இடுகைகள்

ஐம்புலன்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் - உணவை ஐம்புலன்களால் உள்வாங்கி உண்ணும் முறை!

படம்
    கவனம் ஒருமித்த உணவு உண்ணும் முறை – மைண்ட்ஃபுல்னெஸ் ஈட்டிங் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் உணவு உண்கிறோம். ஆனால் உணவை எந்தளவு கவனித்து உண்கிறோம் என்பதில்தான் சிக்கல் எழுகிறது. இதனால், ஒரு வாரத்தில் என்னென்ன வகையான உணவுகளை எப்போது, எந்தளவில் சாப்பிட்டோம் என்று தாளில் எழுதச்சொன்னால் நினைவுபடுத்த முடியாமல் தவித்துப்போய்விடுவோம். இதற்கு காரணம், சாப்பிடும்போது டிவி அல்லது ஓடிடியில் படம் பார்ப்பது, ஸ்பாடிபையில் பாடலை ஒலிக்கவிட்டு சாப்பிடுவது, நூல்களை படித்துக்கொண்டே சாப்பிடுவது   என நிறைய கவனத்தை சிதைக்கும் விஷயங்கள் உள்ளன.   இதன் விளைவாக, உணவு உண்ணும் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது, உணவின் அளவு கூடி, நாளடையில் உடல்பருமன் ஏற்படுகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோய், இதயநோய் பிரச்னைகள் எழுகின்றன. கவனம் ஒருமித்த உணவுமுறையில் உணவை எப்படி சாப்பிடுவது?, தட்டில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு அதன் வாசனையை முகர்ந்து பார்ந்து மிக நிதானமாக அதை உண்ணவேண்டும். இந்த நேரத்தில் ஒருவர் உணவைப் பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். ஐம்புலன்களாலும் உணவை உணர்ந்து சாப்பிட்டால்,