இடுகைகள்

காற்றாலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசு உதவியின் மக்களே அமைக்கும் காற்றாலை!

படம்
  மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை! இங்கிலாந்தின் பிரிஸ்டல் அருகில் உள்ள மக்கள் குழுவினர், தாங்களே நிதி திரட்டி காற்றாலை அமைக்க முயன்றுவருகின்றனர். லாரன்ஸ் வெஸ்டன் என்ற பகுதியிலுள்ள மக்கள்தான் தாங்களே நிதி திரட்டி 150 மீட்டரில் காற்றாலையை அமைக்க முடிவெடுத்துள்ளனர். காற்றாலைக்கு  அரசின் எந்த உதவியும் பெறவில்லை.  4.2 மெகாவாட் திறனில் காற்றாலையை அமைக்கவுள்ளனர். இதில் 3 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள். மிஞ்சும் மின்சாரத்தை பிறருக்கு விற்க முடிவெடுத்துள்ளனர்.  “மக்களே சேர்ந்து அமைக்கும் காற்றாலை திட்டம் இது. இதனை வெற்றிகரமாக செய்து முடிக்கும்போது மக்களின் கரிம எரிபொருட்களால் ஏற்படும் வறுமை அளவு குறையும். ” என்றார்  லாரன்ஸ் வெஸ்டன் பகுதியில் வாழ்பவரான மார்க் பெப்பர்.  இப்பகுதி மக்கள் இப்படி தூய ஆற்றல் தரும் காற்றாலை திட்டத்தை உருவாக்க அரசை அணுகியுள்ளனர். ஆனால் பல்வேறு அனுமதி பெறுவது என திட்டம் நடைமுறைக்கு வருவது காலதாமதமாகிவந்திருக்கிறது. எனவே, மக்களே நிதி திரட்டி செய்துவிடலாம் என களமிறங்கிவிட்டனர். வணிகரீதியாக அமைக்கப்படும் காற்றாலைகளை விட மக்கள் குழுவாக இணைந்து நிறுவும் காற்றாலை  அதிக பயன்

நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சிறுதீவுகளின் சூழல் முயற்சிகள்!

படம்
  சூழலைப் பாதுகாக்கும் சிறு தீவுகள்!  அயர்லாந்தின் வடக்குப் புறத்தில் நிறைய தீவுகள் அமைந்துள்ளன. இதில் எல் வடிவில் அமைந்துள்ள தீவு, ரத்லின் (Rathlin). இங்கு மின்சார வசதி கிடைத்ததே, தொண்ணூறுகளில்தான். மூன்று  காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்று மூலம் ஆற்றல் சேகரிக்கப்பட்டது.  ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, அதனை பராமரிப்பதற்கான வசதிகளும் பழுதடைந்த பாகங்களும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது. இதற்குத் தீர்வாக, 2007ஆம் ஆண்டு ரத்லின் தீவு,  அயர்லாந்து நாட்டின் மின் அமைப்புடன் இணைக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிற்குள் ரத்லின் தீவு, கார்பன் இல்லாத தீவாக மாறும் செயல்பாடுகளை செய்து வருகிறது. பிறரைச் சாராமல் தனக்கான செயல்பாடுகளை வரையறுத்துக்கொண்டு செயல்படுவதுதான் ரத்லின் தீவின் முக்கியமான சாதனை. டென்மார்க்கின் சம்சோ (Samso), கிரீசின் டிலோஸ் (Tilos), தென்கொரியாவின் ஜேஜூ (Jeju) ஆகிய சிறு தீவுகள் அனைத்துமே தூய ஆற்றலைப் பயன்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.  தீவுகள் சிறியவை. இதிலுள்ள மக்களும் குறைவு. இவர்கள் தங்களின் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதால்

2022இல் நடைமுறைக்கு வரும் பசுமைத்தீர்வுகள்!

படம்
  பசுமைத் தீர்வுகள் 2022 உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் சார்ந்த கண்டுபிடிப்புகள் ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டில் கவனத்தைக் கவரும் விதமான புதுப்பிக்கும், மாசுபாடு இல்லாத ஆற்றல் சார்ந்த தீர்வுகள், தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.  சோலார் ஆற்றல் தமிழ்நாட்டிற்கு,  அமெரிக்காவின் உலக மேம்பாட்டு நிதி நிறுவனம்(DFC), சோலார் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. 3.3 ஜிகாவாட் அளவுக்கு மின்சாரத்தை தயாரிக்கும் திறனை நிதியுதவி மூலம் அரசு பெற வாய்ப்புள்ளது. சோலார் பேனல்களை அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் பெருமளவு உருவாக்குவதுதான் திட்ட நோக்கம்.  இந்திய அரசு, இந்திய உள்நாட்டு சோலார் பேனல் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 4,500 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளது. அரசின் ஊக்கத்தொகை, வரிகளை குறைத்தது ஆகியவை காரணமாக நடப்பு ஆண்டில் உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.  பசுமை நிதி ஐரோப்பாவில் மாசுகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஜெர்மன் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் நிறுனம் குறைந்த வட்டியிலான கடனை வழங்குகிறது. இதன் காலம் மூன்று ஆண்டுகள். இப்படி சூழலைக் காக்க  வழங

வரலாற்றை மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகள்! - கழிவறை, காம்பஸ், வெடிமருந்து, கடிகாரம்

படம்
                    காம்பஸ் கி . பி 200 இரும்பினால் ஆன காம்பஸை முன்னர் சீனர்கள் கண்டுபிடித்தனர் . இவர்கள் கண்டுபிடித்த தற்கு பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் காந்த காம்பஸ் கண்டுபிடிக்கப்பட்டது . இதற்குப்பிறகுதான் கப்பலில் மாலுமிகள் எளிதாக வழி கண்டுபிடித்து புதிய தேசங்களுக்கு சரியாக கடல் வழி கண்டுபிடித்து செல்ல முடிந்தது . இதன்மூலம் கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை மாற்றங்களுக்கு பயப்படாமல் பயணித்தனர் . 16 ஆவது மற்றும் 17 ஆவது நூற்றாண்டில் காம்பஸ் பெரிய புரட்சியை செய்தது எனலாம் . கடிகாரம் 13 ஆம் நூற்றாண்டு முள் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் நீர் , மணல் மூலம் கடிகார நேரம் கணிக்கப்பட்டு வந்தது . 13 ஆம் நூற்றாண்டில் மெல்ல எந்திர கடிகாரங்கள் உருவாக்கப்படத் தொடங்கின . அந்த காலகட்டத்தில் இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்பதை பெரிதும் மக்கள் கவனிக்கவில்லை . ஆனால் இவை தென்பட்ட இடமாக தேவாலயங்களே இருந்தன . 14 ஆவது நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்த தேவாலயங்களில் கடிகாரங்கள் தென்பட்டன . பின்னர் எந்திர கடிகாரங்களின் நேர துல்லியம் மெல்ல அதிகரித்து 30 ஆண்டுக