இடுகைகள்

சுய இன்பம் வணிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன அதிகாரியைக் கொன்றது இன்பத்தை தூண்டும் மேஜிக் சூப்தானா? மேட் இன் இந்தியா - ராஜ்குமார் ராவ்

படம்
            மேட் இன் சீனா ரகுவீர் மேத்தா என்று குஜராத்தி வியாபாரி, தன் சிறுமூளை பெருமுளை என அனைத்திலும் உதிக்கும் யோசனைகளை தொழிலாக செய்கிறார். ஆனால் ஒன்றுமே அவருக்கு லாபம் தரமாட்டேன்கிறது. அவரது தந்தை அவருக்கு கொடுக்கும் யோசனை சீனாவுக்கு போ,எதையாவது கத்துக்கிட்டு வந்து தொழில் செய் என்கிறார். தனது அண்ணனுடன் அங்கு செல்பவர், சிறப்பான தொழில் ஒன்றுடன் இந்தியா வந்து சேர்கிறார். அதுதான் டைகர் சூப். புலியின் ஆண்குறியை கரைத்து செய்யும் உத்வேக செக்ஸ் மருந்து அது.  அதனை எப்படி இந்தியாவில் ரகுவீர் விற்றார், வணிகத்தில் வென்றார் என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சி.  பொதுவாக இந்தியாவில் செக்சைப் பற்றி நேரடியாக யாரிடமும் பேசும் பழக்கம் கிடையாது. இதனால் செக்ஸ் சூப்பை எப்படி வியாபாரம் பேசுவது எனும்போது தன்மய் என வணிகர் ரகுவீருக்கு உதவுகிறார். அவர்தான் இந்திய மக்கள் பற்றிய அடிப்படையை சொல்லிக்கொடுக்கிறார். இதனால் அவரின் யோசனைப்படி சிறந்த செக்ஸ் மருத்துவரை தேடி  அலைகிறார் ரகுவீர். அப்படி கிடைத்தவர் மருத்துவர் வாரி. இவருக்கு ஆடு மட்டும்தான் துணை. மற்றபடி செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே நினைக்கிறார்