இடுகைகள்

விண்வெளி- சீனா சாட்டிலைட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவில் ஆராய்ச்சி செய்யும் சீனா!

படம்
நிலவில் சீனா! சீனா விரைவில் நிலவுக்கு இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பவிருக்கிறது. சாங்-4 என்ற செயற்கைக்கோளை வரும் டிசம்பரில் நிலவில் இறக்கி சோதனை செய்ய சீனாவில் தேசிய பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு தயாராக உள்ளது. நிலவிலுள்ள பாறைகள் குறித்தும், நிலவின் மறுபுறம் குறித்த ஆராய்ச்சியை மேம்படுத்தவும் சாங்-4 சாட்டிலைட்டை நிலவுக்கு அனுப்பவிருக்கிறது சீனா. ஜிசாங் மையத்தில் 3பி விண்கலத்தில் வைத்து சாங்-4 சாட்டிலைட் விண்ணுக்கு கிளம்புகிறது. 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை. இவ்வகையில் சீனா நிலவுக்கு மனிதர்களை விண்கலத்தில் அனுப்பிய சாதனைப் பட்டியலில்   இடம்பிடிக்க செய்யும் முயற்சி. அமெரிக்கா, ரஷ்யா நிலவுக்கு வீரர்களுடன் சென்று வந்து வெகுகாலத்திற்கு பிறகு சீனா அம்முயற்சியை மேற்கொள்கிறது.