முத்தாரம் ஒரு பக்கம்!
டிஜிட்டல் புத்துயிர்ப்பு!
உலகின் தொன்மையான
பல்வேறு கட்டிடங்கள்,
அருங்காட்சியங்கள் போர், இயற்கைச்சீற்றங்களால்
பாதிக்கப்பட்டாலும் அதனை அதன் பாரம்பரியம் குறையாமல் மீட்க பல நாடுகளும் கடுமையாக போராடுகின்றன.
எப்படி?
லேஸர் ஸ்கேனிங்
முறையில் ட்ரோன் விமானங்களில் கேமராவை இணைத்து 3D முறையில் கட்டிடங்களை ஆராய்ச்சியாளர்கள்
படமாக்குகிறார்கள். கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக கொண்டு
கட்டிட மாதிரிகளை கணினியில் 3D மாடல்களாக உருவாக்குகின்றனர். இதனை VR ஹெட்செட் மூலம் துல்லியமாக பார்க்க முடியும். இந்த டெக்னிக்கை
பயன்படுத்தி இத்தாலியிலுள்ள டஸ்கனியிலுள்ள வோல்டெரா எனும் 3 ஆயிரம்
பழமையான நகரை புதுப்பித்துள்ளனர் தொல்லியலாளர்கள்.
இன்டர்நெட்டில்
போதைப்பொருட்கள்!
LSD(Lyergic acid
diethylamide)
1960 ஆம்
ஆண்டு அமெரிக்காவின் ஆர்மி டெஸ்ட் செய்த வேதிப்பொருள். பார்முலா
C20H25N3O. சோதனை அபாரவெற்றி. எனவே மக்கள் பயன்பாட்டிற்கு
உடனடி தடை விதிக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தின் ஆல்பர்ட் ஹாஃப்மன்
கண்பிடித்த LSD, உடலில் சேர்ந்தபின் 8-12 நேரங்களுக்கு மூளையில் மேஜிக்
காட்சிகளை உருவாக்கும் அதிதீவிர போதை வஸ்து.
Cocaine
1532 ஆம்
ஆண்டு பெரு ராணுவ வீரர்களால் கோகோ இலைகளின் மூலம் பயன்படுத்தப்பட்ட போதை வஸ்து.
1970 களில் சார்லி என்றழைக்கப்பட்ட இதில் தரைடிக்கெட் வஸ்து,
நார்மல் கோகெய்னை விட பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 1859 இல் இதனை கண்டறிந்தவர் ஜெர்மனியைச்சேர்ந்த ஆல்பர்ட் நைமன்.
MDMA(Methylene
dioxymethaphetamine)
எக்ஸ்டஸி(E) எனப்படும்
ஜாலி பார்ட்டி போதைப்பொருள் இது. 6 மணிநேர போதைக்கு கேரண்டி.
2014 படி மக்கள் தொகையில் 29 மில்லியன் மக்கள்
இதனை பயன்படுத்துகின்றனர். மகிழ்ச்சி உணர்வு தரும் எக்ஸ்டஸியை
கூடுதல் பொருட்கள் சேர்த்து விற்றதால் தற்போது பயன்படுத்த தடை உள்ளது.அமெரிக்காவின் அலெக்ஸாண்டர் சுல்ஜின் இதன் கண்டுபிடிப்பாளர்.
Methamphetamine
சல்லீசு விலை போதைப்
பொருள். ஹெராயின் பாதிப்புகளை தரும் இது. பவுடராக அதிகம் பயன்படுகிறது.
1893 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தவர் ஜப்பானிய வேதியியலாளர் நாகய்
நாகயோஷி.
ஒரே இஞ்ஜெக்சன், பல மருந்துகள்!
அனைத்து மருந்துகளையும்
ஒரே இஞ்ஜெக்ஷனாக மாற்றினால் தடுப்பூசிகளின் லிஸ்டை வெறிக்க பார்க்கும் வேலை மிச்சம்தானே? இந்த யோசனை
அமெரிக்காவின் எம்ஐடிக்கு தோன்றியதும் செயலில் இறங்கிவிட்டார்கள்.
3டி ஃபேப்ரிகேஷன்
முறையில் FDA அங்கீகரித்துள்ள உயிரியல் பாலிமரான PLGA
முறையில் இந்த இஞ்ஜெக்ஷன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு லேயரும் ஒன்றோடன்று இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. என்கிறார் ஆராய்ச்சிக்குழுவைச்சேர்ந்த ஜாக்லெனக். இம்முறைக்கு
SEAL என்று பெயர். எலிகளுக்கு நடத்திய டெஸ்டில்,
இஞ்ஜெக்ஷன் போட்டபின் 9,20,41 என குறிப்பிட்ட
இடைவேளையில் மருந்து உடலுக்குள் செலுத்தப்பட்டது ஆராய்ச்சியாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
இதிலுள்ள ஒரே மைனஸ், மனிதர்களின் உடல் வெப்பநிலையில்
மருந்துகளை ஆற்றல் குறையாமல் வைத்திருப்பதுதான். தடுப்பூசிகள்
கிடைக்காமல் தடுமாறும் நாடுகளுக்கு இம்முறை ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அண்மையில் அமெரிக்காவை
உலுக்கிய இர்மா புயலால் பாதிப்பில் 33 பேர் பலியானார்கள் என்பதோடு,
பசுமையும் காணாமல் போயுள்ளது என்பதை செயற்கைக்கோள் படங்கள் துல்லியமாக
காட்டியுள்ளன.
"புயலுக்கு
முன்பு பசுமையாக காணப்பட்ட பகுதிகள், புயலுக்கு பிறகு ப்ரௌன்
நிறத்திற்கு மாறியுள்ளது என்பதைக்காட்டும் செயற்கைக்கோள் படங்கள் அங்கு மரங்கள்,
தாவரங்கள் அழிந்துள்ளதை காட்டுகின்றன." என்கிறார்
நாசா புவி ஆய்வகத்தைச்சேர்ந்த ஆய்வாளர் கேத்ரின் ஹன்சென். பார்புடா
மற்றும் செயின்ட் மார்டின் ஆகிய தீவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு இங்கு உயிர்ப்பலியும்
நிகழ்ந்திருக்கிறது. வர்ஜின் கோர்டா தீவுக்கு மேற்புறம் உள்ள
லேண்ட்சாட் 8 உருவாகத்தில்
நாசா, அமெரிக்க புவியியல் ஆய்வு ஆகிய நிறுவனங்களின் பங்குண்டு.
இது குறித்து பார்புடா ஆன்டிகுவா பிரதமரான காஸ்டன் ப்ரௌனி,
"நாட்டில் 95% கட்டுமானங்கள் சேதமாகியுள்ளது
மனதை நொறுங்கச்செய்கிறது" என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: செந்தில் பழனிச்சாமி, ரதி பிபானி.