இடுகைகள்

ஒடிஸி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

கடவுளின் சாபத்தால் நாட்டுக்கு தனியாக சொல்லும் மன்னன் ஒடிஸியஸ் ! ஹோமரின் ஒடிஸி - தமிழில் சிவன்

படம்
  ஹோமரின் ஒடிஸி தமிழில் சிவன் சுருக்கப்பட்ட வடிவம் மொத்த நூலின் பக்கங்களே 111 தான்.  இதாக்கா நாட்டு அரசர் ஒடிஸியஸ் ட்ரோய் போரில் பங்கேற்று வெற்றி பெறுகிறார். அந்த வெற்றிக் களிப்புடன் கடலில் வருகையில் கடவுள் ஒருவரின் மகனுடன் சண்டை போட நேரிடுகிறது. அவர் ஒரு அரக்கன், ஒடிஸியஸின் படை வீரர்கள் தக்காளி தொக்கு போல கொன்று சாப்பிட, ஒடிஸியஸ் அவனது ஒற்றைக் கண்ணை குருடாக்குகிறான். இதனால் கோபம் கொண்டு வன்மத்தோடு ஒடிஸியஸ் மற்றும் அவனது படைவீரர்கள் மீது சாபம் விடப்படுகிறது. அதாவது, அவர்கள் தங்கள் சொந்த  நாட்டை சென்று சேர மாட்டார்கள் என. இதன் அர்த்தம் சொந்த நாட்டுக்கு செல்லும் வழியிலே வீரர்கள் அழிந்துபோவார்கள் என.  இந்த சாபத்தை சக கடவுளான ஸியூஸ் கூட மாற்றமுடியாது. ஏனெனில் சாபம் கொடுத்தது கண் குருடான பையனின் அப்பா, வேறு யாருமில்லை. ஸியூஸின் தம்பி தான். அவரும் கடவுள் என்பதால் தன் பக்தன் ஒடிஸியை காக்க தனது மகள் ஆதீனி தேவியை அனுப்பி வைக்கிறார் ஸியூஸ்.  நூல் முழுக்க ஒடிஸியஸும், ஆதீனிதேவியும் தான் நிறைந்திருக்கிறார்கள். ஒடிஸியஸ் எப்போது தடுமாறினாலும் அவனுக்கு உதவிகளை நிரம்பச்செய்து சாபத்தை தடுக்காமலும் அதேசம