இடுகைகள்

பிக்பாக்கெட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

தீக்குச்சியை எரித்தே வெளிச்சம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிக்பாக்கெட் டூ ரட்சகர் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும் . எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார் . அதாவது , தினசரி எங்களுக்கு வேலை உண்டு . இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ் , டி . எம் . கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன் . ஊக்கமூட்டும்படி இருந்தது . சமஸ் செயலூக்கம் பற்றியும் , ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார் . வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு , நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார் . கலை எப்படி மனிதனை மாற்றுகிறது , அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை . இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான் . காலையில் கவிதா அக்கா பேசினார் . தற்போது ஓமனில் வாழ்கிறார் . எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர் . அவருக்குப் பிடித்த நூல்கள் , வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம் . விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார் . இவர் எனக்கு நண்பரல்ல . அண்ணனின் தோழி . உறவினர் . தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித