அகிம்சை வழியில் பிறருடன் கலந்துரையாட உதவும் நூல் - நான் வயலன்ட் கம்யூனிகேஷன்
நான் வயலன்ட் கம்யூனிகேஷன் ரோசன்பர்க் இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு வன்முறையில்லாத வகையில் எப்படி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஒருவரின் பேச்சு என்பது முன்முடிவுகள், தீர்ப்புகள், புகார் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை கூறவேண்டும் என கூறி அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. இதில் முக்கியமான விஷயம் தனது தேவைகளை பிறரை புகார் கூறும் வடிவில் கூறுகிறோம் என பேசுபவருக்கும் தெரியாது. கேட்பவருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நிறைய கருத்து முரண்பாடுகள், வன்முறை உருவாகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என நூல் பல்வேறு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்குகிறது. பரிசு, தண்டனை என்ற வகையில் ஒருவரை வேலையை செய்ய வைப்பது எப்படி தவறாக முடியும் என்பதை நூல் விளக்கியுள்ளது முக்கியமான அம்சம். உளவியல் ரீதியாக பரிசு, தண்டனை விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கு உதவக்கூடும். ஆனால் மனிதர்களுக்கு பெரிய பலன் அளிக்காது. சாதாரண பேச்சு, ஓரிடத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டுகிறது. இன்னொரு இடத்தில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கருத்தை வித்திடு...