இடுகைகள்

ஜெர்மன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

pachai sivappu pachai: பசுமை அரசியல் தத்துவ நூல் (Tamil Edition) Kindle Edition

படம்
                      பச்சை சிவப்பு பச்சை நூல், பசுமை அரசியல் கட்சிகளின் தோற்றம், தத்துவம், வளர்ச்சி, தேர்தல் வெற்றி ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. இன்று உலகம் முழுக்க பசுமைக்கட்சிகள் உருவாகி தேர்தலில் பங்கேற்று வருகின்றன. இதன் தொடக்கப்புள்ளி சூழல் அமைப்புகள்தான். அந்த அமைப்புகளில் இருந்த சிந்தனைவாதிகள், அறிவுஜீவிகளால்தான் பசுமைக்கட்சிகள் உருவாகின. உண்மையில் இந்த கட்சிகளில் அடிப்படை என்ன, எந்த கொள்கை, தத்துவத்தில் இயங்கி வருகின்றன என்பதை ஆராய்ச்சி நோக்கில் வாசகர்களுக்கு காட்டுகிற நூல் இது. சூழலை அரசியலில் இருந்து எப்போதும் பிரிக்க முடியாது. ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறும்போது இன்னொருபுறம் அந்நாட்டு மக்கள் சூழல் கேடுகளால் தீராத நோய்களுக்கு உள்ளாவதை அனைவரும் கண்டு வருகிறோம். சூழல் பற்றிய கவனத்தை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் நூல் முக்கியத்துவம் கொண்டதாகிறது.     click https://www.amazon.in/dp/B0D6MZRSSQ

பசுமைக் கட்சிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள்

படம்
ஐரோப்பாவில் தோன்றிய பசுமைக்கட்சிகள் தொடக்கம் முதலே இடதுசாரி பாதையைப் பின்பற்றத் தொடங்கின. அங்கு, இடதுசாரிகள் போல தோற்றமளித்த மார்க்சிய அமைப்புகள், சமூக ஜனநாயக கட்சிகள், மைய இடதுசாரி கட்சிகளைப் பின்தொடரவில்லை. ஜெர்மனியின் புகழ்பெற்ற சூழல் சோசலிசவாதி இருந்தார். அவர் பெயர், ரூடோல்ஃப் பாஹ்ரோ. 1981ஆம் ஆண்டு, ஆல்டர்நேட்டிவ் இன் ஈஸ்டர்ன் யூரோப் என்ற நூலை எழுதினார். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார். அவருக்கு ஜெர்மனி நாட்டை சூழல் சோசலிச பாதையில் கொண்டு செல்ல ஆர்வம் இருந்தது என இ பி தாம்சன் குறிப்பிடுகிறார். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோர்ஸ், இகோலஜி ஏஸ் பாலிடிக்ஸ் (1980) என்ற நூலை எழுதினார். பொருளாதார வளர்ச்சியால் சூழல் மாசுபாடு ஏற்படுவதைப் பற்றிய கவலையை நூலில் வெளிப்படுத்தியிருந்தார். 1960ஆம் ஆண்டு, டேனி கோஹ்ன் பென்டிட், அப்சொல்யூட் கம்யூனிசம்- தி லெப்ஃட் விங் ஆல்டர்நேட்டிவ் என்ற நூலை எழுதினார். 1995ஆம் ஆண்டு, பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவரான ஆலைன் லிபிட்ஸ் க்ரீன் ஹோப்ஸ் என்ற நூலை எழுதினார். நூலில், மரபான இடதுசாரி சிந்தனையை மறுத்து தன் கருத்துகளை எழுதியிருந்தார். சூழலியலுக்கு செல்ல இடத...

ஜெர்மன் உளவுத்துறையை மிரட்டும் கோமாளி ஹேக்கர்கள் குழு! - ஹூ யம் ஐ- ஜெர்மன் திரைப்படம்

படம்
                ஹூ எம் ஐ ஜெர்மனி திரைப்படம்    படத்தின் நாயகன் பெஞ்சமின் என்சேல் . ஆனால் படத்தில் இவரை ஜூனியர் பாத்திரமாக்கி மூன்று பேர் கொண்ட ஹேக்கர் குழு , பெஞ்சமினின் கல்லூரி தோழி என முழுக்க ஆக்கிரமித்துள்ளனர் . படத்தின் இறுதியில் பார்வையாளர்களுக்கு சஸ்பென்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று . பெஞ்சமின் தனது பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் . அந்த வீட்டில் வேறு யாருமில்லை . அவரது பாட்டிக்கு அல்சீமர் வியாதி உள்ளது . அவரைப் பார்த்துக்கொண்டு கணினியில் ஹேக்கிங் செய்து மிஸ்டர் எக்ஸ் என்ற புகழ்பெற்ற ஹேக்கரின் கவனத்தை ஈர்க்க முயல்கிறான் . அப்போது எதிர்ப்படும் குழுதான் அவனது வாழ்க்கையையே மாற்றுகின்றனர் . கிளே எனும் பெயர் கூட பெஞ்சமின் அவர்களுக்கு கொடுப்பதுதான் . அக்குழுவில் ஸ்டீபன்தான் தலைவன் . அவனின் அன்பை தனது திறமையைக் காட்டி பெற்றுவிட்டாலும் மற்றவர்கள் அவனை சின்ன பயலே என்றுதான் நினைத்து பேசுகிறார்கள் . ஸ்டீபனின் வாழ்நாள் கனவே மிஸ்டர் எக்ஸின் சபாஷ் என்ற பாராட்டைப் பெறுவதுதான் . அதனை பெறும் முயற்சியில் அவர்கள் சந்தி...