நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்
நேர்காணல் விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம் பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது? எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது. கடந்த ஆண்...