இடுகைகள்

பார்ட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைப்பொருட்களை எப்படி வாங்குவது? - புதிய வார்த்தைகளை கற்றுக்கொண்டால் போதும்!

படம்
  மும்பை, புனேவில் போதைப்பொருட்கள் கிடைக்கும் இடம், ஸ்கோர் அட்டா என குறிக்கப்பட்டுள்ளது போதைப்பொருட்களை விற்பதும், வாங்குவதும் இப்போது வேறு லெவலில் மாறியுள்ளது. இதனைச் செய்ய குருட்டுத்தனமான முட்டாள்தனமும், முரட்டுத்தனமாக புத்திசாலித்தனமும் தேவை. கோதிம்பிர், பிகாச்சு, ஹலோ கிட்டி, அஜினமோட்டோ, சாவல், டேண்ட்ரஃப், ஜங்கிள் பாய் ஆகிய குறியீட்டுச் சொற்களை யாராவது பேசினால் உஷாராக இருங்கள். இவைதான் போதைப் பொருட்களை வாங்குவதற்கான முக்கியமான சொற்கள்.  பொதுவாக இந்த வார்த்தைகளை கேட்கும் யாருக்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு போறாங்க போல, தலையில் டேண்ட்ரஃப் இருக்குதாட்ட, காமிக்ஸ் நிறைய படிப்பார் போல என நினைப்பார்கள்.  வீடு மற்றும் பள்ளிகளில் யாருக்கும் தெரியாமல் போதைப்பொருட்களை வாங்கவே இப்படி சீக்ரெட் வார்த்தைகளை வைத்துக்கொண்டு பேசி வருகிறார்கள் இளைஞர்கள், பள்ளிச்சிறுவர்கள்.  கோதிம்பிர் என்றால், மரிஜூவானா, டேண்ட்ரஃப் என்றால் கொகைன், பிகாச்சு என்றால் எல்எஸ்டி மாத்திரை, ஹலோ கிட்டி என்றால் எம்டிஎம்ஏ, ஜங்கிள் பாய் என்றால் கஞ்சா என்று அர்த்தம். டாஃபி என்றால் எக்டஸி மாத்திரை, ஸ்னோமேன் என்றால் கொகைன் ஏன் இமோஜி

டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன்

படம்
 டிஸ்கோ - டேட்டா ஜங்க்ஷன் வெள்ளி நிற பந்து உருள, ஏராளமான வண்ணங்கள் பீய்ச்சியடிக்க ஆர்டிஎம் பாட்டு ஒலிக்க டிஸ்கோ கிளப்புகள் இயங்கி வந்தன. இதில்தான் எழுபதுகளில் சினிமா உலகமே வாழ்ந்தது. இன்று ரெக்கார்ட் செய்த பாடல்களைப் போட்டு டிஸ்கோ கிளப்புகள் செயல்படுவதில்லை. பலருகும் டிஸ்கோ கிளப்பிலுள்ள பாடல்கள், அதன் சூழல் என்பது இன்ஸ்பிரேஷனாக இருந்தது. இந்தியில் இப்படி உருவானவர்தான் பப்பி லகிரி. இவரது பாடல்களை கேட்கும்போது டிஸ்கோ கிளப் பாடல்களின் பீட்டில் இதயம் துடிக்கத் தொடங்கும்.  1976இல் மட்டும் அமெரிக்காவில் பத்தாயிரம் டிஸ்கோ கிளப்புகள் செயல்பட்டு வந்தன.  ஒரு நிமிடத்திற்கு 120 பீட்டுகளை டிஸ்கோ பாடல்கள் கொண்டிருக்கும்.  சாட்டர்டே நைட் ஃபீவர் என்ற பாடல் மட்டும் உலகம் முழுவதும் 40 மில்லியன் பிரதிகள் விற்றது. உலகிலேயே இரண்டாவதாக இந்தளவு விற்ற பாடல் இதுமட்டும்தான்.  பீ கீஸ்  குழுவின் நைட் ஃபீவர் என்ற பாடல் எட்டு வாரங்கள் பில்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. 1978ஆம் ஆண்டு நடந்த சாதனையில் முக்கியமானது.  அன்றைய டிஸ்கோ பாடல்களில் இதுதான் இந்த சாதனையை செய்த ஒரே பாடல்.  டிஸ்கோ பாடல்களுக்கான ஒளி அமைப

நடிப்பை விட தனிப்பட்ட வாழ்க்கைக்காக அதிகம் பேசப்பட்ட ஆங்கிலப்பட நடிகர்! லியனார்டோ டிகாப்ரியோ

படம்
      டிகாப்ரியோ டிகாப்ரியோ டக்ளஸ் விட் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட லியனார்டோ டி காப்ரியோவின் வாழ்க்கைக் கதை. ஜெர்மனை மூதாதையர்களாக கொண்டவர் லியோ. அவரின் ஹிப்பி அப்பா, உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அம்மா என இருவருடனும் வந்து அமெரிக்காவில் லியோ எப்படி ஜெயித்தார் என்பதுதான்  நூலின் முக்கியமான பகுதி. பால்ய வயதில் லியோ பல்வேறு டிவி தொடர்களில் நடித்து சம்பாதித்துதான் குடும்பத்தை காப்பாற்றுகிறார். அதில் கிடைத்த பணத்தை வைத்துதான் கொஞ்சம் நல்ல சூழல் கொண்ட வீட்டுக்கு மாறுகிறார். அவரின் இயல்பு, பள்ளியில் நடந்துகொள்ளும் விதம், டிவி ஆடிஷன்கள் , அவரின் அப்பா பற்றிய லியோவின் உணர்வுகள் என  நிறைய விஷயங்களை பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானா லியோ பேசிய பதிவுகள் அனைத்தும் ஊடகங்கள் வந்தவைதான் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 அத்தியாயங்கள்.. குடும்பத்திற்கான வருமானமே லியோவின் நடிப்பு மூலம் கிடைக்கிறது. 1995க்குப் பிறகு லியோவின் வாழ்க்கை முறையே மாறுகிறது. டைட்டானிக் படம் வந்தபிறகு அவரின் சினிமா மார்க்கெட்டும் உயருகிறது. இந்த நூல் லியோவின் நடிப்பை மதிப்பிடுவதை விட ஆஸ்கர் விருதுக்கான் ஆசையை அதிகம் பேசியுள்ளத

மூன்று நண்பர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் பிறந்தநாள் பார்ட்டி! - ப்ராஜெக்ட் எக்ஸ்

படம்
         ப்ராஜெக்ட் எக்ஸ் ப்ராஜெக்ட் எக்ஸ் Directed by Nima Nourizadeh Screenplay by Matt Drake Michael Bacall Story by Michael Bacall CinematographyKen Seng படத்தின் கதை என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. தாமசுக்கு பிறந்தநாள். அதற்காக வெங்கட்பிரபு போல கிராண்டாக ஒரு பார்ட்டியை வைக்கிறோம் என தாமசின் நண்பர்கள் காஸ்டா, ஜே.பி விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் செய்யும் ஏற்பாடும், செய்யும் விளம்பரமும் அவர்கள் வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. என்னதான் ஆச்சு இந்த பசங்களுக்கு, என்னுடைய வீட்டுக்கு, என்னுடைய தெருவுக்கு என அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியடையும் சம்பவங்கள் அங்கு நடைபெறுகிறது. அத்தனைக்கும் காரணம் ஒரேயொரு பார்ட்டிதான். மில்லினிய இளைஞர்களின் மனநிலையைப் பற்றி விசுவலாகவே எடுத்து காட்டிவிட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவு முக்கியமானது. தாமசின் பிறந்தநாள் பரிசாக இந்த வீடியோவை கொடுக்கிறோம்.எனவே அவனது பிறந்தநாள் நிகழ்ச்சி அத்தனையையும் அப்படியே படம் பிடியுங்கள் என்பதுதான் கேமரா நண்பனுக்கு சொல்லும் வார்த்தை. எனவே, ஹேண்டிகேம் கேமராவின் அத்தனை சிக்கல்களோடும் படம் பயணப்படுகிறது. உண்மையில் இந்த படம் ஒளிப்பதிவ

பீர் பெல்லிக்கு என்ன கார ணம் அறிவீர்களா?

படம்
பிக்சாபே பீர் பிற மதுபானங்களை குடிக்காத நேர் வகிடு எடுத்து சீவிய நல்லவர்கள் கூட பீர்தானே ஆல்கஹால் குறைவு என கல்பாக எடுத்து அடிப்பார்கள். அந்தளவு நல்லவனா கெட்டவனா என பலருக்கும் புரியாத மதுபானம், பீர். இதனை மனிதர்களே தயாரித்தனர் என்பது நமக்கான பெருமை.  பொதுவாக அனைத்து பானங்களும் எப்படி தயாரிக்கப்படுகின்றன? தானியங்கள் அல்லது பழங்கள்தானே! இதுவும் அப்படித்தான். தானியங்களை சூடான நீரில் ஊறவைத்து அவற்றிலுள்ள சர்க்கரையைப் பெற்று பீர் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு பதப்படுத்தும் நிலைகள் உள்ளன.  இன்று காமராஜர் சாலைகளிலுள்ள பேக்கரிகளில் ஃப்ரூட் பீர் ஏகபோகமாக விற்கப்படுகிறது. அதனை அனிமேஷன் படிக்கும் அண்ணாத்தைகள் வாங்கிப் பருகி மகிழ்கின்றனர். இதில் ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே டாஸ்மாக்கில் வைக்கப்படவில்லை. அப்படி வந்தாலும் மால்களில் உள்ள எலைட் கடைகளில் நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். நம் அந்தஸ்து கூட்டத்தில் முட்டிமோதி கெட்டுவிட்டால் என்னாகும்? ஜென்டில்மேனாக பீர் குடித்தாலே வரலாறு நம்மை மறக்காது.  பீரில் ஆன்டி ஆக்சிடன்டுகள், மினரல்கள் பல்வேறு விஷயங்கள் உள்ள