இடுகைகள்

வல்லரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!

படம்
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...

வணிகத்திற்காக நடந்த போர்!

படம்
    பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம...

சீனா, வளர்ச்சிக்கு கொடுத்த விலை என்ன? சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன்

              சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன் அனைவரும் தெற்கு சீன கடல், பிற நாடுகளுக்கு வழங்கும் கடன் என பல விஷயங்களிலும் சீனாவை கவலையுடன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு எப்படி முன்னேறியது என்பதை சொல்லும் ஏராளமான நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. ரமணன் எழுதியுள்ள இந்த நூல் அந்த வகையில் ஏராளமான தகவல்கள், ஆராய்ச்சிகள் என சீனாவின் வளர்ந்த கதையை எளிமையாக முன்வைக்கிறது. சீனாவின் வளர்ச்சி, உள்நாட்டில் எதிர்கொண்ட சவால்கள், கிராமங்களை அழித்து அதனை நகரங்களாக்கி குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை தயாரிப்பு என பல்வேறு சர்ச்சைக்குள்ளான சமாச்சாரங்களையும் நூலில் சொல்லியிருக்கிறார்கள். மாசேதுங் காலத்தில் சீனாவில் தொடங்கிய கலாசார, சமூக பொருளாதார மாற்றங்கள், டொங்பிங், ஜின்பிங் வரை அப்படியே தொடர்வதையும் சிறப்பாக விவரித்துள்ளார் ரமணன். குறிப்பாக நிலச்சீர்திருத்தங்கள். இந்த விஷயத்தில் இந்தியா கற்றுக்கொள்ள நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீர்த்திருத்தங்களாக முயன்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்த நாடு சீனா. இவற்றை ஒரே நேரத்தில் முயல்வதால் இந்தியா...