இடுகைகள்

என்பிஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்பிஆர், என்ஆர்சியில் ரகசியம் ஏதுமில்லை!

படம்
மக்கள்தொகை, குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்புகளுக்கும் அளிக்கப்படாது! சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை என்பதே இல்லை. மேலும் இதில் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை என்பதும் விடுபட்டுள்ளதே? குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்புப் படி சரியானதே. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளும்ன்றத்திற்கு உரிமை உண்டு. இதுபற்றி அரசமைப்புச் சட்டத்தில் 246 இதற்கான வழிகாட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன.  நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அங்கு இயற்றப்படும் சட்டம், அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கலாமா? நாங்கள் சட்டப்பிரிவு 14 படி, குடியுரிமைச்   சட்டத்தை உருவாகியுள்ளோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறியுள்ளோம். இந்திராகாந்தி, உகாண்டாவில் இடி அமீன் ஆட்சியின்போது அங்கிருந்தவர்களை இந்துக்களாக கருதி குடியுரிமையை அளித்தார்.மேலும் இந்

ஏ டூ இசட் இந்தியா எப்படி இருக்கும்?

படம்
அரசியலமைப்புச் சட்டத்தில் ஏ முதல் இசட் வரையில் பல்வேறு அர்த்தங்கள் உண்டு. அவற்றை நாம் இப்போது பார்ப்போம். இவை மிகச்சரியானவையா என்பதைவிட சரியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே முக்கியம். ஏ –அம்பேத்கர் காந்தியின் மென்மையான இந்துத்துவத்திற்கு எதிராக போராடி சேகுவேரா. இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த குழுவின் தலைவர். அவர் ஏற்ற அரசியல் பணிகளிலும் தன் கருத்தை உள்ளே நுழைத்து சமூகத்தில் அனைவருக்குமான இடத்தை உறுதி செய்தார். தன் அரசியல் பணிகளுக்கு இடையில் ஏராளமாக எழுதியவர். பி – பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார். ஆனால் இதுபற்றிய எந்த ஆர்வமும் மக்களுக்கு கிடையாது. ஏனெனில் வெங்காயம் விலை ஏறியதிலிருந்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் வரை அம்மணி பேசிய அரிய கருத்துக்களை அவரது கட்சியினரே சகித்துக் கொள்ள முடியவில்லை. சட்டப்பிரிவு 112, இதனை ஆண்டுதோறும் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை என்கிறது. இதனால் என்ன பயன்? பட்ஜெட் தயாரிப்பு அறிக்கை முடிந்தபின் அல்வா கிண்டி சாப்பிடுவார்கள். அதே அல்வாவில் மிஞ்சியதை மக்களுக்கு கொடு

சென்சஸிற்கும், என்பிஆருக்கும் என்ன வேறுபாடு? -2021 டாஸ்க் இதுதான்!

படம்
என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றுக்கு அடுத்த வரிசையில் என்பிஆர் செயல்பாட்டைத் தொடக்க நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, மக்கள்தொகையைக் கணக்கிட உதவும். இதில் பெயர் இருப்பதற்கும், குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தகவல்கள் பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தாமலிருக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுவாக அரசு இந்த உறுதியை எப்போதும் தந்த து கிடையாது. இனிமேலும் கிடையாது. மக்கள் தொகையைக் கணக்கிடும் தகவல், என்ஆர்சியுடன் இணைக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ஆர்சியின் முதல் கட்டப்பணி, இந்தியாவில் உள்ள மக்களைக் கணக்கிடுவதுதான். எனவே, இப்பணியை மாநில அரசு தொடங்க கூடாது என இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதன்வழியாகவும் சிறுபான்மையினரைக் கணக்கிட்டு அவர்களை தனி முகாம்களின் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்ன வேறுபாடு? மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அரசின் என்பிஆருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதோடு நிலப்பரப்பு சார்ந்த தகவல்களும் இதில் முக்கியமானவை. என்பிஆ