முத்தாரம் ஸபெஷல்ஸ்! தொகுப்பு - விக்டர் காமெஸி
தீவிரவாத தாக்குதல்கள்!
கடந்த மூன்று ஆண்டுகளில்
ஐரோப்பா மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 420.
பெல்ஜியம், ஃபிரான்ஸ்,
ஆஸ்திரியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஃபின்லாந்து ஆகியவற்றில் புதிதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தாக்குதலை 74% அரசு
முன்னே அறிந்திருந்தது. தீவிரவாதிகளில் 50% குற்றச்சம்பவங்களில் தொடர்புடையவர்கள். இதில்
26% முன்னமே சிறைதண்டனை பெற்றவர்கள். 64% பேர் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.
தீவிரவாதிகளின்
குறைந்தபட்ச வயது
15, அதிகபட்ச வயது 56. தாக்குதல் நடத்தியவர்களின்
சராசரி வயது 27.
தாக்குதலுக்குள்ளான
நாடுகள் அகதிகளின் குடியேற்றத்தை குறைக்கும் விதிகளை இயற்றுவது எதிர்காலத்தில் நிகழலாம்.
ஹிட்லர் நல்ல நோக்கம்
கொண்டவரா?
"ஹிட்லர்
யூதர்களை கொன்றார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது நோக்கத்தை தவறு என்று கூறிவிட முடியாது"
என புது சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஜப்பானின் நிதியமைச்சரான தாரோ ஆஸோ.
தாரோ ஆஸோ இந்த
தத்துவ முத்தை உதிர்த்தது லிபரல் ஜனநாயக கட்சி
மீட்டிங்கில்.
எதிர்ப்புகளும் கண்டனங்களும் திகுதிகுவென கிளம்பியதும்,
"நான் ஹிட்லரை எடுத்துக்காட்டாக சொன்னது தவறாகிவிட்டது எனது கருத்தை
திரும்ப பெறுகிறேன்" என்று சமாளித்துவிட்டார் தாரோ.
ஆனால் இவர் இப்படி உளறி வைப்பது புதிதல்ல. 2013 ஆம் ஆண்டு ஜப்பானிய அரசியலமைப்பு சட்டத்தை நாஸிக்கள் போலவே மாற்றி அமைக்கவேண்டும்
என்று பேசி திகில் கிளப்பிய வரலாறு தாரோ ஆஸோவுக்கு உண்டு. "சட்டத்தை ஒரே நாளில் யாருமறியாமல் நாஸிக்கள் மாற்றத்தை செய்தார்கள்.
அந்த தந்திரத்தை நாம் ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது" என்பதுதான் அந்த அமேசிங் பேச்சு.
பாஸ்வேர்டுக்கு
பாதுகாப்பு!
முன்னர் பாஸ்வேர்ட்டை
திருடி அக்கவுண்டில் பணம் ஏமாற்றும் ஜெகஜ்ஜாலர்கள் அதிகம். இன்று
அந்த இடத்திற்கு கணினி ப்ரோகிராம்கள் வந்துவிட்டன. அப்படி யாஹூ,
அடோப், லிங்க்டுஇன் ஆகிய தளங்கள் தாக்குதலுக்குள்ளான
வரலாறு உண்டு.
12 எழுத்துக்களில் பாஸ்வேர்டுகள் தேவை.
அதில் பெரிய எழுத்து, சிறிய எழுத்துக்கள் அமைவது
அவசியம். பெரிய எழுத்துக்கள் முதலிலும், சிம்பல்கள் கடைசியிலும் அமையக்கூடாது. 123,abc மற்றும்
கீபோர்ட் வரிசை எழுத்துகள், பிறந்ததேதி எண்கள் கூடவே கூடாது.
கடினமான பாஸ்வேர்டை
உருவாக்கினாலும் அதை நீங்கள் மறக்காமலிருக்க, பாதுகாப்பான இடத்தில் எழுதி வைக்கலாம்.
இருமுறை பாஸ்வேர்டு
அத்தென்டிகேஷன் கேட்பது எல்லாம் பழைய டெக்னிக். டெக்னோ திருடர்கள் இதனை ஈஸியாக
தாண்டுவிடுகிறார்கள். இமெயில் பாதுகாப்பு போதவில்லையெனில் கூகுள்
உள்ளிட்ட நிறுவனங்களின் ப்ரீமியம் சேவைக்கு மாறுவது பாதுகாப்பை அதிகரிக்கும்.
gay மனிதர்களை
கண்டுபிடிக்கும் AI!
ஸ்டான்ஃபோர்டு
பல்கலைக்கழகம் அண்மையில் கண்டுபிடித்துள்ள கம்ப்யூட்டர் அல்காரிதம், முகத்தை
ஸ்கேன் செய்து ஒருவர் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆண்களில் 81%, பெண்களில் 74% இக்கணிப்பு துல்லியமாக உள்ளது. 35 ஆயிரம் பேர்களின் படங்களை
டெஸ்ட் செய்து இந்த உண்மை அறியப்பட்டுள்ளது. மைக்கேல் கோஸின்ஸ்கி,
யிலன் வாங் ஆகியோர்தான் அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர்.
ஆண்களுக்கு அகலமான
நெற்றி, நீள மூக்கு, குறுகிய தாடைகள். பெண்களுக்கு
குறுகிய நெற்றி, அகலமான தாடைகள் ஆகியவற்றை முக்கியமாக வைத்து
கணித்துதான் இந்த அல்காரிதம் வெற்றிபெற்றுள்ளது. "நிறவெறி,
இனவெளி அதிகரிக்கும் தவறானவர்களின் கைகளில் இந்த தொழில்நுட்பம் கிடைக்கும்
நிலையில் மனிதர்களை முகத்தை வைத்து அனுமானிக்கும் முறை பல்வேறு சிக்கல்களை உருவாக்ககூடும்"
என எச்சரிக்கிறார் டொரன்டோ பல்கலையின் உளவியல் பேராசிரியர் நிக் ரூல்.
திருநங்கைகள் உள்ளிட்டவர்களை கண்டுபிடிக்குமா
என்று தெரியாதநிலையில், குறிப்பிட்ட பிரிவினரை அடையாளம் கண்டறியும்
இம்முயற்சியை பயத்தோடு அணுகுபவர்களே அதிகம்.
கூகுள், ஆப்பிளின்
அடுத்த போட்டி!
1984 இல்
ரிலீசான டெர்மினேட்டரில் அர்னால்டு ஒரு பொருளை பார்த்தவுடனே அதுபற்றிய டீட்டெய்ல்களை
அறிவாரே! அந்த தொழில்நுட்பம்தான் AR எனும்
ஆக்மெண்ட் ரியாலிட்டி. தற்போது இந்தவசதிகளைக் கொண்ட போன்கள்,
டேப்கள் என வெளியிடுவதில் கூகுள், ஆப்பிள் என இருநிறுவனங்களும்
போட்டா போட்டியிடுகின்றன.
கூகுளின் கிளாஸ், டேங்கோ
டெக்னாலஜி(2014) என்றால், ஆப்பிள் ஆர்க்கிட்,
ஐஓஎஸ் 11 என கிடுகிடுவென முன்னேறி வருகிறது.
"ஏஆர் என்பது ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு"
என்று புகழ்கிறார் ஆப்பிள் தலைவரான டிம் குக். போகிமான் கோ விளையாட்டுதான் ஏஆர் மார்க்கெட்டை கூகுள் மற்றும் ஆப்பிளுக்கு
திறந்து காட்டியது.
"இதில் ஆப்பிளுக்கு ஹார்ட்வேர்,
சாப்ட்வேர் என இரண்டையும் தயாரிக்கும் ஸ்பெஷல் பிளஸ் பாயிண்டும் உண்டு"
என்கிறார் ஜாக்டா ரிசர்ச் அமைப்பைச் சேர்ந்த ஜான் டாஸன். போட்டியோ பகையோ டெக்னோ பசியுள்ளவர்களுக்கு காத்திருக்கிறது செம தீனி.
நன்றி: முத்தாரம் வார இதழ்