இடுகைகள்

சிப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிப் தயாரிப்பில் நுழையும் நிலப்பரப்பு ரீதியான அரசியல்!

படம்
சிப் தயாரிப்பு  சிப்களின் தயாரிப்பு முறை கணினி மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் பயன்படும் சிப்கள் காலத்திற்கேற்ப மாற்றங்களைப் பெற்று வருகின்றன.  முன்பு கணினிகளுக்கு பயன்பட்டு வந்த சிப்கள் இன்று கார், டிவி, சலவை இயந்திரம், ஸ்மார்ட்போன் என பல்வேறு சாதனங்களிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிப் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கு ஏற்ப செயல்பட முடியாமல் தடுமாறின. இதன் காரணமாக, வீட்டு பயன்பாட்டு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள் உற்பத்தி தேங்கத் தொடங்கியது. இதற்கு சிப் தயாரிப்பில் அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை என சிலரும், சிப் தயாரிப்பு நிறுவனங்கள்  சந்தையில் குறைவாக இருப்பதால்தான் இப்படி ஒரு பிரச்னை ஏற்படுகிறது என விமர்சனங்கள் கிளம்பின.  உலகளவில் சிப் தொழிற்துறை  40 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக உள்ளது. இன்று  நாம் பயன்படுத்தும் ஆன்லைன் வங்கிச்சேவை, மின்னஞ்சல் என பல்வேறு சேவைகளின் பின்புலத்திலும் சிப்கள் உள்ளன. 1959ஆம் ஆண்டு பெல் ஆய்வகத்தைச் சேர்ந்த முகமது அடாலா மற்றும் டாவோன் காங் ஆகிய இருவர், அடிப்படை கணித செயல்பாடுகளுக்காக சிப்பை உருவாக்கினார்.  புரோச

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

கிராபிக் சிப்களுக்கு கூடுகிறது மவுசு!

படம்
                        சிப்களின் வேகம் கூடிவருகிறது ! கடந்த ஐம்பது ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பயன்படுத்தும் கணினிகளின் வேகம் கூடியுள்ளது . ஒப்பீட்டளவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிப்களின் வேகம் கூட்டப்பட்டு வருகிறது . இன்டலை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவரான கார்டன் மூரின் விதிகளின் பட வேகம் அதிகரித்து வருகிறது . 1965 இல் இதற்கான விதியை இவர் உருவாக்கினார் . சிப்களை முடிந்தளவு சிறிதாக உருவாக்கி அதன் பாகங்களையும் நேர்த்தியாக உருவாக்கி வேகத்தை கூட்டி வருகின்றனர் . மைக்ரோபுரோசசர்கள் இன்று கணினிகளின் திறனை அதிகரித்து வருகிறது . நமது வாழ்க்கையின் பெரும்பகுதி டிஜிட்டல்மயமாக மாறியுள்ளது . உணவு , போக்குவரத்து முதல் சமூக வலைத்தளம் , ரோபோட்டிக்ஸ் , மிகை மெய்ம்மை , எந்திர கற்றல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இப்போது நாம் அதிளளவு டேட்டாவை உருவாக்கி வருகிறோம் . அதனை மேக கணிய முறையில் பயன்படுத்தி வருகிறோம் . இப்படி சேகரித்து வைக்கும் டேட்டாவை அலச நமக்கு அதிகளவு கணினித் திறன் தேவை . ஆனால் இப்படியே இந்த செயல்பாட்டை கொண்டு செல்லமுடியாது . ட்

வருங்கால டெக் சாத்தியங்கள் என்ன?

படம்
    cc       எதிர்கால டெக் டிரெண்ட்ஸ்! விர்ச்சுவல் ரியாலிட்டி மேஜிக் லீப் என்ற நிறுவனம் சிஇஎஸ் நிகழ்வில் தன்னுடைய கண்டுபிடிப்பை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்படுத்தியது. இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு நூறு கோடி ரூபாய். மினி கணினியை கண்ணாடி போல அணிந்துகொண்டு செயல்படலாம் என்று இந்த நிறுவனம் கூறுகிறது. இதில் கேமராவில் ஒளி எப்படி செயல்படுமோ அப்படி அதே விதத்தில் இதிலும் செயல்படுகிறது. நிஜ உலகில் அனிமேஷன் பாத்திரங்கள் வந்தால் எப்படியிருக்ககும்? நீங்கள் கதையில் படித்த பாத்திரங்கள் அப்படி உருவாகி உங்கள் குளிர்சாதனப்பெட்டி அல்லது ஜன்னல் ஓரம் நிற்கும் மேஜிக் லீப் நிறுவனம் தனது கண்ணாடியின் விலை என்னவென்பதை இன்னும் சொல்லவில்லை. இது மட்டுமல்ல, ஹெச்டிசியின் விவே புரோ, லூக்ஸிட் விஆர், வூஸிக்ஸ் சிஸ்டம், எக்ஸ் 1- தேர்ட் ஐ என ஏராளமான விர்ச்சுவல் ரியாலிட்டி ஐட்டங்கள் சிஇஎஸ் விழாவில் காட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பம் விளையாட்டுகளை இன்னும் நிஜமாக விளையாடுவது சாத்தியமாக்கலாம். கிரிப்டோகரன்சி இன்று உலக நாடுகளின் மத்திய வங்கி அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காவிட்டாலும் கூட பிட்காயின் வணிகம் இணையத்தில் சீரும் சி

இனி உங்கள் ஏசி பேசும்! - எல்ஜியின் புதிய சிப் காரணம்

படம்
எல்ஜி, ஸ்மார்ட் சாதனங்களை இயக்கும் மூளை போன்ற சிப் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதனை நியூட்ரல் சிப் என்று அழைக்கின்றனர். எல்ஜி நியூட்ரல் எஞ்சின் எனப்படும் இந்த சிப், குரல், டேட்டா ஆகியவற்றை பரிசீலனை செய்யும் திறன் பெற்றது. இந்த சேவை மேக கணினியத்தில் இணைக்காத போதும் செய்யமுடியும். மே 17 அன்று சியோலில் எல்ஜி, நியூட்ரல் எஞ்சின் என்பது மூளையின் நியூரான்களைப் போன்ற செயல்பாடுகளைக் கொண்டது என அறிவித்தது. கடந்த சில ஆண்டுகளாக எல்ஜி தன் ஏஐ பொருட்களை திங்க் என்ற பிராண்டில் சந்தைப்படுத்தி வருகிறது. இணைய இணைப்பின்றி செயல்படும் வசதி, அதற்கான பாதுகாப்பு ஆகியவற்றை எல்ஜி மனதில் கொண்டு இதனைத் தயாரித்திருக்கலாம் என்கிறாலர் அட்னன் பரூக்கி.  புதிய எல்ஜி ஏஐ சிப், எதிர்காலத்தில் அனைத்து எல்ஜி பொருட்களையும் கட்டுப்படுத்தும் விதமாக தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக இருக்கலாம். கருவி, இணையத்தில இணைக்கப்படாமலிருந்தாலும் செயல்படுவது இதன் ஸ்பெஷல்.  இதன் அர்த்தம் இனி உங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஏசி, வாஷிங்மெஷின், டிவி, ஸ்மார்ட் உதவியாளர் என அனைத்து பொருட்களுக்கும் கண், காது கிடைக்கப்போகிறது என்ப