உலகை சுற்றிவரும் ஆல்ரவுண்டர் பெண்கள்! -ச.அன்பரசு
உலகை
சுற்றிவரும் ஆல்ரவுண்டர் பெண்கள்! -ச.அன்பரசு
கரை தெரியாத கடலில் பாய்படகில் இரண்டு மாதங்களுக்கு
மேலாக ட்ராவல் செய்யும் டாஸ்க் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? இரண்டு மாதம் கடலிலா என டரியலாகி அடுத்த சீட்டிலுள்ள ஆளுக்கு டாஸ்க்கை பாஸ்
செய்து எஸ்கேப்பாக முயற்சிப்போம். ஆனால் டாஸ்க் கொடுக்கப்பட்ட
பெண்கள் இதை தன் திறமைக்கான சவாலாக ஏற்று விரைவில் கடலில் அட்வென்ச்சர் பயணத்துக்கு
ரெடியாகிவிட்டார்கள். யார் இந்த பெண்கள்?
இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆறுபெண்களான வர்திகா ஜோஷி பிரதிபா ஜாம்வால்,
ஸ்வாதி, விஜயாதேவி, ஐஸ்வர்யா,
பாயல்குப்தா ஆகியோர்தான் அந்த கடல்புலி வீராங்கனைகள்.
நவிகா சாகர் பரிக்ரமா எனும் திட்டத்தில்தான் இந்திய
பெண் கடல்படை வீராங்கனைகள் கோவா டூ கேப்டவுன் வரை 43 நாட்களில் அதிதீரமாக
38 ஆயிரத்து 892 கி.மீ தூரம்
பயணிக்கபோகிறார்கள். உலகிலும், ஆசிய அளவிலும்
பெண் கடல்படையினர் இப்படி பயணம் செய்வது இதுவே முதல்முறை. நவிகா
சாகர் பரிக்ரமா எனும் கடல்படை நிகழ்வில் இது மூன்றாவது பயணம். முதல் பயணம், முன்னாள் கேப்டனான திலீப் தோண்டேவும்(2009-10),
இரண்டாவது பயணமாக, கமாண்டர் அபிலாஷ் டாமியினுடையதும்(2012-2013)
சாதனைகளாக பதிவாகியுள்ளது.
"இந்த நெடும்பயணத்தில் மனநிலையை சீராக வைத்துக்கொள்வதே
பெரிய சவால். இப்பயணத்திற்காக நாங்கள் ஆறுபேரும் இரண்டு ஆண்டுகள்
கடுமையாக ட்ரெய்னிங் எடுத்துள்ளோம்" என உற்சாகமாக பேசுகிறார்
பிரதிபா ஜாம்வால். முதலில் மூன்று பெண்களை மட்டும்தான் படகு பயணத்திற்கு
கப்பல்படை செலக்ட் செய்திருந்தது பின்னர்தான், அதனை ஆறு பேர்களாக
மாற்றியது. இதில் இருவர் கப்பல் பொறியாளர்கள், இருவர் போக்குவரத்து அதிகாரிகள், இருவர் கடற்படையின்
கல்வித்துறை சார்ந்தவர்கள்.
"நான் மணிப்பூர் பெண்ணான எனக்கு இதைவிட சிறந்த
சான்ஸ் லைஃபில் கிடைக்காது" நெகிழ்ச்சியாகும் விஜயாதேவி
தன் இருபதில் கடல்படைக்கு தேர்வானவர். "எங்களுடைய பயணம்
அச்சுஅசல் கேப்டன் தோண்டேவின் 2009 ஆம் ஆண்டு ட்ராவல் பிளான்தான்.
அதன்படி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,
ஃபாக்லாந்து தீவுகள், தென் ஆப்பிரிக்கா என செல்வோம்"
என்கிறார் ரிஷிகேஷைச் சேர்ந்த முதல் கப்பல்படை பெண் வீரரான வர்திகா ஜோஷி.
கப்பல்படையில் ஜோக்குகளை அடிக்கடி அள்ளிவிட்டு ரகளை கச்சேரி செய்யும்
ஐஸ்வர்யா போடபட்டி பங்கி ஜம்பிங், ஆழ்கடல் நீச்சல் என அதிரடி
லேடி.
"எல்லாமே ட்ரெய்னிங்தான் எதுக்கு டென்ஷன்?"
என குஷியாக தோள்களை குலுக்கி புன்னகைக்கிறார் ஒட்டுமொத்த டீமுக்கும்
ஜாலி பேபிம்மாவான பாயல் குப்தா. இவரையடுத்து "பெண்களுக்கு லிமிட்டெல்லாம் கிடையாது. நான் பெண்ணாக இப்பயணத்தை
பெருமையாக நினைக்கிறேன்" என ஆன் தி ஸ்பாட் நெகிழ்ச்சியாகிறார்
ஸ்வாதி. செப்டம்பரில் படகில் தொடங்கும் பயணம் என்பது சாதகமான
வானிலையைப் பொறுத்து மார்ச் 2018க்குள் முடிப்பது பிளான்.
"படகில் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த பயண வழியிலுள்ள
நாடுகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே பக்கா பாதுகாப்பு ஷ்யூர்"
என புன்னகைக்கிறார் அட்மிரல் அனில் சாவ்லா.
பாக்ஸ் 1
INSV தாரிணி
பிப்ரவரி 2017 இல் கடற்படையில்
சேர்க்கப்பட்ட தாரிணி, 6 பேர் பயணிக்க ஏற்றபடி 55 அடி நீள பாய்படகு இது. கோவாவின் அக்வாரியஸ் கப்பல்கட்டுமிடத்தில்
உருவான இதில், ஒரு மணிநேரத்திற்கு 30 லிட்டர்
குடிநீர் தயாரிக்கும் ஆர்ஓ வசதி உண்டு. கடலில் சீறிப்பாய
130php வால்வோ பெண்டா டி5 எஞ்சின் துணை.
நெட்வொர் வசதிக்கு Inmarsat உதவுகிறது.
கப்பலை தொடர்புகொள்ள HF/VHF ரேடியோ வசதியும்,
கப்பலை கண்காணிக்கும் தனித்துவ வசதியும் உண்டு.
தொகுப்பு: விசேஷ் ஸ்தபதி, ரகுநாத் பானர்ஜி