முத்தாரம் ஒரு பக்கம்!




ரோல்ஸ்‌ராய்ஸின் அட்டகாச படகு!

ரோல்ஸ்ராய்ஸ் கார் சூப்பர் சொகுசு கார்களுக்கு பிரபலம்தற்போது ஆட்டோமேடிக் படகு தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது புது நியூஸ்

கப்பல் உருவாக்கி அதில் கேப்டன் வேலையாட்களை பணிக்கு சேர்த்து என எக்கச்சக்க செலவு பிடிப்பதால் அதனை குறைக்க ஆட்டோமேடிக் கப்பல் ரோல்ஸ்‌ராய்ஸின் ஐடியா. 60 மீ. நீளத்தில் மணிக்கு 28 கி.மீ வேகம் செல்லும் ரோந்து படகை உருவாக்கி வருகிறது ரோல்ஸ்‌ராய்ஸ். முழுக்க எலக்ட்ரிக்மயமான கப்பலில், MTU 4000 ரக ஜெனரேட்டர்கள், 3 ஆயிரம் கி.வாட் சக்தி கொண்ட சோலார்பேனல் என வசதிகளில் ஆளை அசத்துகிறது இந்த புதிய படகு. "மனிதர்களைக் கொண்ட படகுகளைவிட ஏஐ சென்சார்களைக் கொண்ட தானியங்கி படகுகள் பாதுகாப்பானவை" என்கிறார் ரோல்ஸ்‌ராய்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் படகு பிரிவு தலைவர் பெஞ்சமின் தோர்ப்.




 ஆன்டிவைரஸூக்கு அமெரிக்கா தடை!

அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்பு, அரசு அமைப்புகள் அனைத்தும் 3 மாதத்திற்குள் காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் சேவைகளை துண்டிக்க உத்தரவிட்டுள்ளதை வாஷிங்டன் போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.

"ரஷ்ய உளவுத்துறை உள்ளிட்ட அந்நாட்டு அமைப்புகள் உள்நாட்டு சட்டப்படி காஸ்பர்ஸ்கை நிறுவனத்தின் மூலம் பல்வேறு தகவல்களை பெறுவதற்கு வாய்ப்புள்ளது" என்கிறது அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்பின் அறிக்கை. உலகின் மிக பழமையான ஆன்டிவைரஸ் நிறுவனமான காஸ்பர்ஸ்கைக்கு 400 மில்லியன் பயனர்கள் உண்டு. 85% வருமானம் ரஷ்யாவுக்கு வெளியே கிடைத்து வந்த நிலையில் காஸ்பர்ஸ்கைக்கு இப்படியொரு தடை. "இணையதாக்குதல் விஷயத்தில் எந்த நாட்டுக்கும் நாங்கள் ஆதரவில்லை. இருநாடுகளின் அரசியலில் நாங்கள் பழிவாங்கப்படுகிறோம்" என்பது நிறுவனத்தின் வாதம். காஸ்பர்ஸ்கை மற்றும் FSB என்ற ரஷ்ய பாதுகாப்பு நிறுவனத்துக்கும் தொடர்புள்ளது என சர்ச்சை இமெயில்களை அமெரிக்க வார இதழான ப்ளூம்பெர்க் பிஸினஸ்வீக் கட்டுரை வெளியிட்டுள்ளது விவகாரத்தை சூடாக்கியுள்ளது.      



 கேன்சரைக் கண்டுபிடிக்கும் பேனா!

கேன்சரை சாதாரணமாக டெஸ்டில் கண்டுபிடிப்பதே கஷ்டம். ஆனால் அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெறும் பத்தே பத்து நிமிடத்தில் கேன்சரை கண்டறியும் சூப்பர் பேனாவை கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பான MasSpec Pen என்ற பேனா, கேன்சர் செல்களை கண்டுபிடிப்பதில் 96% துல்லியம் கொண்டது. 253 மனிதர்களின் பல்வேறு உள்ளுறுப்புகளின் திசுக்களை சோதித்து இந்த ஆராய்ச்சி முடிவு சயின்ஸ் ட்ரான்ஸ்லேஷனல மெடிசன் இதழில் வெளியாகியுள்ளது. தற்போது கேன்சர் அறுவைசிகிச்சைக்கு, நோயாளியின் திசுக்களை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ப்ரோஷன் டெக்னிக் மூலம் நோயை சோதிக்க ஆகும் காலம் 20 நிமிடங்கள் மட்டுமே. சோதனைக்கு 10 மைக்ரோலிட்டர் தேவை. தற்போது சோதனை முறையில் உள்ள இந்த பேனா அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும்.
normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'> 


 நிலவில் நீர் இருக்கிறதா?

கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா என்பதைவிட நிலவில் நீர் இருக்கிறதா என்பதை இனி சாட்டிலைட்கள் ஆராய ப்ரௌன் பல்கலைக்கழகம் மேப் போட்டு கொடுத்திருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு நிலவின் மண்ணில் நீருக்கு ஆதாரமான ஹைட்ராக்சில்(ஹைட்ரஜன்1, ஆக்சிஜன்1) மூலக்கூறை கண்டுபிடித்தனர். இதை சந்திரயான் முன்னமே கண்டுபிடித்தது நமது சாதனை. "துருவப்பகுதி கடந்து நிலவில் மேற்பரப்பில் பல்வேறு இடங்களிலும் நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது" என்கிறார் ஹவாய் பல்கலை ஆராய்ச்சியாளரும், ப்ரௌன் பல்கலையின் முன்னாள் மாணவருமான ஷூவாய் லீ. நிலவில் 750 இடங்களில் இதற்கான வாய்ப்புள்ளதாக கணக்கிட்டிருக்கிறார்கள். "எங்களுடைய வரைபடம் காட்டும் நிலவின் மண், சூரிய ஒளி ஆகியவற்றின் தாக்கம் இதில் ஆராயப்படவேண்டியது. நீர் எப்படி பல்வேறு இடங்களுக்கும் செல்கிறது என்பது வியப்பு தருகிறது. எதிர்காலத்தில் இந்த நீராதாரம் எரிபொருளாக, விண்வெளி வீரர்களுக்கான குடிநீராகவும் பயன்பட வாய்ப்புள்ளது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ப்ரௌன் பல்கலையின் பேராசிரியரான ரால்ப் மில்லிகென்.
Valluvan'> 


 கென்யாவில் அரிய வரிக்குதிரை!

அண்மையில் கென்யாவில் ஒரு ஜோடி அரிய வரிக்குதிரைகள் உலாவுவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். பட்டை டிசைன் வரிக்குதிரைகள் யூஸூவல். ஆனால் இவை ப்யூர் வெள்ளை நிறத்தில் ஆச்சரியமூட்டுகின்றன. இந்த ப்ளைன் வரிக்குதிரைகள் எப்படி புதிய விலங்கா? வரிக்குதிரைகளுக்கு ஏற்படும் Leucism என்ற குறைபாடே வெள்ளை நிறத்திற்கு காரணம்.

இஷாக்பினி ஹிரோலா காப்பகத்தில் இந்த வரிக்குதிரைகள் தாயும் மகளுமாக பாதுகாப்பட்டு வருகின்றன. உலகின் மிக அரிய விலங்குகளை பாதுகாக்கும் ஹிரோலா பாதுகாப்பு திட்டம்(HCP) தற்போது அங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. "தாய் வரிக்குதிரை தன் குட்டியை மிகவும் பத்திரமாக தனக்கு பின்னாலேயே இருக்குமாறு செய்து மேய்ந்துகொண்டு இருந்தது" என்கிறார் அங்குள்ள வனப்பாதுகாவலர்.

சோமாலியா, எத்தியோப்பியா, கென்யாவின் வடக்குப்பகுதி ஆகிய இடங்களில் வாழும் இந்த வரிக்குதிரைகள் உலகில் 8,500 மட்டுமே உள்ளன.
ght: normal;mso-pagination:none;mso-layout-grid-align:none;text-autospace:none'> 

சைக்கிளில் உலக சாதனை!

மார்க் ப்யூமான்ட் நீங்கள் இந்த தகவலைப் படிக்கும்போது 80 நாட்களில் உலகை சைக்கிளில் சுற்றிவந்த ரெக்கார்டை செய்திருக்க கூடும்.

ஜூலை மாதம் 2 ஆம் தேதியிலிருந்து தினசரி 16 மணிநேரம் சைக்கிள் பயணத்தில் 386 கி.மீ கடந்து இச்சாதனையை எட்டிப்பிடித்திருக்கிறார். இதற்கு முந்தைய சாதனை,  நியூசிலாந்தின் ஆண்ட்ரூ  நிக்கோல்சன் 123 நாட்களில் சைக்கிளில் உலகை சுற்றி வந்ததே சாதனை.

2008 ஆம் ஆண்டில் உலகை 195 நாட்களில் சைக்கிளில் கடந்த சாதனையாளர்தான் ப்யூமான்ட். தன் 12 வயதில் ஸ்காட்லாந்தில் சைக்கிளிலேயே ஸ்மார்டாக பயணித்த தில் பார்ட்டி. பாரீசில் கிளம்புபவர், பெய்ஜிங் வழியாக போலாந்து, லிதுவேனியா, ரஷ்யா, மங்கோலியா, ஆஸ்திரேலியாவின் பெர்த், பிரிஸ்பேன், நியூசிலாந்தின் ஆக்லாந்து, கனடாவின் ஹாலிஃபேக்ஸ் இறுதியாக பாரீசின் லிஸ்பனின் பயணம் இறுதியாகிறது.  

கட்டிடக்கலை நிறுவனமான Orkidstudio மற்றும் தொடக்க கல்வி நிறுவனமான Twinkl ஆகிய அமைப்புகளுக்கு இப்பயணம் மூலம் நிதி சேர்ப்பது மார்க்கின் லட்சியம்.  

ஆப்பிள் X!

ஆப்பிள் ஐபோன்கள் சந்தைக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டன. அண்மையில் ஆப்பிள் 8,8 Plus,X என மூன்று போன்களை ஒரேநேரத்தில் ரிலீஸ் செய்தது. புது போனில் என்ன புதுசு?

Qi டெக்னாலஜியில் ஸ்டார்பக்ஸில் ஆப்பிளை வயர்லஸ் முறையில் சார்ஜ் செய்யலாம். போனின் பின்புறம் கண்ணாடி என்பதால் ஃப்யூச்சர் ஸ்மார்ட்போன் என ஏக புகழ். ஆப்பிளின் ட்ரூடோன் திரையமைப்பில் கிறிஸ்டல் கிளியர் திரை கண்களை டயர்ட் செய்யாது. A11 பயோனிக் ப்ரோசசர், 5.8 இன்ச் OLED ஸ்க்ரீன், ஆக்மெண்ட் ரியாலிட்டி வசதி மிரட்டுகிறது.

ஹோம் பட்டன் கிடையாது என்பதால் முகத்தின் மூலமே ஐபோனை திறந்து அன்லாக் செய்யும் வசதி புதுசு. அனிமோஜி,போர்ட்ரைட் ஆகியவை செல்ஃபீக்கு சிறப்பு சேர்க்கின்றன. 12எம்பி கேமரா, A11 சிப், 7 எம்பி செல்ஃபீ கேமரா, வயர்லெஸ் சார்ஜ்,1p7 வாட்டர், டஸ்ட் ப்ரூப்,3D டச், 64-254GB ஸ்டோரேஜ் மூன்று போன்களுக்கும் பொது வசதிகள்.   

 தொகுப்பு: கா.சி.வின்சென்ட்