கேலக்ஸி உருவானது எப்படி? -ச.அன்பரசு
கேலக்ஸி உருவானது
எப்படி?
-ச.அன்பரசு
உங்கள் செல்லக்காதலிக்கு
கோன் ஐஸை வாங்கி ஊட்டிவிட்டு காசு கொடுக்கும்போது, மனைவி உங்களை பர்சேஸிங்குக்காக
சாலையில் இழுத்துப்பிடித்து சிக்னலில் க்ரீன் விழ காத்திருக்கும்போது, மன்த் எண்டில் நண்பணுக்கு இருபது
ரூபாய் கடன் கொடுக்கலாம் என்று நினைக்கும்போது திடீரென உங்கள் உருவம் துகள்களாக மறைந்தால்
எப்படியிருக்கும்? சுஹானுபவம் என பதில் சொல்வீர்கள். பாஸ்! நாம் உருவானதே அப்படித்தான் என அதிரடிக்கிறார்கள்
அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளர்கள்.
பால்வெளியில் தொலைதூர
விண்மீன் கூட்டத்திலிருந்து பெருவெடிப்பு ஏற்பட்டதால், காற்றுவழியாக
பரவிய துகள்களின் வழியாக அகதிகளாக அல்லது பயணிகளாக வந்தவர்கள்தான் மனிதர்கள் என்று
கூறுகிறது இந்த அதிரடி ஆய்வு.
காற்று கடுகளவும்
இல்லாத இடத்தில் எப்படி நிகழ்ந்திருக்கும் பெருவெளி வெடிப்பு?
பால்வெளியில் உள்ள
வாயுத்துகள்கள் ஒரு நொடிக்கு பல கி.மீ வேகத்தில் வீண்மீன் கூட்டத்தின்
மீது தடார் என்று ஹைஸ்பீடில் மோத, நட்சத்திரங்கள் அந்த வேகத்தால்
பிளக்கப்பட்டு இதில் வெளியான போட்டான்கள் வாயுக்களோடு இணைந்து பல்வேறு கேலக்ஸிகளுக்கு
இடையிலான வெளியை உருவாக்கின. இப்படி உருவானவை வெற்றிடத்தில் நுழைந்தவை
போக, இன்னும் மிச்சமிருக்கின்றன என்ற நம்பிக்கைதான் மேற்கண்ட
சோதனைக்கு அடிப்படை. இதில்தான் அணுக்கள் தோன்றி பால்வெளியை உருவாக்கின
என்பதுதான் தியரி. இதனை எஃகு உறுதியுடன் நம்பிய அமெரிக்காவின்
இலினாய்ஸைச் சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலையின் வானியற்பியலாளரான டேனியல் ஏங்கெல்ஸ்
அல்காஸர், பால்வெளியின் பிறப்பை அறிய முடிவெடுத்தனர்.
கேலக்ஸி உருவாக்கம்
குறித்த ஆல் இன் ஆல் தகவல்களையும் கணினியில் சேமித்து, அதனை முந்தைய
மாடல்களோடு ஒப்பிட்டனர். மிராக்கிள் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது
அங்குதான். கேலக்ஸி வெடிப்பில் உருவான அணுக்கள் இருவேறு கேலக்ஸிகளுக்கிடையே
பரவியதோடு, புதிய அணுக்கள், புதிய விண்மீன்களை
உருவாக்கின. வாயுக்கள் அப்படியே சிறிய கேலக்ஸியிலிருந்து மெகா
கேலக்ஸிகளுக்கும் பரிமாற்றமாகி இருக்கலாம் என்பதை இந்த கணினி மாடல்களிலிருந்து டேனியல்
கண்டுபிடித்திருக்கிறார். ஜஸ்ட் லைக் தட் கண்டுபிடிப்பல்ல இது,
கேலக்ஸி எப்படி உருவானது என்று இதுவரை நாம் யூகித்திருந்த அனைத்தையும்
தலைகீழாக மாற்றிய கண்டுபிடிப்பு இது.
இதில் புதுசு, கேலக்சிகளுக்கிடையேயான
பரிமாற்றம்தான். "இன்றைய சூரியமண்டலம், அதிலுள்ள கோள்கள், நான், நீங்கள்
என அனைவரும் கேலக்ஸிகளுக்கிடையே கடந்து வந்த அணுக்களால்தான் உருவாகியிருக்ககூடும்.
கேலக்ஸிகளின் எடையை அறிந்தால், அவை பரிமாறிய அணுக்களின்
எடையை கண்டறியலாம்" என்கிறார் ஆராய்ச்சியாளர் டேனியல்.
அமெரிக்கா அனுப்பியுள்ள ஹப்ளர் டெலஸ்கோப்பின்
வழியாக, வாயு சூழ்ந்த கேலக்ஸிகளை படம்பிடித்து அதை சூழ்ந்துள்ள
வாயுக்களின் நீளம் குறித்து அறிய சான்ஸ் தந்துள்ளது. "பிரபஞ்சத்தில்
நாம் மட்டும் தனியாக இல்லை என்ற செய்தியை அறிந்துகொண்டதே பயங்கர த்ரில்லாக உள்ளது.
பல பில்லியன் ஒளி ஆண்டுகளிலிருந்து வந்த வாயுக்களால் உருவானது கோள்கள்
என்ற செய்தி நாம் முன்னோக்கி செல்ல உதவும். கேலக்ஸிகளின் அணுக்கள்
பரவிய பாதை வழியாக பிற கேலக்ஸிகளோடு தொடர்புகொள்ள முடியுமா? என்ற
ஆராய்ச்சி இதில் அடுத்த லெவல்" என புன்னகைக்கிறார் ஆராய்ச்சியாளர்
டேனியல். பால்வெளியும் திறந்தாச்சு!
பிக்பேங் தியரி
ஹிஸ்டரி!
பிங் பேங் தியரியின்
திரியை முதலில் கிள்ளியவர் பெல்ஜியத்தைச் சேர்ந்த பாதிரியான ஜார்ஜஸ் லெமைட்ரேதான். 1920 ஆம்
ஆண்டு ஆதி அணுவிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது என ஸ்ட்ராங்காக கூறினார். ஜார்ஜஸின் தியரி, எட்வின் ஹப்பிளுக்கு எட்டு திசையிலுமுள்ள
விண்மீன் கூட்டங்கள் பற்றிய அறிவுக்கண்ணை ஆராய்ச்சி வழியாக திறந்தது. இவரைத் தொடர்ந்து காஸ்மிக் கதிர்வீச்சு குறித்து அர்னோ பென்ஸியாஸ் மற்றும்
ராபர்ட் வில்சன் ஆகிய இருவர் கண்டுபிடித்து பால்வெளி குறித்த ஆர்வத்தை தூண்டினர்.
பெருவெடிப்பினால் உருவான ஒளி மற்றும் காஸ்மிக் கதிர்வீச்சு குறித்து
ஆராய்ச்சிகள் தொடங்கின. இதில் முக்கியமான பதில் கிடைக்காத கேள்வி,
பெருவெடிப்பு நிகழ காரணம் என்ன என்பதுதான்.
கேலக்ஸிகள் எத்தனை?
பால்வெளியிலுள்ள
கேலக்ஸிகள்
- 2 ட்ரில்லியன்(குறைந்தபட்சம்)
ஹப்பிள் டெலஸ்கோப்பில்
கண்டுபிடித்தவை
- 100-200(10%)
பெருவெடிப்பு நிகழ்ந்தது - 13.7 பில்லியன் ஆண்டுகள்.
நன்றி: குங்குமம் வார இதழ்
தொகுப்பு: திலகரத்னே, பவிதா சிபி