இடுகைகள்

சமூக பொறுப்புணர்வுத் திட்டம். சிஎஸ்ஆர். சமூகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூகத்தின் முகம் - சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம்

படம்
pixabay 3 சமூகத்தின் முகமாக நிறுவனம் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழாவில் முகம் காட்டிவிட்டு நழுவி விடும் நிறுவனங்கள் உலகமெங்கும கிளை விரிக்கவே முடியாது . எத்துறை சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களோடு அடிக்கடி இணைந்து ஏதாவது ஓர் விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை பேசியபடி இருக்கவேண்டும் . இதற்கு சிறந்த உதாரணம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை சொல்லலாம் . இந்த பத்திரிகை சென்னை பதிப்பில் சென்னை நகரம் பற்றிய பிரபலங்களின் எண்ணங்களை சென்னை சான்ஸே இல்லை என தலைப்பிட்டு பிரசுரிக்கிறது . அதோடு தேர்தல் சமயங்களில் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பலரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தூண்டியது . தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது வாட்டர் பாசிட்டிவ் என்ற தலைப்பில் பல்வேறு செய்திகளை வெளியிட்டதோடு , இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் மக்களும் பங்கேற்கும்படி செய்து அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைப் பெற்று தந்தது . நமக்கெதுக்கு இதெல்லாம்... நாம் செய்திப்பத்திரிகைதானே என தந்தி , தினகரன் போல ஒதுங்கி நின்று விளையாட்டை விளையாடும் பத்திரிகைகளை மக்கள் நினைவில் வைத்திருப்ப