ஸ் 399 காயத்ரி மெஹ்ரா , வரலாற்று எழுத்தாளர் . இவர் எழுதும் கட்டுரை ஒன்று வலதுசாரி குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . இதனை அவர் எப்படி சமாளித்தார் , இதற்காக அவர் தனக்குப் பிடிக்காத ஒரு நபரைக் கூட சந்தித்து உதவி கோரும்படி சூழ்நிலை மாறுகிறது . இதன் விளைவுகள்தான் கதை . தி எஸ்பிஐ ஸ்டோரி டூ சென்சுரி ஆப் பேங்கிங் விக்ராந்த் பான்டே வெஸ்ட்லேண்ட் பிசினஸ் ரூ .699

சிங்கிளாக நிற்கும் சிறுத்தை, சிங்கங்களின் விருப்பம் என்ன?

படம்
  டேட்டிங் விருப்பங்கள் என்னென்ன? டேட்டிங் பிளாட்பாரங்கள்தான் விர்ச்சுவலாக ஒருவர் சந்தித்துக்கொள்ளும் பீச், பார்க், கஃபே என்றாகிவிட்டது. அதிலுள்ள டிரெண்டுகளைப் பார்ப்போம்.  வீடியோ டேட்டிங் 2021ஆம் ஆண்டு நாகரிகப்படி, ஒரு பெண்ணை அறிமுகம் செய்துகொள்ள மிகவும் மெனக்கெட வேண்டாம். வீடியோ டேட்டிங்கை முயன்று பார்க்கலாம். பம்பிள் டேட்டிங் வலைத்தளம் எடுத்த ஆய்வில் 39 சதவீதம் பேர் முதல் டேட்டிங் நாளுக்கே வீடியோவை நாடியிருக்கிறார்கள். நேரடியாக நேரில் பார்ப்பதைவிட வீடியோவில் விர்ச்சுவலாக பார்ப்பது பாதுகாப்பு என 48 சதவீதப் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கூடவே நேரத்தையும் காசையும் மிச்சம் செய்கிறது என்று வேறு கூடுதல் மக்கள் கருத்தும் கிடைத்திருக்கிறது.  மெல்லகா மெல்லகா.... ஜாலி வாலி பெண்கள் எல்லாம் அடக்கமாக உட்கார வைக்கப்பட்டு டிண்டர் என் வாழ்க்கையை மாத்துச்சு என சொல்லுவார்களே அதே வலைத்தளம்தான் உறவை மெதுவாக செலுத்த சிங்கிள்கள் விரும்புகிறார்கள் என கூறுகிறு. இந்த வகையில் 62 சதவீதம்பேர், டேட்டிங் உடனே சீரியசாக வேண்டாம் நட்போடு தொடங்கட்டுமே என்கிறார்களாம். கோ ஸ்லோ என போர்டை பார்த்து நாம் என்றைக்காவது வண்

கோவிட் டிக்ஷனரி 2021 - என்ன கற்றுக்கொண்டோம்?

படம்
டேட்டிங் அகராதி ஃபியர் ஆப் டேட்டிங் அகெய்ன் பெருந்தொற்று காரணமாக காணாமல் போன உறவை மறுபடியும் டேட்டிங் செய்து மீட்டெடுக்க முடியுமா என்று மனதில் ஏற்படும் பயம்.  கோவிடேட்டட் கோவிட் காரணமாக டேட்டிங்கில் ஏற்பட்ட மாற்றம், டேட்டிங்கை நிறுத்தி வைப்பது. ஹார்ட்பாலிங் உறவில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பது. அந்த உறவை தீவிரமாக எடுத்துக்கொள்வது.. டபுள் வேக்ஸ்டு இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள் ஜூம்பிங் சிம்பிளாக ஜூம் காலில் பிரேக்கப் சொல்லுவது, காதலித்தவரை தூக்கி எறிவதை இப்படி சொல்லலாம்.  செக்ஸ் டிஸ்டன்சிங் கொரோனாவைக் காரணம் காட்டி செக்ஸ் வேண்டாம் என நழுவுவது... சாப்ட் கோஸ்டிங் மணிரத்னம் பட பாத்திரம் போல கொஞ்சூண்டு பேசுவது. அதிலும் இமோஜி, சோசியல் மீடியா மீம் என பலவற்றையும் பயன்படுத்துவது..  அதாகப்பட்டது ஒருவரை முழுமையாக இன்னும் கழட்டிவிடவில்லையாம்.  ஆர்பிட்டிங் முன்னாள் காதலரை பின்தொடர்ந்து என்ன செய்கிறார் என பார்ப்பது.. இல்லை சில சிக்னல்களை கொடுத்து அவரே புரிந்துகொள்ளமுடியாமல் ஃபாலோ செய்ய வைப்பது... கோவிட் பேக்கேஜ் பெருந்தொற்று காலத்தில் ஒருவருடன் பேசுவீர்கள். ஆனால் அது உண்மையான

ஊசிமுனை இல்லாத டிஎன்ஏ தடுப்பூசி

படம்
  ஊசிமுனை இல்லாத  டிஎன்ஏ தடுப்பூசி ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸைடஸ் கெடில்லா நிறுவனமும், ஒன்றிய அரசும் இணைந்து முதல் டிஎன்ஏ தடுப்பூசியை தயாரித்துள்ளன. இந்த ஊசியின் விலை ரூ.1900. இதை செலுத்தும் கருவியின் விலை ரூ.30 ஆயிரம்.  இதனை அமெரிக்க மருந்து நிறுவனமான பார்மா ஜெட் தயாரித்துள்ளது.  கூர்மையான முனை மூலம் மருந்து உடலினுள் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தம் காரணமாக மருந்து உடலினுள் வேகமாக செல்லும். ஊசியே இல்லாத சிரிஞ்ச் கொண்ட கருவியால் 60 சதவீத மருந்தை சேமிக்க முடியும்  என்று கூறுகிறார்கள். இதில் 0.1 மி.லி மருந்து செலவானால் சாதாரண ஊசி மருந்து முறையில் 0.5 மி.லி மருந்து செலவாகிறது.  ஊசி வேண்டாங்க.. மாத்திரையே போதும் என பயந்து ஓடுபவர்களை புதிய முறை ஈர்க்கலாம்.  ஊசிமுனை இல்லாத இஞ்செக்டர் விலை அதிகமாக உள்ளது. இதனைக் குறைக்க பெருமளவு தடுப்பூசி போடும் திட்டத்தின் பட்ஜெட் அதிகரித்தால் மட்டுமே இதனை பயன்படுத்த முடியும்.  ஊசி இல்லாத இஞ்செக்டர் என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. இதனை 1866ஆம் ஆண்டு கண்டுபிடித்து  பதிவு செய்துவிட்டனர். போலியோ, டைபஸ், அம்மை ஆகிய நோய்களுக்கு இதனை பயன்படுத்தி வந்தனர்.  டிஎன்ஐஇ அரவிந

சுதந்திரமான விலை நிர்ணய முறையால் தனியார் மருத்துவமனைகள் சாதித்தது என்ன?

படம்
  தடுப்பூசிகளை செலுத்துவதில் தனியார் மருத்துவமனைகள்  என்ன செய்தார்கள்? கோவிட் 19 பிரச்னையைப் பொறுத்தவரை அரசு, அனைத்து பொறுப்புகளையும் தனியார் நிறுவனங்களுக்கு கையளித்துவிட்டது என்றே கூறலாம். மக்கள் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள  அரசை விட தனியாரையே நம்பலாம் என்றளவு தடுப்பூசி தட்டுப்பாடு அரசு வட்டாரங்களில் உள்ளது. மொத்த தடுப்பூசி திட்டத்தில் 25 சதவீதம் தனியார்  துறையினரை நம்பியே உள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவலை அரசு மருத்துவமனைகள் பல்வேறுசவால்கள் இருந்தாலும் கூட சிறப்பாக சமாளித்து வருகின்றன. நோய் பரவி வரும்போபோது தடாலடியாக மருத்துவமனைகளை அடைத்த தனியார் நிர்வாகத்தினர், தடுப்பூசிகளை போடும் திட்டங்களை தங்களது வணிக லாபத்திற்காக அறிவித்து வருகின்றனர்.  தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு மாறுபட்ட விலைகளில் விற்கிறது. இதற்கான விலை நிர்ணயம் என்பது மாறுபட்டுக்கொண்டே உள்ளது. இந்தியாவில் நாற்பது ஆண்டுகளாக தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் திட்டம் அமலில் உள்ளது. இதில் கூட தனியாரின் பங்களிப்பு பெரிதாக அதிகரிக்கவில்லை. பத்து முதல் பதினைந்து சதவீதத்தை இன்னும் தாண்டவில்லை. மூளைக்காய

யாத்திரைகளை விட மக்களின் உயிர் முக்கியம்! - புஷ்கர்சிங் தமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்

படம்
  புஷ்கர் சிங் தமி உத்தர்காண்ட் முதலமைச்சர் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிவீட்டீர்களா? 50 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசியை வழங்கிவிட்டோம். மத்திய அரசு எங்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தால் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம்.  சுற்றுலாபயணிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? பொதுமுடக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், இப்போது வெளியே வருகிறார்கள்.  இதனை அரசாக நினைத்து தடுக்க முடியாது. மக்கள்தான் வெளியே வருவதை அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.  உத்தர்காண்டில் சில மாதங்களில் பல்வேறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள்  உங்கள் நிலையைப் பொறுத்து கடினமான முடிவுகள் எடுக்க முடியுமா? என்மேல் நம்பிக்கை வைத்த கட்சிக்கார ர்கள், தொண்டர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான முதல்வர் ஆவேன் என நினைத்தே பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.  கன்வார் யாத்திரைகளுக்கு அனுமதி மறுத்தது கடுமையான முடிவுதான் அல்லவா? இ

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல

பயாலஜிகல் ஈ தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்!

படம்
              டாக்டர் மரியா எலினா பாட்டசி பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்குழு நீங்கள் ஆராய்ச்சி செய்துவரும் பயாலஜிகல் ஈ தடுப்பூசி பற்றி கூறுங்களேன் . கடந்த ஆண்டு நாங்கள் கோவிட் -19 க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் இறங்கினோம் . இந்தக்குழு ஆராய்ச்சியை வேகமாகவும் நுட்பமாகவும் செய்வதோடு இதற்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன . அரசிடம் சோதனை நடத்தவும் அதனை விரிவுபடுத்தவும் அனுமதி கிடைத்துள்ளது . உலகளவில் மருத்துவ சோதனை நடத்தவும் சிஇபிஐ போன்ற அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளோம் . முதல்கட்ட சோதனைகளுக்கான முடிவுகள் எப்போது கிடைக்கும் ? விரைவில் முதல் கட்ட சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் முடித்து முடிவுகளை வெளியிடுவார்கள் என நினைக்கிறேன் . மூன்றாவது கட்ட சோதனைக்கான அனுமதி பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரமே இதுபற்றிய தகவல்களை வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன் . மாறியுள்ள வைரசுக்கு எதிராக தடுப்பூசி எப்படி மேம்பட்டுள்ளது என்று கூறுங்கள் . நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்காக இணைந்து பணியாற்றி வருகிறோம் . இந்த ஊசி , இப்போது மாறியுள்ள டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக சிறப்பா

காங்கிரஸ் மக்களிடமிருந்து விலகி வந்துவிட்டது! - ஜிதின் பிரசாதா, பாஜக தலைவர்

படம்
                    ஜிதின் பிரசாதா பாஜக தலைவர் 2019 இல் நீங்கள் பாஜகவில் இணைவீர்கள் என்று கருதப்பட்டது . தற்போது அக்கட்சியில் இணைந்துள்ளது ஆச்சரியமாக இல்லை . இது ஆச்சரியம் பற்றியது அல்ல . நான் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் குறுக்கும் நெடுக்குமாக பயணம் செய்து வந்துள்ளேன் . நான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை . நான் சார்ந்துள்ள கட்சியும் அதற்கான திறனுடன் இல்லை என்பதை உணர்ந்துள்ளதால் பாஜகவிற்கு மாறிவிட்டேன் . எத்தனை ஆண்டுகளாக இந்த முடிவு பற்றி சிந்தித்து வந்தீர்கள் ? இது காலம் பற்றியதல்ல . தோல்வி பற்றியது . தொடர்ச்சியாக நாங்கள் தோல்வியுற்றோம் . நாங்கள் மக்களிடம் நிறைய பேசிய அளவில் அவர்களின் தேவைகள் , எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை . எனவே அதற்காகத்தான் முடிவு எடுக்கவேண்டியிருந்தது . பாஜக உங்களை அணுகியதா அல்லது நீங்கள் அவர்களை அணுகினீர்களா ? இது யார் யாரை அணுகினோம் என்பதல்ல . நான் இந்த முடிவை மகிழ்ச்சியாக எடுக்கவில்லை என்பதை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் . நான் தேசியக்கட்சி என்பதால் கட்சியில் இணைந்து பணியாற்ற ந

மத்திய அரசு நிதியை நேரடியாக ஏழை மக்களின் கையில் வழங்குவதே சிறந்த முடிவு! அபிஜித் பானர்ஜி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர்

படம்
                அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க உலக நாடுகள் பணத்தை அச்சிடத் தொடங்கியுள்ளன . இந்தியா இந்த வழியில் சென்றால் மட்டுமே தடுப்பூசி திட்டத்தை முன்னெடுத்து வறுமையில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும் என அபிஜித் கூறுகிறார் . மத்திய அரசு பணத்தை அச்சிடவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் . நீங்கள் அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் ? நான் அரசு பணத்தை அச்சிடவேண்டுமென சில காலம் முன்பிருந்தே கூறிவருகிறேன் . நான் இந்த கருத்தை ஆதரிக்கிறேன் . முதல் அலையின்போது இதனை செய்திரு்ந்தால் மக்களுக்கு ஏற்பட்ட வலியை பெருமளவு குறைத்திருக்கலாம் இதனை நிச்சயமாக அரசு செய்திரு்க்க முடியும் . மக்களை முதலில் தடுப்பூசியைக் கொடுத்து காப்பாற்றியிருந்தால் பின்னால் கூட கடன்களுக்கான வாக்குறுதியை அரசு நிறுவனங்களுக்கு வழங்கியிருக்க முடியும் . ஆனால் அரசு தேவையில்லாமல் பயந்துவிட்டது . ஊக்கத்தொக்கையை அளித்தது நிச்சயம் அரசுக்கு வருவாயை வழங்கக்கூடியதுதான் . கடன்களை பற்றி கவலைப்படும் அரசு இப்படி ஒரு கோணத்தில் யோசிக்க

நாட்டைக் காப்பாற்ற போரத் செய்யும் காமெடி களேபரங்கள்! போரத் 2

படம்
            போரத் கஜக்ஸ்தான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டு குவாரியில் வேலை செய்யும் போரத் இம்முறை சர்வாதிகார அரசின் அனுமதி பெற்று , அமெரிக்காவிற்கு அனுப்ப ப்படுகிறார் . அங்கு அவர் அதிபருக்கு பரிசு ஒன்றை வழங்கி நாட்டின் மீதான தடைகளை நீ்க்கவேண்டும் . எப்போதும் போல போரத் தனது கோமாளித்தனங்களோடு அமெரிக்கா செல்கிறார் . புத்திசாலித்தனம் கொண்ட குரங்கை பரிசாக கொடுக்க நினைக்கிறார் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கூண்டில் அவரது மகள்தான் இருக்கிறாள் . ஆம் குரங்கை கொன்று தின்றுவிட்டு அவள்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள் . அதுவும் தனது மரப்பெட்டியில் . இதனால் அரசின் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க தனது மகளை பரிசாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறார் . மகளை கூண்டில் அடைத்து அழைத்துச்செல்கிறார் . உண்மையில் அவர் செய்யும் விஷயம் பற்றி அவருக்குத் தெரிந்ததா ? உண்மையில் பரிசை டிரம்புக்கு தர முடிந்த்தா அல்லது குறைந்தபட்சம் அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு அளிக்க முடிந்ததா ? என்பதுதான் இறுதிப்பகுதி .. அமெரிக்கா மற்றும் முஸ்லீம் நாடுகளை மையப்படுத்திய காமெடிதான் . ஆனால் நடப்பு நிகழ்வுகள் , ஆணா

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால