செஞ்சோளம் - மோயான்
செஞ்சோளம்
மோ – யான் தமிழில் தாமரைச்செல்வி :
மோ யான் இலக்கியத்திற்காக நோபல் பரிசை வென்ற புகழ்பெற்ற சீன எழுத்தாளர். பல முக்கிய படைப்புகளை சீன இலக்கியத்திற்குப் பங்களித்துள்ளார்.
தாமரைச்செல்வி, தென்றல் சிவகுமார் என்ற பெயரில் பலருக்கும் அறிமுகமானவர். இது இவரது ஐந்தாவது மொழிபெயர்ப்பு நூல்.
முதலில் இந்த நாவல் ஏன் மிகமுக்கியமான நாவலாகக் கருதப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். சாதாரண மனிதர்களின் வாயிலாக நாட்டின் சரித்திரத்தைக் கூறிய நாவல். இதற்கு முன் வரலாற்று நாயகர்களே கதாநாயகர்கள். Hallucinatory realism யுத்தியைக் கையாண்ட நாவலிது. மோ யான் நோபல் பரிசை வெல்ல இந்த யுத்தி முக்கிய காரணம். பெண்களை நாவலில் மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவலிது. பலர் வந்தாலும் பாட்டியே நாவலின் மையக்கதாபாத்திரம். எல்லாற்றிற்கும் மேலாக வரலாறு என்பது, நடந்ததைச் சொல்வது என்பதல்ல, சாதாரண மக்களின் நினைவுகள், கற்னைகளை மீட்டுருவாக்கம் செய்வது என்பதை உலகிற்குக் கூறிய நாவல்களில் ஒன்று.
1920களில் இருந்து இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கும் காலகட்டமே இந்த நாவலின் பெரும்பகுதி. பெயர் சொல்லாத பேரன், தன் பாட்டி, தாத்தா, அப்பா,அம்மா குறித்துப் பேசுகையில் கடந்த காலத்தையும் நினைவுகூர்கிறான். Graphic violence and Sex details நிறைந்த நாவல்( தாமரைச்செல்வி அந்த வெம்மையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறார்)
ஜப்பான் சீனாவிற்குள் புகுந்து எல்லாவித வன்முறைகளையும் நடத்துகிறது. இந்த நாவலில் வருபவர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்ட Communist Heros இல்லை, மாறாக கொள்ளைக்காரர்கள், ரவுடிக்கும்பல் & தாதாக்கள். ஜப்பானியருடன் போராடுவதை விட இவர்கள் தங்களுக்குள் அதிகம் சண்டையிட்டு அழிகிறார்கள்.
நாவல் நேர்க்கோட்டில் செல்லும் நாவலல்ல. உண்மையில் இது ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு. அதனால் கடந்த காலமும் நிகழ்காலமும் மாறிமாறிக் கலந்து வருகின்றன. ஏற்கனவே கூறிய சம்பவங்களை இன்னொருவர் சொல்கையில் கோணம் மாறி வருகின்றன. தனிப்பட்ட நினைவுகள், Myth, லரலாற்றுத் தகவல்கள் எல்லாம் கலக்கின்றன. கதைசொல்லியான பேரன் அடிக்கடி ஒதுங்கிக் கொண்டு முன்னோர்களின் குரலை ஒலிக்க விடுகிறார். நாட்டுப்புறக் கதை வடிவங்கள், மூடநம்பிக்கை, ஆவி பிடித்தல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட காட்சி அமைப்புகள் போன்றவை Hallucinatory realism யுத்தியில் சொல்லப்படுகின்றன.
முப்பதாண்டுகளுக்கு முன் வாசித்த நாவலில் இன்றும் நினைவிலிருக்கும் காட்சிகள் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் சண்டையும்,
இரண்டாம் பாட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளும். Stephen King அவருடைய
Gerald’s Game ல் இதே போன்ற நாய் வரும் காட்சியை வித்தியாசமான தொனியில் கூறியிருப்பார்.
தாத்தாவை விட பாட்டியின் கதாபத்திரம் சக்திவாய்ந்தது. குறிப்பாகப் புகுந்த வீட்டின் சொத்துக்களை முதன்முதலாக நிர்வாகம் செய்யும் காட்சிகள், ப்ளாக் ஜயை விட்டுத் தாத்தாவுடன் வர முடிவெடுப்பது, இரண்டாம் பாட்டியுடனான இறுதிக்காட்சிகள், ஜப்பானியரின் குண்டுகளைத் தாங்கிய கடைசிப்புன்னகை. பாட்டியே இந்த நாவலில் அதிகம் Score செய்வது இருப்பினும் அவரது Flawsஐயும் நாவல் குறிப்பிடத் தவறவில்லை.
மோ யானின் Landmark நாவலிது. உலக வாசகர்களை அதிகம் ஈர்த்த சீனநாவல். இந்த நாவலை மொழிபெயர்ப்பது என்பது எந்த மொழியிலும் சவாலாகவே இருக்கும். வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டிய நாவல். தாமரைச்செல்வியின் மொழிபெயர்ப்பு தென்றலைப் போல் இதமாக உள்ளது.
பிரதிக்கு:
எதிர்வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு ஜூலை 2026
விலை ரூ. 699
Published by சரவணன் மாணிக்கவாசகம்
An eccentric of all things readable, I am an ex-banker with overflowing bookshelves and a family that bears with it. I use this blog to pen down my views about things that intrigue me. If you care to share your thoughts, I am always open for any discussions/debates about books over a piping hot coffee. View all posts by சரவணன் மாணிக்கவாசகம
கருத்துகள்
கருத்துரையிடுக