இடுகைகள்

ஈகுவடார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் வீடு தீப்பற்றி எரியும்போது வேடிக்கை பார்க்க முடியாது! - நேமொன்டோ நென்க்யூமோ

படம்
 பூமியின் காவலர்கள் - நேமொன்டே நென்க்யூமோ சிலர் என்னிடம் கேட்கிறார்கள். அமேசான் காடுகளில் கச்சா எண்ணெய்யை தோண்டி எடுப்பதில் என்ன பிரச்னை என்று.... அவர்கள் அப்படி ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு அளவற்ற கோபம் உருவாகிறது. உங்கள் வீட்டில் நெருப்பு பிடித்து எரியும்போது, அதை அணைக்க முயற்சிப்பீர்கள்தானே? நிச்சயம் அமைதியாக நின்று எரியும் நெருப்பை வேடிக்கை பார்க்க மாட்டீர்கள்தானே?  உங்களது வீடு, உறவினர்கள் வீடு, உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீடுகளும் நெருப்பால் அழிவைச் சந்திக்கும்போது அதைத் தடுக்க முயல்வீர்கள்தானே? உங்கள் நாட்டை அணுக்கதிர்வீச்சிலிருந்து எதற்காக பாதுகாக்க நினைக்கிறீர்கள் என்று யாரேனும் கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? எங்கள் வீடுகளும், மக்களும் அழிவை, பேரிடரை சந்திக்கும்போது வெளிப்புற மக்கள் கேட்கும் இத்தகைய கேள்விகள் பொருத்தமற்றதாக தோன்றுகிறது. மேற்குலகினரின் குடியேற்றம் எங்கள் இன மக்களின் வாழ்க்கையை வீடுகளை வாழ்வாதாரத்தை அழித்தொழித்தது. இப்போது என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல உயிரைப் போராடி தக்க வைத்திருக்கிறேன். மேலும் பல்வேறு போலியான செய்திகளை

பொதுவாக்கெடுப்பில் இயற்கையை காக்க முயன்ற மக்கள்! - ஈகுவடார் எண்ணெய்க்கிணறு வாக்கெடுப்பு

படம்
    யாசுனி தேசியப்பூங்கா எண்ணெய் கிணறு ஈகுவடார் நாட்டில் தேசியப்பூங்காவில் பெட்ரோலிய கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை இயற்கை செயல்பாட்டாளர்கள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். எனவே, அரசு வேறுவழியின்றி இதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது. அதில், மக்கள் பெட்ரோலியத் திட்டத்தை கைவிடவே அதிகளவு வாக்களித்தனர். இதனால், அரசு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. உண்மையில் இதை பெருநிறுவனங்கள் விரும்பவில்லை. ஆனால், மக்கள் முழு முயற்சியாக நின்று இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். அரசு நிறுவனம் 12 இடங்களில் துளையிட்டு எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து வந்தது. மொத்தம் 225 கிணறுகள். ஒரு நாளுக்கு 57 ஆயிரம் பேரல்களை நிரப்பி வணிகம் செய்து வந்தனர். இந்த திட்டத்திற்கு இஷ்பிங்கோ – தம்போகோச்சா என்று பெயர். அமேசான் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இத்திட்டத்திற்காக இரண்டு பழங்குடியினங்களை அப்புறப்படுத்தியிருந்தனர். தொடக்கத்தில் இருந்தே எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பாக வந்த எதையும் அரசு பரிசீலிக்கவே இல்லை. எண்ணெய் கிணறு தோண்டி அதை வணிகம் செய்வதிலேயே குறியாக இருந்தது. இதனால்தான், திட்டத்திற்கு எதிர்ப்பாக அதை ந