இடுகைகள்

கல்தூண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர