முத்தாரம் ஒரு பக்கம்!

டிஜிட்டல் புத்துயிர்ப்பு ! உலகின் தொன்மையான பல்வேறு கட்டிடங்கள் , அருங்காட்சியங்கள் போர் , இயற்கைச்சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும் அதனை அதன் பாரம்பரியம் குறையாமல் மீட்க பல நாடுகளும் கடுமையாக போராடுகின்றன . எப்படி ? லேஸர் ஸ்கேனிங் முறையில் ட்ரோன் விமானங்களில் கேமராவை இணைத்து 3D முறையில் கட்டிடங்களை ஆராய்ச்சியாளர்கள் படமாக்குகிறார்கள் . கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு கட்டிட மாதிரிகளை கணினியில் 3D மாடல்களாக உருவாக்குகின்றனர் . இதனை VR ஹெட்செட் மூலம் துல்லியமாக பார்க்க முடியும் . இந்த டெக்னிக்கை பயன்படுத்தி இத்தாலியிலுள்ள டஸ்கனியிலுள்ள வோல்டெரா எனும் 3 ஆயிரம் பழமையான நகரை புதுப்பித்துள்ளனர் தொல்லியலாளர்கள் . இன்டர்நெட்டில் போதைப்பொருட்கள் ! LSD(Lyergic acid diethylamide) 1960 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆர்மி டெஸ்ட் செய்த வேதிப்பொருள் . பார்முலா C20H25N3O. சோதனை அபாரவெற்றி . எனவே மக்கள் பயன்பாட்டிற்கு உடனடி தடை விதிக்கப்பட்டது . ஸ்விட்சர்லாந்தின் ஆல்பர்ட் ஹாஃப்மன் கண்பிடித்த LSD, உடலில் சேர்ந்தபின் 8-12 நேரங்களுக்கு மூளையில் மேஜிக் காட்சிகளை உருவ