இடுகைகள்

பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

புலிகளை பாதுகாக்க பாடுபட்ட வால்மிக் தாப்பர் - அஞ்சலிக் கட்டுரை

படம்
  சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான வால்மிக் தாப்பர் காலமாகியுள்ளார். செரிமான உறுப்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். உலகில் காடுகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவராக வால்மிக் தாப்பர் இருந்துள்ளார். இரண்டு டஜன் நூல்களை புலிகளைப் பற்றி எழுதியுள்ளார். பிபிசி வெளியீடான லேண்ட் ஆப் டைகர் (1997) என்ற ஆவணப்படம் இவரது ஆளுமையை உலகிற்கு வலுவாக சொன்னது. வால்மிக் தாப்பர் கானுயிர்கள் பற்றி முறையாக கற்று அறிந்தவர் அல்ல ரந்தம்பூரில் உள்ள புலிகளைப் பார்த்து ஆய்வு செய்து ஐம்பது ஆண்டுகளாக அறிவை சேமித்து அதை உலகினரோடு பகிர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டு, ராந்தம்பூர் பவுண்டேஷன் என்ற தொண்டூழிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியாக காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தஸ்ட்கர் என்ற மற்றொரு தொண்டூழிய நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2012ஆம் ஆண்டு டைகர் மை லைப், ராந்தம்பூர் அண்டு பியான்ட் என்ற நூலை எழுதினார். இரைச்சல் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளி தொலைவிலுள்ள இடங்களில் புலிகள் வாழ்கின்றன, வாழ விரும்புகின்றன என ச...

பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை

படம்
  பேரிடர் கால பாதுகாப்பு, கொள்ளையிலிருந்து விடுதலை பேரிடர் காலங்களில் வீடுகளில் புகுந்து பொருட்களை திருட பலரும் முயல்வார்கள். மனிதர்கள் இயல்பாகவே மோசமானவர்கள்தான். சட்டங்கள் இருப்பதால், அவர்கள் வேறு வழியின்றி தண்டனைக்கு பயந்து நல்லவர்களாக நடிக்கிறார்கள். நான் இப்போது சொல்வது குரூரமாக இருந்தாலும் ஆபத்தான காலங்களில் மனிதர்களின் மனம் மோசமானது என்பதை நிரூபிக்க நிறைய உதாரணங்கள் உண்டு பேரிடர் அல்லது மதக்கலவரம் உருவாக்கப்படும்போது பாதிக்கப்படுபவர்களின் வீடுகளை கொள்ளையிடுவது, பெண்களை வல்லுறவு செய்வது இயல்பானது. இதை தடுக்க வீடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். இதை செய்து கொடுப்பு பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்குகின்றன. கதவுகளை பூட்டுவது, பாதுகாப்பு கேமரா, அலாரம் எழுப்புவது, கதவுகளை குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாக பூட்டுவது என நிறைய வசதிகள் வந்துவிட்டன. தற்காப்புக்காக ஒருவரை தாக்குவது என்றாலும் அந்தந்த நிலப்பரப்பிற்கு ஏற்றவகையில் சட்டங்கள் மாறுபட்டிருக்கும். அதை புரிந்துகொண்டு இருக்கவேண்டும். ஆயுதங்களை கையாளும் சூழலில்,  முறையாக பயிற்சி எடுப்பது நல்லது. இந்தியாவில் இந்துத்துவ மதவா...

இந்தியச் சமூகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்கள் - கர்நாடக மாநிலம் முதலிடம்

      குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு - கர்நாடகம் முதலிடம் இப்படி தலைப்பு வைப்பது பெருமைக்குரியது அல்ல. ஆனால் குழந்தை திருமணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவது ஆபத்தான திசையை நோக்கி சமூகம் பயணிப்பதைக் காட்டுகிறது. அண்மையில் என்சிபிசிஆர் என்ற குழந்தைகளின் உரிமைக்கான அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் 215 குழந்தைத் திருமணங்கள் கர்நாடகத்தில் நடந்துள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது. இதற்கடுத்து அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், உபி, பீகார், ஜம்மு காஷ்மீர், டெல்லி ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இந்தியாவில் பதினெட்டு வயதுக்கு கீழுள்ள 1.5 மில்லியன் சிறுமிகள் குழந்தை திருமணம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான இளையோர் பிரிவில் பதினாறு சதவீதம் பேர் குழந்தை திருமணத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்படுவது, சமூகத்தில் உள்ள பாலின பேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்த செயல்பாடு வழியாக அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றன...

குழந்தை பத்திர முறையை உருவாக்கியவர்கள்!

படம்
  டாரிக் ஹாமில்டன் - வில்லியம் டாரிட்டி darrick hamilton -william darity 2023ஆம் ஆண்டு, ஜூலையில் அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் நகரம், அங்கு பிறக்கும் புதிய குழந்தைகளுக்கு 3200 டாலர்களை வங்கிக்கணக்கில் செலுத்துவதாக கூறி, அதை நடைமுறைக்கு கொண்டு வந்தது. நாட்டிலேயே முதல்முறையாக நடைமுறைக்கு வந்த குழந்தை பத்திர முறை இதுவே. பதினெட்டு தொடங்கி முப்பது வயது வரையில் மேற்கண்ட தொகை பெருகி 24 ஆயிரம் டாலர்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதை வைத்து ஒருவர் தனது கல்லூரிக்கான செலவை சமாளிக்க முடியும். குழந்தை பத்திர திட்டத்தில் தற்போது, 15 ஆயிரம் குழந்தைகள் இணைக்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை டாரிக் ஹாமில்டன் உருவாக்கினார். அதை நண்பரான வில்லியம் டாரிட்டியிடம் கூறினார். இப்படித்தான் திட்டம் சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.  ஹாமில்டனுக்கு வயது 53. கருப்பினத்தவர்களின் பொருளாதார வளம் சார்ந்து ஆய்வுசெய்து வருகிறார். பொருளாதாரம், நகரக்கொள்கைகள் துறை சார்ந்த பேராசிரியராக வேலை செய்கிறார். 2022ஆம் ஆண்டு ஆய்வுப்படி, நடுத்தர வெள்ளை இன குடும்பத்தின் செல்வம், கருப்பினக் குடும்பத்தை விட ஆறு மடங்கு அதிகம். கலிபோர்...

சீன வெளியுறவுக்கொள்கையின் அடையாளமாக மாறிய பாண்டா கரடி!

படம்
  பாண்டாவுக்கு பாதுகாப்பு அமெரிக்காவில் உள்ள இரண்டு வனவிலங்கு காட்சி சாலைகளில் பாண்டா பாதுகாப்புக்கென ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. கூடுதலாக ஸ்பெயின் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சீனாவின் கானுயிர் பாதுகாப்பு சங்கம், ஸ்பெயின் நாட்டின் ஜூ அக்வாரியம், அமெரிக்காவின் சாண்டியாகோ ஜூ வைல்ட்லைஃப் அலையன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விரைவில் ஒரு ஜோடி பாண்டா, அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கிறது.  உலகில் பாண்டா கரடிகள் தற்போதைக்கும் சீனாவில் மட்டும்தான் இருக்கின்றன. உலக கானுயிர் நிதியகம் இதுபற்றி வெளியிட்ட அறிக்கையில், சீனா, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வந்த பாண்டா கரடிகள், மனிதர்களின் செயல்பாடுகளால் பெருமளவுக்கு அழிந்துவிட்டன என்று கூறியுள்ளது.  பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பியர் அர்மாண்ட் டேவிட், சீனாவில் சில காலம் வாழ்ந்தார். விலங்கியலில் ஆர்வம் கொண்டவரான அவரே மேற்குலகைச் சேர்ந்தவர்களில் பாண்டா கரடியைப் பற்றிய குறிப்புகளை எழுதிவைத்து மக்களுக்கு தெரிய வைத்தவர். டேவிட் 1869ஆம் ஆண்ட...

தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள பாச உணர்வு பற்றிய ஆராய்ச்சி

படம்
  harry harlow ஒரு தாயுக்கும் குழந்தைக்கும் இடையிலுள்ள பாசத்திற்கு அடிப்படைக் காரணம் என்ன? குழந்தை பிறந்தவுடன் அதற்கென உணவு தேவைகள் உள்ளன. அதை அம்மா அருகிலிருந்து தீர்க்கிறார்கள். இப்படித்தான் பாசம் என்ற உணர்வு உருவாகிறது. இதை ஒட்டுதல் என்று கூறலாம். இதை பல உளவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால் ஹாரி இதை வேறுபடுத்தி பார்த்தார். அதாவது, அவர் செய்த சோதனையில் தாய் குழந்தைக்கு உணவே தரவில்லை என்றாலும் கூட பாசம், ஒட்டுதல் உருவாகிறது என நிரூபித்தார்.  இந்த ஆய்வில் அவர் மக்காவ் இன குரங்கை பயன்படுத்தினார். ஒரு கூண்டில் இருந்த குரங்கிற்கு உணவுதேவைகள் எளிதாக கிடைக்கும்படி செய்தார். இன்னொரு கூண்டில் இருந்த குரங்கிற்கு தாய் குரங்கு உணவு ஊட்டவில்லை. அது துணியிலான குரங்கு பொம்மை. அதை குட்டி மக்காவ் குரங்கு, தாய் என நினைத்துக்கொண்டது. உணவு தரவில்லை என்றாலும் குட்டி குரங்கிற்கு ஆபத்து ஏற்படும்போது, துணியில் செய்த பொம்மையை அணைத்துக்கொண்டது. இந்த வகையில் அதற்கு துணிக்குரங்கு தாய் போல மாறியது.  ஹாரி செய்த ஆய்வில் தாய், குழந்தைக்கு இடையிலான உறவு என்பது உணவு தேவைகள் மட்டும் சார்ந்தது அல்ல என்ப...

நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ

படம்
  டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ shou zi chew டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.  உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.  டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.  டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீ...

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவன...

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தி...

பாதுகாப்பில் மேம்படத்தொடங்கும் கேப்சா - புதிய மேம்பாடுகள் பற்றிய பார்வை

படம்
  கேப்சா என்பதை இணையத்தை பயன்படுத்துபவர்கள் உறுதியாக எதிர்கொண்டிருப்பார்கள். எழுத்துகளை, பாடல்களை தரவிறக்கும்போது திடீரென கேப்சா தோன்றும். சிறியதும் பெரியதுமான எழுத்துகள் வளைந்து இருக்கும். அதை சரியாக பதிவிட்டால் தரவிறக்கம் நடக்கும். இல்லையெனில் காரியம் கைகூடாது. எழுத்து, படம் என கேப்சா பல்வேறு வகையாக உள்ளது. இப்போது ஒலியைக் கூட கேப்சாவாக வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒலியைக் கேட்டுவிட்டு அதன் ஒற்றுமையை பதிவிடவேண்டும்.  கேப்சா எதற்காக, வலைதளத்தில் தகவல்களை ஹேக்கர்கள் திருடாமல் இருக்கத்தான். வலைதளத்தில் சிலர் கோடிங்குகளை பயன்படுத்தி, அதை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதை தடுக்கவே கேப்சா பயன்படுகிறது. கூகுள் ரீகேப்சா என்ற வசதியை வழங்குகிறது. இதில் ஒருவர் தனது வலைதளத்தை பதிவு செய்து உண்மையான பயனர் பற்றிய தகவல்களை அறியலாம். வலைதளத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து உண்மையானதா இல்லையா என ஆராய்ந்து கண்டுபிடிக்க கூகுள் உதவுகிறது. இன்று ஒருவர் தகவல்களை பாதுகாக்க இணையத்தில் உள்ள பாட்கள், அல்காரிகம், செயற்கை நுண்ணறிவோடு மோதவேண்டியுள்ளது.  கம்ப்ளீட்லி ஆட்டோமேட்டட் பப்ளிக் டூரிங் டெஸ்ட் டு ...

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இ...

டைம் வார இதழின் சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  டைம் புதிய கண்டுபிடிப்புகள் 2023 லெனோவா  யோகா புக் 9ஐ இந்த யோகா புக்கைப் பயன்படுத்தி வீட்டில் வேலை செய்வது எளிது. 13.3 அங்குலத்தில் இரண்டு திரைகள் கொண்ட கணினி. மேசைக்கணினி, மடிக்கணினி, டேப்லட் என எப்படி வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓஎல்இடியில் இரண்டு திரை என்பது இந்த கணினியில் புதுசு. வாங்கி பயன்படுத்துங்கள். வடிவமைப்பில் அசத்துகிற கணினி இது.  அல்காரே பாட் கடல்பாசிகள் குளம், ஏரியில் அதிகரிப்பதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. நன்மை என்றால் காற்றிலுள்ள கார்பனை அதிகம் உள்ளிழுக்கும். தீமை என்றால் அழுகிப்போன வாடையோடு நீரிலுள்ள பிற உயிரினங்களின் வாழ்வை பாதிக்கும். இதை சரி செய்ய அல்காரே ரோபோட் உதவுகிறது. பாசிகளை நீரின் அடிமட்டத்தில் கொண்டு சென்று அழுத்து கார்பனை அங்கேயே தங்கியிருக்கச் செய்கிறது. வளைகுடா நாடுகள், புளோரிடா ஆகிய பகுதிகளில் இந்தரோபோட் பல்வேறு சோதனை முயற்சிகளை செய்து வருகிறது.  ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர்  டீ, காபி தரும் மெஷின்களை பார்த்திருப்போம். அதைப்போலவே உணவுக்குப் பயன்படுத்தும் சாஸ்களை ஹெய்ன்ஸ் ரீமிக்ஸ் டிஸ்பென்சர் வழங்குகிறது....

புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?

படம்
  சீட்டா அறிமுகம் வெற்றி பெற்றதா? கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின் குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட் சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது   கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில் எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். உண்மையில் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர் பொருத்தப்ப...

ஆதிகாலத் தோழன் - புதிய மின்னூல் வெளியீடு - தரவிறக்க இணைய இணைப்பு

படம்
  ஆதிகாலத்தோழன் மின்னூலின் அட்டைப்படம் நாய்களைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவே. காரணம் அவை நமக்கு கட்டுப்பட்டவை. உத்தரவைக் கேட்டு நடக்கும் உயிரினம் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் அதன் மூளையில் என்ன நடக்கிறது, மனிதர்களோடு இணைந்து சகித்து வாழ்வது, ஏறத்தாழ குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல அதீத நட்புணர்வு காட்டுவது என இதன பின்னணியில் உள்ள விஷயங்களை ஆதிகாலத் தோழன் நூல் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இந்த நூலை வாசித்தவர்கள், தங்களது நாய்களை கவனித்து வளர்ப்பதோடு, அதனைப் புரிந்துகொள்ளவும் முயல்வார்கள் என்பது உறுதி. https://www.amazon.in/dp/B0CDM2JZG1 இந்த நூலின் சில அத்தியாயங்கள் சப்ஸ்டாக் வலைத்தளத்தில் கிடைக்கும். அதில் இணைந்து வாசியுங்கள்.நன்றி!

காவல்துறைக்கு மாற்றாக பணியாற்றும் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவன காவலர்கள் - அதிகரிக்கும் குற்றங்கள்

படம்
  பிங்கர்டான் நிறுவன பாதுகாப்பு காவலர்கள் அமெரிக்காவில் தனிநபர்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு நிறுவனங்கள்! -   நம்பிக்கையிழந்து தடுமாறும் காவல்துறை 2020ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை அதிகாரி, ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரை இனவெறி காரணமாக கொன்றார். இதற்கு அன்றைய அதிபர் ட்ரம்ப் தொடங்கி வைத்த வெறுப்புவாதம், இனவெறி, நிறவெறி என பல்வேறு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். ஆனால் நடைமுறையில் காவல்துறையில் சேர்ந்த ஆட்கள் கூட காவல்துறையில் இப்படித்தான் நிலைமையா என பணியை விட்டு வேகமாக விலகி அடுத்தவேலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஏழு சதவீதம் பேர் இப்படி காவல்துறைக்கு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பின்னாளில் விலகி விட்டதாக ஆராய்ச்சி அமைப்புகள் தகவல் கொடுக்கின்றன. பிலடெல்பியா, லாஸ்ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் காவல்துறைக்கு குற்றங்களை தடுக்க போதுமான அதிகாரிகள் இல்லை.இதனால் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, வல்லுறவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. பிலடெல்பியாவில் ஏடிஎம் கொள்ளை அடிக்கப்பட்டு ஆறுமணிநேரங்களுக்கு பிறகு காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அரசு...