இடுகைகள்

குங்குமம் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர்!

படம்
கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர் !- ச . அன்பரசு டாக்டர் , எஞ்சினியர் என உயர்கல்வி கற்றவர்கள் அடுத்த அப்டேட்டாக என்ன செய்வார்கள் ? ஏதேனும் எம்பஸி வாசலில் தேவுடு காத்து உடனே பாரீன் நிலத்தில் லைஃப் போட்டை நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவதுதான் கனவாக இருக்கும் . மகாராஷ்டிராவிலுள்ள பல் டாக்டர் , தன் கிளினிக்கிலேயே போன் மூலம் மக்களோடு மீட்டிங் போட்டு 70 கிராமங்களுக்கு மேல் சுகாதாரம் , குடிநீர் வசதி ஆகியவற்றை அவர்களோடு இணைந்து பெற்றுத்தந்துள்ளார் . மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள சதாரா நகரில் வாழும் பல்மருத்துவர் அவினாஷ் பொல்தான் அந்த உதாரண மனிதர் . அப்போது புனேவில் பாரதீய வித்யா பவன் பல்மருத்துவ கல்லூரியில் அவினாஷ் படித்துக்கொண்டிருந்தார் . இலவச சிகிச்சைக்காக கிராமங்களிலிருந்து அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்களைச் சந்தித்த அந்த நொடிதான் அவினாஷின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றியது . " என்னிடம் பேசிய விதவைப் பாட்டிக்கு ஈறுகள் பெரிதாக வீங்கியிருந்தன . இலவச சிகிச்சைக்காக மருத்துவமனை வரவே தன் வீட்டிலுள்ள பாத்திரங்களை அடகு வைத்துவிட்டு வந்திருந்தாள் என்பதை சொ

கிராமத்தை முன்னேற்றிய கலெக்டர் மனைவி

படம்
கிராமத்தை முன்னேற்றிய கலெக்டர் மனைவி - ச . அன்பரசு ஊரின் பஞ்சாயத்து தலைவர் என்றால் எப்படி இருப்பார் ? பயமுறுத்தும் முறுக்கு மீசையை முறுக்கியபடி , மக்களை ஏமாற்றத் தோதான பளீர் வெள்ளைச்சட்டை , எடுபிடிக்கு நான்கு பேர் என்பது போல்தானே ! பீகாரின் சிங்வாஹினி கிராமசபை தலைவரான ரிதி ஜெய்ஸ்வால் படாடோபங்களில்லாத மாறுபட்ட தலைவர் . சிங்வாஹினி கிராமத்திற்கான பல்வேறு திட்டங்களை மக்களோடு கைகோர்த்து செய்துவரும் தங்கப்பெண்மணி . பீகாரின் வைஷாலி கிராமத்தில் பிறந்த ரிதுவுக்கு 1996 ஆம் ஆண்டு ஐஏஸ் அதிகாரியான அருண்குமாருடன் திருமணமானது முதல் டெல்லி வாசம் . அவ்வப்போது தன் கணவரின் ஊரான சிங்வாஹினிக்கு வந்து செல்லும் சமயத்தில்தான் குடிநீர் , மின்சாரம் , கழிவறை , சாலைகள் என அடிப்படைத் தேவைகள் கூட இன்றி மக்கள் வேதனைப்படுவதைப் பார்த்து மனம் பதைபதைத்திருக்கிறார் . உடனே தன் முதல்முயற்சியாக பொகாரோ பகுதியில் பிஎட் முடித்துவிட்டு ஆசிரியையாக பணியாற்றுபவருக்கு , தன் சேமிப்புத்தொகையை மாதந்தோறும் தந்து வறுமையால் பள்ளிக்கு செல்லாத 360 குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஊக்குவித்திருக்கிறார் ரிது . இதன் விளைவாக ,

பெண்களால் எழும் நாகலாந்து!

படம்
பெண்களால் எழும் நாகலாந்து!- ச . அன்பரசு அற்புதமான சரமதி மலைத்தொடரை தன் அடையாளமாக   கொண்ட நாகலாந்து , அசாம் ,  அருணாசலப் பிரதேசம் , மியான்மரை ஆகிய நாடுகளுக்கு எல்லைப்புறநாடு . விவசாயத்தை முதன்மையாக கொண்ட இந்நாட்டில் 16 பழங்குடிகள் உண்டு என்றாலும் பெண்கள் அரசியல் உட்பட நிர்வாக அமைப்பில் இல்லாதது வேதனை . கடந்த 2005 ஆம் ஆண்டு நாகர்பாரி கிராமசபை கவுன்சில் தலைவர் தேர்தலில் ஆணாதிக்கவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களால் தலைவராக தேர்வான டோகலி கிகோன் என்ற பெண்மணி மட்டுமே கடந்த பனிரெண்டு ஆண்டுகளில் கிராமசபைக்கு தேர்வாகி வந்த ஒரே பெண் . பதவிக்கு செலக்ட் ஆனபோதும் இவர்தான் கிராமசபை கவுன்சிலில் இடம்பெற்ற ஒரே ஒரு அரிய பெண்ணும் கூட . " தேர்தலின்போது ஆண்கள் தொடர்ந்து என் நம்பிக்கையை குலைக்கவே முயற்சித்தனர் . சிறைக்கு , ராணுவ முகாமுக்கு எப்படி ஒரு பெண் செல்லமுடியும் ? என்று கேள்வி கேட்டனர் . ஆனால் தேர்தலில் வென்று இவை அனைத்தையும் நான் செய்துகாட்டியிருக்கிறேனே " என உற்சாகமாக பேசுகிறார் கிகோன் . 1963 ஆம் ஆண்டு தனிமாநில அந்தஸ்து கிடைத்து 16 ஆவது மாநிலமாக நாகலாந்து

வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்! - ஆச்சர்ய அசாமி சினிமா

படம்
ஒரு கிராமத்தின் கனவு - ச . அன்பரசு ஹாலிவுட் , பாலிவுட் என அகில உலகமே பில்லியன்களில் காசு பார்க்க கமர்ஷியல் குருமாக்களாக சினிமாக்களை எடுத்து தள்ளிக்கொண்டிருக்க மண்மணத்துடன் எடுக்கப்பட்ட அசாம் திரைப்படம் ஒன்று புகழ்பெற்ற கனடாவின் டொரண்டோ திரைப்பட விழாவில் சைலண்டாக பங்குபெற்று சாதித்திருக்கிறது . படத்தின் இயக்குநரான ரீமாதாஸ் ஒன் வுமன் ஆர்மியாக வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை எடுத்திருப்பது ஆச்சரியம் . மும்பையில் நாடகத்திலும் , மாடலாக பணியாற்றிய ரீமாதாஸ் தன் சினிமா அனுபவங்களை வைத்தே வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார் . படத்தின் லொக்கேஷன் , அவரது கிராமமான காம்ரூப் . நடிகர்களும் , அக்கிராமத்தினர்தான் . கிராமத்தில் வசிக்கும் சிறுமி துனுவுக்கு கிடார் இசைக்கலைஞர் கனவு . விதவைத்தாய் ,  கூலிவேலைக்கார சகோதரர் என வறுமை சூழலில் அவளது கனவு நிஜமானதா என்பதைச் சொல்லும் படம்தான் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் . " முழுநீள படத்தை என்னால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை முதலில் கிடையாது . படத்திற்கான முதல்கட்டவேலைகளை நான்கு மாதங்கள் டைம்டேபிள் போட்டு முடித்தபின்பே , கான

விபத்துகளுக்கு க்ரீன் சிக்னல்?

படம்
விபத்துகளுக்கு க்ரீன் சிக்னல் ?- மக்களை காவு கொடுக்கும் ரயில்துறை அலட்சியம் - ச . அன்பரசு 1919 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜெனரல் டயரால் நடத்தப்பட்ட ஜாலியன்வாலாபாக் படுகொலையை இன்றும் நெஞ்சு விம்ம குரல் தழுதழுக்க பேசிவருகிறோம் . சரி , அது ஆங்கிலேய ஆட்சியின் அநீதி . சுதந்திரமான புதிய இந்தியாவில் தினசரி நம் கண்முன்னே நிகழும் ரயில் விபத்துகளின் மரணங்களுக்கு பலியாகும் மக்கள் , அதற்கு காரணமான அதிகாரிகள் , பணியாளர்கள் என ஒருவர்கூட தண்டிக்கப்படுவதில்லை என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு ? நடந்த ட்ரெயின் விபத்துகளின் மனிதர்களின் பங்கு 80%. இவ்வாண்டு மட்டும் 238 பேர் ரயில் விபத்துகளில் பலியாயினர் . அதிலும் கடந்த மார்ச்சில் பலியானவர்கள் 50 க்கும் மேல் . விபத்துகளின் சுனாமி ! 1988 ஆம் கேரளாவின் பெருமான்பால ரயில்தடம்புரள்வு ( பலி 105) தொடங்கி உ . பி ஃபிரோஷாபாத் (1995, பலி 358), பஞ்சாப் கன்னா (1998, பலி 212), வங்கம் கெய்சல் (1999 பலி 400), கேரளா கடலுங்குடி (2001, பலி 57), பீகார் ரஃபிகன்ச் (2002,140), உ . பி (2016, பலி 150) என பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 422 பேர் .

குங்குமம் ஒன்பேஜ்!

படம்
மூங்கிலில் மெகா துர்க்கா  துர்க்கை பூஜையில் மெகா சைஸ் அலங்கார துர்க்கா சிலைகள்தான் இதில் பெரிய வசீகரம் . முதலில் 110 அடிதான் லட்சியம் . நிச்சயமானது 70 அடிதான் .  மேற்கு வங்காளத்தின் பிஷ்ணுபூரில் 70 தொழிலாளர்களின் உழைப்பில் டிசைனர் நூருதீன் அகமது வழிகாட்டுதலில் ஏறத்தாழ 6 ஆயிரம் மூங்கில் பீஸ்களை இணைத்து துர்க்கையை உருவாக்கியுள்ளனர் . பிஜூலி , மோகோல் உள்ளிட்ட மூங்கில் வகைகளில் இதில் இடம்பெற்றுள்ளன . " ஒருவாரம் இரவும் பகலுமாக செய்த வேலை இது . மக்களின் ஆதரவு துர்க்கையை நாங்கள் 100 அடியில் அமைக்க உதவும் " என்கிறார் அகமது உற்சாகமாக . கின்னஸ் சாதனைக்கு 110 அடியில் துர்க்கையை மூங்கிலில் அமைத்தாலும் அது சரிந்துவிட்டது . நிச்சயம் சாதிப்போம் என முயற்சித்து வருகின்றனர் அகமது அண்ட் கோ .      ஹேர்கட் தடா ! பறவைக்காய்ச்சல் , மூளைக்காய்ச்சல் என இதற்கெல்லாம் நாட்டுக்குள் நுழையாதே என தடா சொல்லுவார்கள் .  முடி பயத்தில் காஷ்மீரில் அந்நியர்களுக்கு தடை சொல்லியிருக்கிறார்கள் . எதற்கு இந்த தெனாலி பயம் ? ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில்தான் இந்த பீதி . பின்னே