"நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல"



"நாஸ்காமைப் பற்றிய வதந்திகள் உண்மையல்ல"
நேர்காணல்: நாஸ்காம் தலைவர் ஆர். சந்திரசேகர்
தமிழில்: அன்பரசு


.டி துறையில் வெளியேற்றப்படவிருக்கும் ஊழியர்களின் வேலையிழப்பை பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

நான் அதனை ஐ.டியின் வீழ்ச்சி என்றோ, வேலையிழப்பு என்றோ கூற மாட்டேன். இது ஒரு மறுநிர்மாணம் நிகழ்வு அவ்வளவே. குறைவோ, அதிகமோ தொழில்நுட்பத்துறையில் இது மெதுவாகவேனும் நடப்பதை தவிர்க்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறையில் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 2017 ஆம் ஆண்டின் காலாண்டில் 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் 2 லட்சம் பேர் தம் வேலையை இழக்கவிருக்கின்றனர். இது தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்வுதான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் வேலையிழப்பு உண்டு. தற்போது இதில் அரசியல் நுழைவதுதான் நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. 

வேலையிழப்பை சந்திக்கும் ஊழியர்களை பதிவு செய்யும் டேட்டா பதிவேடு ஒன்றை நாஸ்காம் வைத்திருக்கிறதா? உண்மையில் அது வெளிப்படையாக தன்மை கொண்டதா?

வெளியுலகில் எப்படி நாஸ்காம் பற்றி வதந்திகள் உலவுகின்றன என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். ஊழியர்களை கருப்பு பட்டியலில் வைப்பது, அதை வைத்து மிரட்டுவது ஆகியவற்றில் நாஸ்காம் இன்று மட்டுமல்ல என்றுமே ஈடுபட்டதில்லை. சில ஊழியர்கள் சர்டிஃபிகேட்டுகளை டூப்ளிகேட் செய்வது போன்ற தவறுகளில் ஈடுபட்டால் அதன் மேல் நடவடிக்கை எடுப்போம். ஊழியர்களின் திறன் தொடர்பான எந்த பதிவேட்டையும் நாஸ்காம் பராமரிக்கவில்லை என்பதே உண்மை.  

.டிதுறையில் தொழிற்சங்கம் அமைப்பதை தொடர்ந்து எதிர்க்கிறீர்களே ஏன்?

தொழில்நுட்பம் சார்ந்த இத்துறை தொடர்ந்து மாறுதல்களுக்குட்பட்டது. எனவே இங்கு தொழிலாளர்கள் சங்கம் அமைப்பது என்பது அவசியமில்லை. தொழில்நுட்ப போட்டி உலகில் பல்வேறு மாறுதல்களுக்கு உங்களை அனுமதிக்காதபோது நீங்கள் நாளடைவில் தேங்கிவிடுவீர்கள் என்பதே உண்மை. 3% வேலையிழப்பை பற்றி பேசுகிறீர்கள். ஆனால் நான் 97% பேர் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு வேலையில் தக்க வைத்துக்கொள்வதைப் பற்றி பேசுகிறேன்.

சங்கம் என்பது ஐ.டி துறையில் கடினத்தன்மையை ஏற்படுத்திவிடும் என நினைக்கிறீர்களா?

ஊழியர்களின் ஒருங்கிணைப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் நாஸ்காம் அதுபோன்ற அமைப்புதானே?  .டி துறை என்பது தொழிற்சாலை போன்றதல்ல. இது பணியாளர்களின் மூளையை 60% பயன்படுத்தியே உருவாகியுள்ளது. அவர்கள் மகிழ்ச்சி சாத்தியமின்றி ஐ.டி துறை வளர்ச்சி எப்படி சாத்தியம்? 3% ஆட்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை காரணம் காட்டி 97% ஆட்களை கைவிடுவது சரியா?

.டி துறையிலுள்ளவர்களுக்கே நாஸ்காம் அமைப்பு குறித்து எதுவும் தெரியாத நிலையில் நாஸ்காம் எப்படி ஊழியர்களுக்கான அமைப்பாக செயல்பட முடியும்?

நாங்கள் வெறும் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கே முக்கிய பங்களிப்பு செய்து வருகிறோம். இதில் அனைவருக்கும் நாஸ்காம் தெரிந்திருக்க வேண்டும் என்பது இரண்டாம் பட்சமே. ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்குமான பாலமாக செயல்படுகிறோம். வளர்ச்சி, விரிவாக்கம், புதிய திறமைகள், தொழில்நுட்ப திறமை கொண்ட பணியாளர்கள் ஆகியவற்றை நாஸ்காம் தொடர்ந்து கவனித்து வருகிறது. பல்வேறு கட்டுரைகள் இத்துறை வீழ்ந்துவிட்டது என அலறினாலும் இங்கு திறமையுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு பஞ்சமில்லை என்பதே உண்மை.

நன்றி: முத்தாரம் வார இதழ்
தொகுப்பு: ரோஹன் விகாஷ், சாரா பானர்ஜி



                             

பிரபலமான இடுகைகள்