இடுகைகள்

நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்ஐசி முகவரின் ஆன்மிகத்தேடல் பயணம் - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

படம்
  வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்  கிழக்கு பதிப்பகம்  நாவல்  சந்தானம் என்ற எல்ஐசி ஏஜெண்ட், திருவண்ணாமலையில் கணபதி என்பவரைச் சந்திக்கிறார். அதன் வழியாக வேதமூர்த்தி என்ற சாமியாரைப் பற்றி அறிவதோடு அவரது சீடர்களையும் சென்று சந்திக்க செல்கிறார். இதன் வழியாக அவர் பெறும் அனுபவங்கள்தான் கதை.  ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத ஒரு சம்பவம், அவர்களது சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாக்குகிறது. மாதச்சம்பள வேலைக்குப் போகவேண்டும் என நினைத்த பால்பாண்டி, சிலம்பம் கற்றுக்கொடுப்பவராக மாறுகிறார். கண்பார்வை இல்லாத ஹரி, குருவின் தீட்சை பெற்று அடுத்த குருவாக மாறுகிறார். இறந்துபோன அம்மாவின் நினைவில் இருந்து மீளாத வைரவன், நகரத்தார் விடுதிக்கு பொறுப்பாளராகிறார். மடத்தின் விடுதியில் வளர்ந்த கோவர்த்தனம் பத்து ஆண்டுகள் அலைந்து திரிந்தபிறகு, ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். மகன் அகாலமாக இறந்துபோக, தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து அதன் வழியாக துக்கத்திலிருந்து மீள முயல்கிறார் கட்டுமானக் கலைஞர் சிவராமன். ஒட்டுமொத்த குடும்பமே தற்கொலை செய்து இறக்க, மடத்தில் துறவியாகி வாழ்கி

ஏழைக்குழந்தையின் உயிரைக் காக்க குரல் கொடுத்து அவலமான அலுவலக அரசியலில் சிக்கிக்கொள்ளும் குழந்தைநல மருத்துவர்!

படம்
   hi venus (ஜஸ்ட் வித் யூ)  சீன டிராமா 24 எபிசோடுகள் பிரசிடென்ட் லூ, டாக்டர் யே என இருவருக்குள்ளும் நடக்கும் காதல் கசமுசாக்கள்தான் கதை. படத்தின் நாயகன் லூ போன்று தோற்றம் இருந்தாலும், கதை முழுக்க டாக்டர் யே வைச் சுற்றியே நடக்கிறது. வறுமையான பின்னணியில் பிறந்தவள். அவளது அப்பா, கடன் பிரச்னையில் மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். அவளது அம்மா இன்னொருவரை மணந்துகொள்கிறாள்.  யே சிலான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறாள். தனித்து விடப்பட்டவளான அவள், அந்த நிலைக்கு காரணம், தற்கொலை செய்துகொண்ட அப்பாதான் என நினைத்துக்கொண்டு மனம் முழுக்க கோபம் கொள்கிறாள். எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்கிறாள். பல்வேறு வேலைகளை செய்து காசு சேர்த்து வைத்து குழந்தைகளுக்கான மருத்துவராக மாறுகிறாள்.  நேர்மையான வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட மருத்துவர்தான் யே சில்லான் எனவே, நிறைய பிரச்னைகளை சந்திக்க நேருகிறது. ஒரு ஏழைக்குழந்தைக்காக டீன் சூ என்பவருடன் மோதி, தனது பணியை இழந்து தாவோயூன் என்ற கிராமத்தில் உள்ள இலவச மருத்துவமனைக்கு செல்லும்படி சூழலாகிறது. மருத்துவமனை அரசியலால் சதுரங்க காய் போல வெட்டப்பட்டாலும் அவள்

ஒருவரின் உரையாடலுக்கு பின்னே பணமே முக்கிய அம்சமாக உள்ளது - எழுத்தாளர் கைலி ரெய்ட்

படம்
  kiley reid எழுத்தாளர் கைலி ரெய்ட், தீவிரமான மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை அங்கதமான முறையில் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர். அவரின் புதிய வெளியீடான கம் அண்ட் கெட் இட் என்ற நாவலைப் பற்றி உரையாடினோம்.  புதிய நாவலுக்கான தூண்டுதல் எங்கு, எப்படி கிடைத்தது? 2019ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்ட மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்தேன். பத்தொன்பது முதல் 22 வயது வரையிலான அவர்கள் வேடிக்கையான புத்திசாலித்தனமான மாணவர்களாக இருந்தனர். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் பணத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய நினைத்தேன். இதுபற்றி மாணவர்களிடம் கேள்விகளைக்கேட்டேன். உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது, வாடகைக்கு ஆகும் செலவு பற்றியெல்லாம் விசாரித்தேன். எனது கதையில் வரும் மில்லி, தான் செய்யும் வேலைகளுக்கு பொறுப்பு எடுத்துக்கொள்பவள். எதிர்காலம் பற்றி மனதில் பெரிய ஆசைகளைக் கொண்டவள். கடின உழைப்பு மட்டுமே முன்னேறுவதற்கு போதுமானதில்லை என்பதை அறிந்திருந்தாள்.  'சச் எ ஃபன் ஏஜ்' என்ற நூலைப் போலவே புதிய நாவலிலும் இளம் கருப்பின பெண், வயதான வெள்ளைப் பெண்ணுடன் குறிப்பிட்ட உறவைப் பேணுகிறாள். அதாவது, மிலி கௌரவ பேராசிரியருட

குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

படம்
  ரா கி ரங்கராஜன், எழுத்தாளர் க்ரைம் ரா கி ரங்கராஜன் அல்லயன்ஸ் பதிப்பகம்   ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம். பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.   கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற்றவாளிகளை யார்

பட்டியல் - விநோதரச மஞ்சரி

படம்
  பட்டியல் தியோடர் சியஸ் கெய்சென் என அழைக்கப்படும் டாக்டர் சியஸ், தனது லோரக்ஸ் நாவலை கென்யன் ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே அமர்ந்து யானைக்கூட்டத்தை பார்த்தபடியே எழுதி முடித்தார். எழுத பயன்படுத்திய காகிதம், சலவை துணிகளின் பட்டியல் காகிதம்.   1907ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி எழுத்தாளர் எட்மண்ட் மோரிஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு விருந்து உண்ண வரும் விருந்தினர் பட்டியலைக் கவனித்தார். அதில்   நோபல் பரிசு வென்றவர், கலாசாரவாதி, வரலாற்று அறிஞர், கட்டுரையாளர், சுயசரிதையாளர், மானுடவியலாளர், குடிமைச்சமூக சீர்திருத்தவாதி, சமூக செயல்பாட்டாளர், நியூயார்க் நகர முன்னாள் ஆளுநர் என பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருந்த ஒரே பெயர் தியோடர் ரூஸ்வெல்ட். அமெரிக்கா வியட்நாம் போரில் தோற்றுப்போனது. அதில் இறந்துபோனவர்களுக்கான நினைவகம் வாஷிங்டனில் உள்ளது. அதில், இறந்து அல்லது காணாமல் போனவர்கள் என 58 ஆயிரம் ராணுவ வீரர்களின் பெயர்கள் உள்ளன. அதற்கான நிதியகத்தில் 38 வீரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் அமெரிக்காவில் முதன்முதலில் சிகாகோவில்தான் வெளியிடப்பட்டது. இத
  ஓப்பன் மைண்ட்ஸ் 2023 விக்ரமாதித்ய மோட்வானே 46 இந்தி சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் உதவி இயக்குநர். 2010ஆம் ஆண்டு உடான், 2013ஆம் ஆண்டு லூட்டெரா ஆகிய மறக்க முடியாத திரைப்படங்களை உருவாக்கியவர். தனது சினிமா பயணத்தில் தொடக்க கால சினிமா செட்டில், மிக இளம் வயது கொண்ட நபராக இருந்து தற்போது செட்டில் அதிக வயதான நபராக மாறியிருக்கிறார். அப்போதும் இப்போதும் மாறாத காதலுடன் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார். 1940ஆம் ஆண்டில் இந்தி சினிமா உருவாக்கப்பட்டதை ஜூப்ளி என்ற வெப் சீரியசாக எடுத்து வருகிறார். ‘’கதை சொல்லும் முறை, பாத்திரங்கள் என அனைத்துமே வேறுபட்டவை’’ என ஜூப்ளி வெப் சீரிஸ் பற்றி கூறுகிறார். இந்தி சினிமாவின் வெளியை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டு செல்லும் நவீன இயக்குநர்களில் மோட்வானே முக்கியமானவர். ஆபிரஹாம் வர்கீஸ் 68 மருத்துவர், எழுத்தாளர் ஒரு மருத்துவர் நூல் எழுதுவதாக இருந்தால் என்ன எழுதுவார்? அவரது அறுவை சிகிச்சைகள், திறன் வாய்ந்த நுட்பங்கள், காப்பாற்றிய மனிதர்கள் இப்படித்தானே? ஆனால் ஆபிரஹாம் எழுதிய நாவலான தி காவ்னன்ட் ஆஃப் வாட்டர், அதன் கதை அளவில் புகழ்பெற்று பல

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நூல் எழுதலாம்!

படம்
  எழுத்தாளர் அ.முத்துலிங்கம் நரசிங்கபுரம் 3/1/2023   அன்புள்ள அன்பரசு சாருக்கு வணக்கம். வலைப்பூ உங்களை வளமுடன் இருக்கச் செய்யும் என நம்புகிறேன். சென்ற வாரம் நீங்கள் எழுதிய கடிதம் ஊக்கம் தருவதாக இருந்தது. மிக்க நன்றி! நீங்கள் வழிகாட்டியது போல சென்ற வாரம் ஆனந்த விகடன் இதழை வாங்கினேன். இன்னும் படிக்கத் திறக்கவில்லை. காரணம், தீராநதி மாத இதழ். ஆம். இதழ் முழுவதும் படித்தேன். எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துடனான நேர்காணல் சிறப்பாக இருந்தது. தான் சந்தித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு புத்தகம் எழுதலாம் என கனடாவில் வாழும் அகதிகளைப் பற்றி கூறியுள்ளார். பல மனிதர்கள் புத்தகங்களை எழுதுகின்றனர். சில மனிதர்கள் புத்தகமாகின்றனர் என்ற கருத்து அவரது எழுத்தில் இருந்தது. அதேபோல, ‘தி மேன் ஹூ சோல்டு இஸ் ஸ்கின்’ என்ற படக்கதையும் சிறப்பு. ஆண்களின் தோலை விபசாரமாக்குவது பற்றிய கதை. 2020இல் படம் வெளியாகியுள்ளது. மாணவர் இதழ், 2ஆம் தேதி முதல் பறக்கிறது. அனைவரும் ஓட ஆரம்பித்து விட்டனர். எனக்கு எழுத்தாளர்கள் பலர் எழுதுகின்றனர். செர்ஜின் என்ற எழுத்தாளருடனான சந்திப்பு ஊக்கம் தருவதாக இருந்தது. மேலும் அவரிடம்தான் அ

சாளுக்கிய இளவரசன் கீர்த்திவர்மனிடமிருந்து ரத்தம் சிந்தாமல் காஞ்சியை மீட்கும் நந்திவர்மன்! - சமுத்திரகோஷம் - உதயணன்

படம்
  எழுத்தாளர் உதயணன் சமுத்திர கோஷம் உதயணன் வைதேகி பதிப்பகம் விலை ரூ.110 பல்லவ மல்லன் நந்திவர்மன், பாண்டியர்களோடு எல்லையில் போரிடும்போது ஜென்ம எதிரியான சாளுக்கிய அரசு, பின்புறமாக வந்து மன்னன் இல்லாத காஞ்சி கோட்டையை சூழ்ச்சியாக கைப்பற்றுகிறது. பாண்டியர்களை வென்ற நந்திவர்மன், திரும்பி வந்து தனது பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியை எப்படி கைப்பற்றுகிறான் என்பதே கதை. இந்த சரித்திர நாவலில் கல்வெட்டுகளின் சான்றுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள தகவல்படி, நந்திவர்மன் இல்லாத காலகட்டத்தில் சாளுக்கியர்கள் காஞ்சியை தங்கள் வசமாக்குகிறார்கள். பிறிதொரு காலகட்டத்தில் சாளுக்கியர்களிடமிருந்து அதை நந்திவர்மன் மீட்கிறான். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.   அந்த இடத்தை பயன்படுத்தி நாவலை எழுத்தாளர் உதயணன் எழுதியிருக்கிறார். நாவலில் பராக்கிரம யுத்தங்கள், ஒற்றைக்கு ஒற்றை என சண்டைகள் ஏதும் கிடையாது. அனைத்துமே சூழ்ச்சி, தந்திரம் என மூளை விளையாட்டுகள்தான் நிறைந்திருக்கின்றன. நந்திவர்மன் கதையில் வரவே அதிக பக்கங்களை நீங்கள் தாண்டவேண்டும். நந்திவர்மனை பிழையில்லாத வீரனாக எழுத்தாளர் உத

திரைப்படமாக்க தகுதியுள்ள படைப்புகளை எழுத்தாளர்களே கூறுகிறார்கள்- இமையம், சு வேணுகோபால், பவா, முருகேச பாண்டியன்

படம்
  எழுத்தாளர் இமையம் எழுத்தாளர் சு வேணுகோபால் எழுத்தாளர் பவா செல்லத்துரை எழுத்தாளர் முருகேச பாண்டியன் ஆங்கில திரைப்பட உலகில் நிறைய நாவல்களை அடிப்படையாக வைத்து படம் எடுத்து வருகின்றனர். இதனால் நாவலும், அதை அடிப்படையாக கொண்டு கதை, திரைக்கதை   எழுதி எடுக்கப்பட்ட படம் என இரண்டுமே கவனிக்கப்படுகிறது.   தமிழைப் பொறுத்தவரை பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துகளை திருட்டுத்தனமாக எடுத்து பயன்படுத்துவது, தலைப்புகளை திருடுவது என வினோதமாக விளையாட்டுகளை திரைப்பட இயக்குநர்கள் செய்து வருகிறார்கள். திருட்டு வெளிப்பட்டாலும் கூட நவசக்தி விநாயகர் சத்தியமாக எனக்கு இப்படி ஒரு படைப்பு, தலைப்பு இருப்பது தெரியாது என கற்பூரம் அணைக்க தயாராக இருக்கிறார்கள்.  இயக்குநர்கள் ஒரு நாவலை படமாக இருப்பது இருக்கட்டும். படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பை திரைப்படமாக்க தகுதி உள்ளது என நினைக்கிறார்களா என கேட்டுப் பார்ப்போம். எழுத்தாளர் இமையம் ‘’ஒரு நாவலின் எழுத்தாளர், தனது நாவலின் அடிப்படை வடிவத்தில் திரைப்படம் எடுக்கப்படவில்லை என்று குறைகூற முடியாது. நாவலின் வடிவமும், இலக்கணமும், சினிமாவின் கட்டமைப்பும் வேறுப

இரண்டு கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் - செகன் கருணதிலகா, ஜேனிஸ் பாரியட்

படம்
  கவிஞர் ஜேனிஸ் பாரியட் எழுத்தாளர் செகன் கருணதிலகா கதை சொல்லிகளின் பழக்க வழக்கங்கள் செகன் கருணதிலகா புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் படிப்பது… நான் ஒரே நேரத்தில் நிறைய நூல்களைப் படிப்பேன். செவ்வியல் இலக்கியம், கட்டுரைகள், என்னுடைய துறை சாராத நூல்கள், இப்போது அசோக் ஃபெர்ரியின் தி அன் மேரேஜபிள் மேன், ஆர்மிஸ்டிட் மௌபினின் மோர் டேல்ஸ் ஆப் தி சிட்டி ஆகியவற்றை படித்து வருகிறேன். எலிசபெத் கில்பெர்டின் கமிட்டட் – எ ஸ்கெப்டிக் மேக்ஸ் வித்   மேரேஜ், அன்னா ரோஸ்லிங் ரோன்லண்ட்டின் ஃபேக்ட்புல்னெஸ், ஹன்ஸ் ரோஸ்லிங்க், ஆலா ரோஸ்லிங்க், இரா லெவினின் ரோஸ்மேரி பேரி ஆகியோரது நூல்களை படித்து முடித்தேன். எழுதும்போது..   மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு எழுதுவேன். என்னைச் சுற்றிலும் கத்தரிப்பூ, மெஜந்தா நிற விளக்குகள் எரியும்.   செவ்வியலான இசையைக் கேட்பேன். எழுதி முடித்தவுடன் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பேன். ஒரு கிளாஸ் என்பதைத்   தாண்டினால் எழுத்து வேலைகளை செய்ய முடியாது. எப்போதும் பிடித்த நூல்கள் குழந்தையாக இருக்கும்போது தி குரோனிக்கல்ஸ் ஆஃப் நார்னியா. அகதா கிறிஸ்டியின்   அண்ட் தென் தேர் வேர் நன் நூல்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும்! மருந்து - புனத்தில் குஞ்ஞப்துல்லா

படம்
  எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா மருந்து - நாவல் மருந்து புனத்தில் குஞ்ஞப்துல்லா தமிழில் சு.ராமன் வாரணாசியில் உள்ள மருத்துவமனைக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனை. அங்கு பணியாற்றும் பல்வேறு மனிதர்களின் கதை. கதையின் தொடக்கத்தில் தேவதாஸ் என்ற இளைஞர், மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக வருகிறார். இப்படி தொடங்கும் கதை பிறகு, லெஷ்மி, டி குமார், ஹஸன், க்வாஜா, தனுஜா, மேட்ரன் ஹெலன், மேரி, குஞ்சம்மா, பியாரோலால் என நிறைய பாத்திரங்களைக் கொண்டதாக மாறுகிறது. இதில், குறிப்பிட்ட பாத்திரங்களை மையப்படுத்தி நகர்கிறது என எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் மேரிக்கான இடமும், அவளுக்கான விவரணைகளும் நன்றாக உள்ளன. பிறருக்கான வலி, வேதனைகளை அறிந்து மருந்து கொடுத்து அவர்கள் வாழ்வதற்கு தைரியம் தருபவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள். அதேசமயம் அவர்களது தனிப்பட்ட தொழில் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்னைகள், சீர்கேடுகள், மன உளைச்சல்கள் எழுகின்றன. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை புனத்தில் தனது வசீகரமான மொழியில் கூறியுள்ளார். தேவதாஸ் –லெஷ்மி கதை, எப்போதும் போலான காதல் கதையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்