கோமாளிமேடை ஸ்பெஷல்ஸ்!- ரோனி





இது ஜிஎஸ்டி பேபி

இன்று ஊரின் வாய்க்கு கிடைத்த கிலோ கணக்கிலான அவல்   ஜிஎஸ்டி மேட்டர்தான். கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை பின்னாளில் மக்கள் மறந்தாலும் ஜிஎஸ்டி என்ற பெயரை யாரும் மறக்கமுடியாதபடி ராஜஸ்தான் பெண்மணி செய்துவிட்டார். அப்படி என்ன செய்தார்?


மாநிலத்திலேயே முதல் ஆளாக ஜிஎஸ்டி கட்டிவிட்டாரா? இல்லை இது அதுக்கும் மேல் வேற லெவல்!  ராஜஸ்தானின் பேவா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஜூலை 1 அன்று நள்ளிரவு 12.02 மணிக்கு மிகச்சரியாக குழந்தை பிறந்தது. அதேசமயம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியும் அதிரடியாக அமலாகி ஊரே அதைப்பற்றி பேசத்தொடங்க, ஜிஎஸ்டியை விட ஃபேமஸாக வேறு பெயர் எதற்கு? என தன் குழந்தைக்கும் ஜிஎஸ்டி என சிம்பிளாக பெயர் வைத்துவிட்டார் இந்த ராஜஸ்தான் தாய். தகவல் கசிந்தால் விடுவார்களா காவி பாய்ஸ்? உடனே ட்விட்டரில் வாழ்த்துகளை குவித்ததோடு, ஜிஎஸ்டியின் சக்திக்கு இதுவே சாட்சி என இக்குழந்தையின் பிறப்பையும் ராஜஸ்தான் மாநிலமே கொண்டாடத் தொடங்கிவிட்டதுதான் மிரட்டல். தெறி பேபி!   

இந்தியன்போலீசின் வீரச்செயல்!

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் சிதோரா கிராம பள்ளி அது. பள்ளி அருகே வெடிகுண்டு ஒன்று தட்டுப்பட, உடனே 100 க்கு போன் வந்துவிட்டது. உடனே கிளம்பி வந்தது போலீஸ் படையிலிருந்த ஹெட் கான்ஸ்டபிள் என்ன செய்தார் தெரியுமா?

வெடிகுண்டை குழந்தைபோல தூக்கி தோளில் வைத்த அபிஷேக் படேலை ஆளைக்காணோம். மின்னல் வேகத்தில் ஓடிவிட்டார். எங்கே? வெடிகுண்டை டிஸ்போஸ் செய்யவேண்டுமே, அதற்குத்தான் அந்த 1 கி.மீ தடதட ஓட்டம்."400 குழந்தைகள் படிக்கும் பள்ளி அது. குடியிருப்பும் அருகிலிருந்தன. எனவே வெடிகுண்டை அப்புறப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே என் மனதிலிருந்தது" என்கிறார் ஹெட் கான்ஸ்டபிள் அபிஷேக் படேல். அருகில்தான் ராணுவப்பயிற்சி தளம் உள்ளது. எனவே அங்கிருந்து தவறுதலாக வெடிகுண்டு கிராமத்தின் பள்ளி அருகே விழுந்திருக்கலாம் என தகவல் சொல்கிறார் ஐஜி சாகர் சதீஷ் சக்சேனா. வடஇந்தியா துரைசிங்கம்!
��டத் தொடங்கிவிட்டதுதான் மிரட்டல். தெறி பேபி!   

ஆல்ரவுண்டர் கிரண்பேடி!

கிரண்பேடி காவல்துறையில் இருக்கும்போதிலிருந்து அதிரடிக்கு புகழ்பெற்றவர். ஆளுநராக்கி உட்காரவைத்தால் அக்கடா என உட்கார்ந்துவிட முடியுமா? என சில மாஸ் அட்டெம்ப்டுகளை முயற்சித்தார். ஆனால் அம்மணியின் சின்சியர் முயற்சியை இடியாப்ப சிக்கலாக்கி விட்டது ஹெல்மெட்.

அண்மையில் கிரண்பேடி, தன் அலுவலக ஊழியரோடு ஸ்கூட்டரில் நகர்வலம் வந்து பலருக்கும் பீதியைக் கிளப்பினார். அந்த போட்டோவை போட்டு நகரம் 'பாதுகாப்பாக இருக்கிறது ஏதாவது பிரச்னை என்றால் தகவல் கொடுங்கள்' என மக்கள் மீது அம்புட்டு பாசமாகத்தான் ட்விட் செய்தார். ஆனால் ஹெல்மெட்டை மறந்துவிட்டார். விடுவார்களா நெட்டிசன்கள்? "நீங்கள் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் ஹெல்மெட் போட்டு வண்டியில் செல்வதுதானே கவர்னருக்கு அழகு. சட்டம் எல்லாம் மக்களுக்குத்தானா?" என தாளிக்க, கவர்னர் கிரண்பேடி தடுமாறிவிட்டார். பின்னர், "பெண்கள் வண்டி ஓட்டுவதை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதை காணத்தான் ஹெல்மெட் இல்லாத ட்ரிப்" என சமாளித்திருக்கிறார். முதல்வருக்கு என்னாச்சு?
 லக்காய் மாட்டிக்கிச்சு!

லக்காய் மாட்டினாலும் தீராத கிக்காய் ஷாப்பிங் செய்வதுதானே பெண்களின் உலக வழக்கம். யுனிவர்சிட்டி பெண் ஒருவருக்கு ராங் ரூட்டில் லக்காய் கிடைத்த பணம் என்னாச்சு தெரியுமா?

தென் ஆப்பிரிக்காவின் வால்டர் சிசுலு பல்கலையில் நடந்தது சிம்பிள் தவறுதான். விளைவு? அரசே தவிக்கும் அவலம்.கடந்த ஜூனில் தனியார் நிறுவனம் ஒன்று அரசு கல்விக்கடனில் உணவுக்காக தரவேண்டிய  தொகை 107 டாலர்களை மாணவி ஒருவருக்கு மாற்றும்போது திடீர் குளறுபடி செய்ய, தவறுதலாக ஒரு மில்லியன் டாலர்கள் மாணவியின் வங்கிக்கணக்கில் ஏறிவிட்டது. எங்கே தப்பு என அரசு தவறை என்கொய்ரியில் கண்டுபிடித்து விட்டதுதான். ஆனால் என்ன புண்ணியம், பார்ட்டி, ஆப்பிள்போன், டிசைனர் ட்ரெஸ் என 61 ஆயிரம் டாலர்களை காலி செய்துவிட்டார் அந்த மாணவி. ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா தேசிய மாணவர் கல்விநிதி ஆணையம், குவியும் கல்விக்கடன் அப்ளிகேஷன்களால் தள்ளாடி வரும் நிலையில் இந்த விவகாரம் அரசின் திறனுக்கு ஸ்வீட் சாம்பிள்.   

 ஆர்மிக்கு அவசர உதவி 

சப்பாத்தி சரியில்லை, சாம்பாரில் பருப்பே இல்லை என விரக்தியாகி இந்திய ராணுவ வீரர்கள் சோஷியல் மீடியாவில் கம்ப்ளைண்டுகளை டன்கணக்கில் அனுப்பிவரும் நிலையில், ராணுவத்தை கான்க்ரீடாக்க, ஆயுதசூட் ஒன்றை டிசைன் செய்துள்ளார் வாரணாசி யூத் ஒருவர்.

வாரணாசியைச்சேர்ந்த  ஷியாம் சௌராஸியாவுக்கு சூப்பர்ஹீரோ படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். இந்திய சோல்ஜர்களை சிங்கிள் சூப்பர்ஹீரோக்களாக்க பிளான் செய்தவரின் அதிரடி கண்டுபிடிப்புதான் இந்த ஆல் நியூ ஆயுத சூட். இன்டர்நெட் வழியாக ஜிபிஎஸ் பயன்படுத்தி சூப்பராக ஆர்மி சூட்டை கன்ட்ரோல் செய்யலாம் ப்ரோ என படுபாந்தமாக பிராமிஸ் செய்கிறார் ஷியாம். "பார்டரில் பாடுபடும் வீரர்களுக்கு ஆர்மிசூட் பக்காவாக பொருந்தும். ஆராய்ச்சிக்கு அரசு கிடைத்தால் நன்றாக இருக்கும்" என உற்சாகமாகிறார் ஷியாம். எமர்ஜென்சி வெப்பன்!
    

e:20.0pt;font-family:TAUN_Elango_Valluvan'>