இடுகைகள்

மம்முட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிகளுக்கு இடையே சண்டை - பாடம் எடுக்கும் பதினெட்டாம் படி!

படம்
பதினெட்டாம் படி - மலையாளம் இயக்குநர் - சங்கர் ராமகிருஷ்ணன் அரசு மாதிரிப்பள்ளி, காசு கொடுத்து படிக்கும் கிறிஸ்தவப் பள்ளி என வர்க்க வேறுபாடுகளைக் கொண்ட இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சண்டை, காதல், மோதல் அனைத்தும்தான் படம். மம்மூக்கா படிப்பை தினசரி வாழ்க்கையில் செய்யும் விஷயங்களாக சொல்லித் தந்து அரசுப்பள்ளி மாணவர்களை கரையேற்றுகிறார். படம் சுபம். இதை எதுக்குங்க நான் 2.30 மணிநேரம் பார்க்கணும்னு கேட்டா, அவங்களை ஞான் கொன்னு களையும். பின்ன நாங்க பாத்தோமுல்ல நீங்களும் பார்க்கணும் தம்பி. கதையை அஷ்வின் என்ற பாதிரியார் - யெஸ் பிரிதிவி ராஜ் சொல்லத் தொடங்குகிறார். அவருக்கு ஊக்கமூட்டிய ஆசிரியர் ஒருவர் பள்ளியில் இருக்கிறார். ஆனால் அங்கு பணக்கார மாணவர்கள் செய்யும் பிரச்னையில் பெண் மாணவி சிக்க, அதன் மூலம் மாணவர் தலைவரான அஷ்வின் நல்ல பெயரும் நாசமாகப்போகிறது. அதோடு ஜாய் என்ற ஆசிரியரின் உயிரும் விபத்தில் பலியாகிறது. இதன் விளைவாக அரசுப்பள்ளியில் அஷ்வின் சேர, முன்னமே பழிவாங்கும் வெறியில் உள்ள அம்மாணவர்கள் அவரை அடி பின்னி எடுக்கின்றனர். பின் ஒழுங்காக படித்து முன்னேறி சாதிப்பதுதான் கதை.